• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 28

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-28

அந்த போட்டோவில் உத்ரா யாரோ ஒரு ஆளுடன் மிக நெருக்கமாக இருப்பது போல எடுக்கப்பட்டிருந்தது. அதையே குழப்பமாக பார்த்த உத்ராவை நோக்கி திலகவதி.."என்னடி பதிலே காணோம்..என்ன சொல்லி என் புள்ளையை ஏமாத்தலாம்னு யோசிக்கறியா.." என கேலியாக கேட்க..

"யோசிக்கல..இந்த போட்டோல இருக்கறது யாரா இருக்கும்.. யார் இப்டி கேவலமா போட்டோஷாப் செஞ்சிருப்பாங்கனு..யோசிக்கறேன்.."

"இந்த போட்டோ எங்க கல்யாணம் நடந்தப்ப..சத்யா சொல்லி நானும், கவுதம் அண்ணாவும் ஒண்ணா எடுத்துக்கிட்டது. இதுல இந்த ஆளை யார் ஒட்ட வெச்சிருப்பாங்க..." என தெளிவாக கேட்டாள்.

அதை கேட்டதுமே பெருங்கோபமான திலகவதி "நல்லா இருக்கே..நீ சொல்றது..யாருனே தெரியாத ஒருத்தன் கூட நீ நெருங்கி நின்னு போட்டோ எடுத்துப்ப..அதை யாருனு கேட்டா..கவுதம் கூட தான் போட்டோ எடுத்தேன்னு சொல்லி சமாளிப்ப..."

"எத்தனை தடவை என் பையன் கிட்ட சொல்லி இருப்பேன்...தாயில்லாம கண்டவங்களும் வளர்த்து தத்தாரியா இருக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணாதே..அப்பறம் கஷ்டப்படுவனு படிச்சு படிச்சு சொன்னேனே..கேட்டானா.." என தன் புலம்பல்களை ஆரம்பிக்க..

"அத்தை தேவையில்லாம பேசாதீங்க..நான் உங்களுக்கு குடுக்கற மரியாதைல எதாவது குறை வெச்சிருக்கேனா...சொல்லுங்க...

சத்யா சொன்ன ஒரே வார்த்தைக்காக நீங்க என்ன சொன்னாலும் நான் பதில் பேசறது கூட இல்ல...அமைதியா போயிடறேன்.."

"அதுக்காக நீங்க என்ன வேணுமானா பேசலாம்னு இருக்கா..என்னை பேச மட்டும் உங்களுக்கு ரைட் இருக்கு...என்னை பெத்தவங்க...வளர்த்தவங்களை எல்லாம் பேச உங்களுக்கு எந்த ரைட்டும் கிடையாது.."

"இனி நீங்க என்னை ஏதாவது பேசினா..பதிலுக்கு நானும் பேச வேண்டியதா போயிடும்..நியாபகம் வெச்சுக்கோங்க..அப்பறம் உங்களை அசிங்கப்படுத்திட்டதா நீங்க புலம்ப கூடாது.."என தீர்மானமாக சொல்லி விட்டு தங்களறைக்கு போனாள்.

உத்ராவின் பேச்சுக்களால் தன்னை அவள் உதாசீனம் செய்து விட்டதாக நினைத்த திலகவதி உடனே தன்னுடைய படை தளபதிகளான தன் தங்கை.. வந்தனா..அவளுடைய அம்மா..என போன் செய்து சத்யா ஊரில் இல்லாததால் உத்ரா தன்னோடு சண்டை போட்டு கேவலமாக பேசி அவமானம் செய்ததாக புலம்பி உடனே அவர்களை கிளம்பி தங்களது வீட்டுக்கு வர சொல்லி அழ..சரி..இன்னிக்கு பொழுது சீரியல் பாக்காம..சீரியல் பாத்த மாதிரி நல்லா போயிடும்னு என ஆனந்தமாக நினைத்து அவர்களும் கிளம்பி வந்தார்கள்.

அவர்கள் வருவதற்குள் உத்ராவின் பெரியம்மா மாலினிக்கு போன் செய்த திலகவதி அந்த பக்கத்தில் போனை எடுத்ததும் "சம்பந்தி நல்லா இருக்கீங்களா.." என அன்பாக விசாரித்தார்.

திடீரென சம்பந்தி என்று அழைக்கவே மாலினி "பேசறது யாரு.." என மிரட்டலாக கேட்க..

அதை கேட்டதுமே கொஞ்சம் பணிவாக "நான் தான் சம்பந்தி...சத்யாவோட அம்மா...உத்ராவோட மாமியார்.." என்றதும்..

"சரி..எதுக்கு எனக்கு போன் பண்ணீங்க.." என்ற வேண்டா வெறுப்பாக கேட்ட மாலினியிடம் திலகவதி..

"சம்பந்தி...நீங்க தான் அந்த வீட்டுல இருக்கிற மூத்தவங்க..பொண்ணுங்க எல்லார்க்கும் பெரியவங்க..." என நைச்சியமாக சொல்ல..

"இதை சொல்ல தான் மெனக்கெட்டு எனக்கு போன் பண்ணீங்களா..." என மறுபடியும் மாலினி உதாசீனமாக பேச..

"இல்ல...சம்பந்தி...நான் பேச வந்தது உத்ராவை பத்தி..."என சொல்லி நடந்ததை சொல்லி...அவளை உடனே தங்களது வீட்டுக்கு வர சொல்ல..மாலினியும் தனக்கு உத்ராவை அவமானம் செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட விரும்பாமல் மிக ஆனந்தமாக வேகமாக கிளம்பி வந்து சேர்ந்தாள்.

அவளை வாசலுக்கு சென்று வரவேற்ற திலகவதி உள்ளே அழைத்து வந்து ஹால் சோபாவில் உட்கார சொல்ல... அங்கு ஏற்கனவே திலகவலியின் தங்கை ராதா, வந்தனா, அவள் அம்மா என ஆட்கள் ஏற்கனவே வந்து உட்கார்ந்திருந்தனர்.

உடனே திலகவதி ஏதும் தெரியாத அப்பாவி போல..."உத்ரா...அம்மா உத்ரா...கொஞ்சம் கீழே வரீயா மா.." என அவர்களுக்காக அன்பாக அழைப்பது போல நடிக்க..

பாவம் அவருடைய குரல் தங்களது அறைக்கதவை மூடிக்கொண்டு படுத்திருந்த உத்ராவை எட்டவில்லை. உடனே கொஞ்சம் சப்தமாக உத்ரா...உத்ரா என அழைத்தும் தன்னை இதுவரை இந்த வீட்டில் எந்த பெண்ணும் அழைத்ததில்லை என்பதால் இது ஏதோ பிரம்மையாக இருக்கும் என அதை கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்.

நடப்பதை பார்த்த வந்தனாவின் அம்மா "பாத்தீங்களா சம்பந்தி..இந்த அநியாயத்தை...அமைதியா இருக்கே...நல்ல பொண்ணுனு நெனச்சு திலகாக்கு நல்ல மருமக வந்திருக்கானு நான் சந்தோஷப்பட்டேனே...ஆனா அந்த பெண்ணுக்கு இவ்ளோ துணிச்சல் இருக்கு..எப்ப பாரு மாமியாரை அலட்சியம் செய்வானு இப்ப தான் தெரியுது..."

"திலகா எத்தனை தடவை கூப்பிடறா...வரல..அட ஒரு பதில் சொல்றதுக்கு கூட இந்த பொண்ணுக்கு வலிக்குதா..பாவம் அவ..அதிர்ந்தே பேச தெரியாதவளுக்கு இப்டி பஜாரியாவா ஒரு மருமக வந்து வாய்க்கணும்.."

"படிச்சு..டாக்டரா இருந்தா...இப்டி தான் இருப்பாங்களா..மட்டு மரியாதையே தெரியாதா...பெரியவங்களுக்கு குடுக்க வேண்டிய கவுரவத்தை குடுக்க வேணாமா..."

"என் பொண்ணும் தான் இருக்கா..யார் கிட்டயாவது மரியாதை குறைவா பேசி பாத்திருக்கீங்களா...இது என்ன வளர்ப்போ..ரொம்ப நல்லா இருக்கு..."

"இதே மாதிரி என் பொண்ணு செஞ்சு இந்த இடத்துல நான் இருந்திருந்தா...அங்கயே என் பொண்ணை வெட்டி போட்டுடுவேன்....எனக்கு மானம், மரியாதை..கவுரவம் ரொம்ப முக்கியம்.."என உத்ராவை அவமானப்படுத்தியதோடு இல்லாமல் தன் பெருமைகளையும் நடுவில் சொல்லி கொண்டார்.

அவர் பேச்சில் கோபம் கொண்ட மாலினி "உத்ரா..ஏய்..உத்ரா" என கத்த.. அந்த குரலை கேட்டதும் பெரியம்மாவின் குரல் போல தோன்றி அதிர்ந்து போய் ரூம்க்கு வெளியே வந்து பார்க்க..அங்கு கோபமாக நின்று கொண்டு இருந்த தன் பெரியம்மாவை பார்த்து வேகமாக ஓடி வந்தவள்

"பெரியம்மா..வாங்க..வாங்க..எப்ப வந்தீங்க.."என அன்பாக அவள் கைகளை பிடித்து கேட்க..

பிடித்த கைகளை உதறி விட்டு "ச்சீ...உன்னை பார்க்க யாரு வந்தா..நான் உன்னல பாக்கவே கூடாதுனு இருந்தா..நீ பண்ற வேலைகளால உன்னை மறுபடியும் பாக்கற மாதிரி ஆகிடுச்சு.." என வெறுப்பாக சொல்ல..

அதில் குழப்பமானவள் "என்னாச்சு பெரியம்மா..எனக்கு எதுவும் புரியலயே..."என கேட்க

"என்னது..புரியலயா..அதான் நல்லபடியா ஒருத்தனுக்கு உன்னை கல்யாணம் செஞ்சு வெச்சாச்சுல்ல..ஒழுங்கா அவன் கூட வாழாம..எதுக்கு இன்னொருத்தனோட திரியற.." என மாலினி வார்த்தைகளில் அக்னியை வாரி இறைக்க..

அதில் அதிர்ந்தவள் "என்ன பெரியம்மா சொல்றீங்க..நான் உங்க வீட்டு பொண்ணு..யாரோ சொல்றதை நம்பி நான் தப்பா நடந்திருப்பேன்னு என்னை போய் நீங்க சந்தேகப்படலாமா.."என வேதனையோடு கேட்க..

"அதான் ஆதாரபூர்வமா எல்லாம் இருக்கே...சம்பந்தி அம்மா என்னை போன்ல கூப்பிட்டு உன்னை பத்தி சொல்லி வருத்தப்பட்டு அந்த போட்டோவை எனக்கு அனுப்பினாங்க..அதை பார்த்ததுமே எனக்கு கூசி போச்சு.."

"உனக்கு கொஞ்சம் கூட அருவெறுப்பில்லையா..நீ பண்ண வேலைக்கு..உன்னை எல்லாம் கண்ட துண்டமா வெட்டி போடணும்.." என மாலினி தாறுமாறாக கத்தி ஆரம்பித்தாள்.

அவளை சமாதானம் செய்ய உத்ரா முயல...திலகவதி தங்கள் குடும்பத்தின் உயர்வை பற்றி, உத்ராவின் நடத்தையால் அது சீரழிய போவது பற்றி புலம்ப ஆரம்பித்தார்.

எல்லா பக்கமும் தாக்குதல் வர எதை சமாளிப்பது என புரியாமல் விழித்த உத்ரா..அடுத்த நிமிடம் தன்னை நிதானித்து கொண்டு "கொஞ்சம் நிறுத்தறீங்களா.."என அவர்களை விட அதிகமாக உரத்த குரலில் கத்தி விட்டு..

"இங்க பாருங்க..நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க.. இந்த போட்டோல இருக்கிற ஆளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...இதுவரை இந்தாளை நான் பாத்தது கூட இல்ல..."

"என்னை பிடிக்காத யாரோ போட்டோஷாப் பண்ணியிருக்காங்க..இதை வெச்சு நீங்க என்னை தப்பா பேசாதீங்க பெரியம்மா..

எதுவா இருந்தாலும் என் புருஷன் என்னை கேட்கட்டும்.. நான் அவர்க்கு பதில் சொல்லிக்கறேன்....இது எங்க ரெண்டு பேருக்குள்ள போயிடும்.."

"என் புருஷனை பத்தி எனக்கு நல்லா தெரியும்... என்னை எந்த காலத்துலயும், எந்த சூழ்நிலையிலும் அவர் சந்தேகப்பட மாட்டார். அதனால தேவையில்லாம நீங்க இதை வெச்சு குழம்பி எதுக்கு உங்க மனநிம்மதியை கெடுத்துக்கிட்டு வேதனையை வரவழிச்சுக்கறீங்க.."

"அதனால இதை விட்டுட்டு அப்டியே அமைதியா விட்டுட்டு நீங்க போய் நிம்மதியா இருங்க..எதுவா இருந்தாலும் சத்யா வந்ததும் அவர் கிட்ட சொல்லிட்டா போதும்...அவர் பாத்துப்பார்.." என நம்பிக்கையாக சொல்லி அவர்களை அமைதிப்படுத்திவிட்டு எல்லாருக்கும் காபி கலந்து எடுத்து வர சமையலறைக்கு போனாள்.(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 28
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom