• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 41

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு 41

டேய் சத்யா..என்னடா..ஏதோ அம்மா கிட்டஇருந்த கோவத்துல சொன்னேனு பாத்தா...நிஜமாகவே கிளம்பறேன்னு சொல்ற.." என முரளி அதிர்ச்சியில் கேட்க..

"ஆமா..பா..ஏற்கனவே பேசினதுல எந்த மாற்றமும் இல்ல..நாங்க கிளம்பறது தான் சரி.." என்றதும்..

"டேய்..தம்பி.. சத்யா..இந்த அம்மாவை மன்னிச்சிடுடா..நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன் டா.."

"உனக்கு பிடிக்கலனு நான் சீரியல் பாக்கறதை கூட விட்டுட்டேன்.."

"நம்ம குடும்பத்துல பிரச்சினை தந்தவங்க யார்க்கிட்டயும் பேசறது கூட இல்ல..வெளியே கூட போறதில்ல..."

"எனக்கு என் பேரனோடயே பொழுது போயிடுது..அவன் இல்லாம என்னால இருக்க முடியாது டா. எனக்கு தண்டனை குடுக்காதே.." என அழுதபடி திலகவதி பேச..

"அப்பா..தயவு செய்து அவங்களை என் கிட்ட பேச வேணாம்னு சொல்லுங்க..மொதல்ல ஹர்ஷாவை பார்த்ததும் உத்ரா கிட்ட குழந்தைக்கு யார் அப்பானு தானே கேட்டாங்க..இப்ப திடீர்னு என் பேரன்னு சொன்னா..நம்பற மாதிரியா இருக்கு..சொல்லுங்க.."

"அவங்க எனக்கு பண்ணது துரோகம்..அதை மன்னிக்க..நான் ஒண்ணும்...தெய்வம் இல்ல..சாதாரண மனுஷன்..எனக்கு கோபம் வரும்.."

"என்னால எதையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியல...மனசு பூரா ரணமா இருக்கு..இதுல இவங்க சொல்றாங்கனு நம்பி இங்கயே இருந்து என் வாழ்க்கையை மறுபடியும் கெடுத்துக்க விரும்பல.."

"போன எதை பத்தியும் பேச எனக்கு பிடிக்கல..நான் ஒரு வேளை இவங்களோட வார்த்தைகள்ல மயங்கி இங்க இருந்தா..மறுபடியும் வேற யாராவது இவங்க ப்ரெண்டா வருவாங்க.."

"அவங்க பேச்சை கேட்டு இவங்க கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம..என் வாழ்க்கையோடு விளையாடுவாங்க. இவங்களோட பலியாடு நான் தானே.." என வருந்தியவன்..சுற்றி பார்க்க..உத்ரா எங்கும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெல்லிய குரலில்..

"உங்க கிட்ட சொல்றத்துக்கு என்னப்பா..இங்க வந்ததுலேந்தே உத்ரா நிம்மதியா இல்ல..பயப்படறா...நானோ குழந்தையோ கொஞ்ச நேரம் அவ கண்ல படலேனா பதறி போறா..."

"எதையும் சொல்ல மாட்டேங்குறா..ஆனா மறுபடியும் அவளை பிரிச்சிடுவாங்களோனு ஒரு பதட்டத்துலயே எப்பவுமே இருக்கா பா..."

"நைட்ல தூங்காம உக்காந்துட்டே இருக்கா..தூக்க மாத்திரை தந்து தான் தூங்க வெக்கறேன்.. அவளை பாத்தா பாவமா இருக்கு.."

"இன்னும் கொஞ்சம் நாள் இங்க இருந்தா இவங்களை பாத்தே..இவங்க என்ன செய்வாங்களோனு யோசிச்சே..அவளுக்கு பைத்தியம் பிடிச்சிடும்.."

"அவளுக்கு மன நிம்மதி இத்தனை நாள் தான் இல்லாம போச்சு..இனியாவது அவளை நிம்மதியா சந்தோஷமா வெச்சுக்கணும்னு ஆசைப்படறேன் பா.." என்றதும்..

"சரி..டா..போறோம்னு சொல்றியே..எங்க போறேனு..குழந்தையை யார் பாத்துப்பாங்கனு தகவலாவது சொல்லு " என வருத்தமாக கேட்க..

"நான் இங்க வந்ததுமே மேகாலயாவுக்கு பேமிலியை ஷிப்ட் பண்றேன்னு சொல்லி எங்க ஆஃபீஸ்ல ட்ரான்ஸ்பர் கேட்டேன்..அது ப்ராசஸ் ஆகி வர இத்தனை நாளாச்சு....

மேகாலயாவுல எங்க போஸ்ட்டிங் வருமோனு நெனச்சு கவலைப்பட்டுக்கிட்டே இருந்தேன்..நல்ல வேளை.. ஷில்லாங்க்லயே கிடைச்சிருச்சு...இன்னும் பத்து நாள்ல ட்யூட்டில ஜாயின் பண்ணணும் பா.." என்றவன்

சில நிமிடங்கள் கழித்து "அங்கே இருந்து வரும் போது உத்ரா மெடிக்கல் லீவ் தான் போட்டுட்டு வந்தா..அதனால அவ அங்க ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணிடுவா.."

"குழந்தையை பாத்துக்க ஆள் ஏற்கனவே இருக்கறதால..அவனை பத்தின கவலையும் இல்ல.."

"இங்க நடந்தது எதையும் பத்தி சொல்லிக்காம..எனக்கு ட்ரான்ஸ்பர் வரும்..வந்தா நாங்க உடனே கிளம்பற மாதிரி இருக்கும்னு ஏற்கனவே தர்ஷீவை கொண்டு விடும் போதே..அத்தை வீட்டுலயும் சொல்லிட்டேன்.." என அவர் கேட்பதற்கு முன்பே தகவலை சொல்லியவன்..

"நாளைக்கு கிளம்பி நேரா உத்ராவோட தாத்தா வீட்டுக்கு போய் நாளைக்கு அங்க இருந்துட்டு மறுநாள் காலைல கிளம்பி கொல்கத்தா போறோம் பா..எங்க கூட கவுதம், ஸ்வேதாவும் வர்றாங்க பா...அன்னிக்கு பூரா கொல்கத்தா சுத்தி பாத்துட்டு..மறுநாள் கிளம்பி ஷில்லாங்க் போறோம்.."

"ஷில்லாங்க் போனதும் நாலு நாள் ஊரை சுத்தி பாக்கணும் ப்ளான் வெச்சிருக்கேன் பா..ட்யூட்டில ஜாயின் பண்ணா அப்பறம் வீட்டுக்கு வர கூட நேரமிருக்குமானே தெரியாது..பிசியாகிடும்..."

"என் வாழ்க்கையை தான் அம்மா அவங்க இஷ்டப்படி ஆட்டி வெச்சாங்க.."

"பாவம்..தர்ஷீ..எதையும் வெளில கூட சொல்ல மாட்டா.. தயவு செய்து அவ வாழ்க்கையிலயாவது தலையிடாம அவளையாவது நிம்மதியா இருக்க விட சொல்லுங்க..."

"அவளாவது நிம்மதியா குடும்பம் நடத்தட்டும்.. சரி பா..நேரமாச்சு..நீங்க போய் தூங்குங்க..நானும் தூங்கறேன்.." என சொல்லி விட்டு தூங்குவதற்காக போனான்.

"பாருங்க..நான் மன்னிப்பு கேட்ட பிறகும் அவன்..என்னை எப்டி பேசிட்டு போறான்.."என திலகவதி அழுகுரலில் பேச..

"நீ செஞ்சதுக்கு அவன் என்னை மதிச்சு பேசறதே அதிகம்..இதுல உன்னை பேசிட்டானு சொல்லாத.."

"நீ உத்ராவை நம்ம வீட்டு பொண்ணா நெனக்காம...யார் பேச்சை எல்லாம்..கேட்டு கொடுமை செஞ்சதுக்கு..அந்த பொண்ணா இருக்கவே குடும்பம் பிரியாம இருக்கு.."

"நானும் நீ செஞ்சதை சொல்லி காட்ட கூடாதுனு நெனச்சேன்.. ஆனா இப்ப உன் மனநிலை நான் சொல்றதை கேக்கற மாதிரி இருக்கு.."

"அதான் சொன்னேன்..சரி..போகுது போ..இனி நடந்ததை பேசி என்னாக போகுது..சொல்லு.."

"நீ போய் தூங்கு..எனக்கு தூக்கம் வரல..நான் கொஞ்ச நேரம்..டிவி பாத்துட்டு வரேன்.." என சொல்லி அவரை அனுப்பி விட்டு டிவி பார்க்க ஆரம்பித்தார்.

மறுநாள் காலை திட்டமிட்டபடி கிளம்பிய உத்ரா, ஹர்ஷாவோடு சத்யா தன் அப்பாவிடம் மட்டும் விடை பெற்று கிளம்ப..உத்ரா இருவரிடமும் எதுவும் பேசாமல் தலையசைத்து விட்டு கிளம்பினாள்.

அதே தெருவிலேயே தர்ஷினியின் மாமியார் வீடு இருக்க, அவர்கள் ஊருக்கு கிளம்புவதால் வழியனுப்ப வந்த தர்ஷினி, நிரஞ்சனிடம் தன் பெற்றோரை கவனித்து கொள்ள சொல்லி விட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

நேராக உத்ராவின் பிறந்த வீட்டுக்கு போய் அங்கு தாத்தாவோடு நாள் எல்லாம் உத்ராவை பேச விட்டு..ஹர்ஷாவை தன்னுடன் வைத்து பார்த்து கொண்டான்.

மறுநாள் அதிகாலையே அவர்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பி ஏர்போர்ட் வர அங்கு ஏற்கனவே கவுதம் கூட அபிமன்யும் தன் ட்ராலியோடு நிற்க.. அவனை பார்த்து ஆச்சரியம் அடைந்த சத்யா..."என்னடா அதிசயமா இருக்கு..நம்ம டாக்டர்க்கு காலைல எட்டு மணியே விடியற்காலை தான்..இவரை ஏன்டா நடுராத்திரிக்கு எழுப்பி கூப்பிட்டு வந்திருக்க..." என கிண்டல் செய்ய...

அதை கேட்டு அபிமன்யு சோகமாக.."நீங்க தான் அண்ணா எனக்கு சப்போர்ட்.. பாருங்க..எனக்கு கூட பிறந்ததும் சரியில்ல..அவளை கட்டினவரும் சரியில்ல.."

"நீங்களே சொல்லுங்க அண்ணா..இந்த மாதிரி நடுராத்திரி எழுப்பி கூப்பிட்டு வந்து என் தூக்கம் போய் நான் கஷ்டப்பட்டா..இந்த பச்சை குழந்தையை யார் பாத்துப்பாங்க.." என அழுகுரலில் புலம்ப..

அவன் பின்னால் வந்து தலையில் தட்டிய உத்ரா.."டேய்...போதும் டா...உன் புலம்பல்..உன்னை குழந்தைகளை பாத்துக்க தான் கூப்பிட்டு வந்திருக்கு..புலம்ப இல்ல.." என திட்டியபடி அவன் கைகளில் கவுதமின் குழந்தையை தர..

குழந்தையை கைகளில் வாங்கியவன் "பாருடா..குட்டிம்மா..உங்கம்மாக்கு என் மேல பாசமே இல்ல..நான் ஒரு ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட்....ஒரு எலிஜிபிள் பேச்சிலர்.."

"என்னை போய்...பேபி சிட்டிங் பண்ண வெச்சுட்டா..அந்த ராட்சசி..நீயாவது அவளை மாதிரி இல்லாம நல்ல பொண்ணா வளரு...தம்பியை கண் கலங்காம பாத்துக்கோ.." என சொல்லி மடியில் உட்கார வைத்து கொண்டான்.

"பாருங்க அண்ணா..இவனோட அரட்டலை..அங்க வீட்டுல என்னை நம்பி குழந்தைகளை அனுப்பினா...நான் தொலைச்சிடுவேனாம்.."

"இவன் எங்க கூட வர்றதே குழந்தைகளை பத்திரமா பாத்துக்க தான்னு சொல்லிட்டு..இங்க வந்து அப்டியே பேச்சை மாத்தி பேசறான்.." என ஸ்வேதா குறை சொன்னாள்.

நடப்பதை அமைதியாக பார்த்து சிரித்தபடி இருந்த உத்ராவை பார்த்து சத்யா..

"மனு..உன் வாய் அடங்கவே அடங்காதா டா..அமைதியா இருக்க..என் பொண்டாட்டியை பாத்து கத்துக்க.." என அவளை புகழ்ந்தவனை பார்த்து முறைத்து ஸ்வேதாவை பார்த்தவன் உடனே... "சரி..மா..விடு..நாம என்ன புதுசாவா மனுவை பாக்கறோம்..அவன் அப்படி தான்.."என சத்யா அவளுக்கு சமாதானம் சொல்லி கொண்டு இருக்கும் போதே கொல்கத்தா ப்ளைட் பேசன்ஜர்க்கு அழைப்பு வர..எல்லாருமாக கிளம்பி போய் ப்ளைட்டில் ஏறி உட்கார்ந்ததும் குழந்தைகள் அமைதியாக இருக்க, அபிமன்யுவின் அலம்பல்கள் தான் அதிகமாக இருந்தது..அவனை சமாளித்து ஒருவழியாக கொல்கத்தா போய் சேர்ந்தார்கள்.

அன்று திட்டமிட்டபடி கொல்கத்தாவை சுற்றி பார்த்து விட்டு அன்றிரவு அங்கு தங்கியவர்கள் மறுநாள் காலை அதிசயமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ப்ளைட் கிளம்ப..அதில் ஏறி ஷில்லாங்க் போய் சேர்ந்தார்கள். (தொடரும்

இருந்த கோவத்துல சொன்னேனு பாத்தா...நிஜமாகவே கிளம்பறேன்னு சொல்ற.." என முரளி அதிர்ச்சியில் கேட்க..

அன்று திட்டமிட்டபடி கொல்கத்தாவை சுற்றி பார்த்து விட்டு அன்றிரவு அங்கு தங்கியவர்கள் மறுநாள் காலை அதிசயமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ப்ளைட் கிளம்ப..அதில் ஏறி ஷில்லாங்க் போய் சேர்ந்தார்கள். (தொடரும்)
 
Author: Subha Balaji
Article Title: சுயம்பு 41
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom