• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 27

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-27

சத்யாவின் ஒதுக்கத்தை தாங்க முடியாத உத்ரா சோர்ந்து போனாள். எத்தனை தடவை மன்னிப்பு கேட்டும் அவன் மனமிறங்கி மன்னிக்காமல் கோபமாகவே இருந்தாலும், அதை அவனின் பெற்றோருக்கு தெரியாது பார்த்து கொண்டு சத்யாவிடம் சாதாரணமாக பேசி சகஜமாக இருந்தாள். அவனும் தன்னுடைய அப்பா அம்மாவுக்கு எதிரில் அவளிடம் முகத்தை திருப்பாமல் நல்லபடியாகவே இருந்தான்.

சில நாட்களுக்கு பின் காலையில் அவசரமாக கிளம்பி கொண்டு, கோபமாக ஏதோ போன் பேசியபடி இருந்த சத்யா சாப்பிட உட்கார அவனுக்கு பரிமாற வந்த உத்ராவை தடுத்தவன்.."இனி நீ எனக்கு பரிமாற வேணாம்..அதுக்கு நீ எனக்கு விஷத்தை குடுக்கலாம்..."என சொற்களால் சுட்டவன்... தன் அம்மாவை கூப்பிட்டு...

"மா...இங்க பாருங்க..இனி இவ வீட்டுல சமையல் செய்ய கூடாது..எனக்கு சாப்பிட பரிமாற கூடாது..உங்களால முடிஞ்சா...நீங்க செய்ங்க..இல்ல நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறேன்.." என கத்தி விட்டு கிளம்பினான்.

அவன் கிளம்பும் வரை அமைதியாக இருந்த திலகவதி, அவனுடைய கார் கிளம்பியதும் உத்ராவை அழைத்து "என்னாச்சு...ஏன் இப்டி பேசிட்டு போறான்...நீ என்ன பண்ண..." என தன் விசாரணையை ஆரம்பித்தார்.

அவளோ பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க..அதில் கோபமடைந்தவர் "ஏய்..இங்க பாரு...உன்னை தான் கேக்கறேன்...எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டியோ.."

"எல்லாம் படிச்சிருக்கோம்னு திமிர்..டாக்டர்னு கர்வம்...எல்லாரையும் அலட்சியமா நடத்தறது... நீ பணக்காரியானா...அது உன்னோட.."

"உன் திமிரை காட்டறத்துக்கு இந்த வீட்டுல இடமில்ல...வேற எங்கயாவது இதை வெச்சுக்க..." என தொடர்ந்து அவளை வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார்.

எதற்கும் பதில் சொல்லாமல் இருந்தவளை பார்த்த முரளி.."மா..உத்ரா..நேரமாச்சுல்ல..நீ மேல போய்..ரெடியாகி கிளம்பு மா.." என சொல்லி அனுப்பியவர்..

"திலகா...உன் பையனை பத்தி உனக்கு தெரியாதா...இன்னிக்கா புதுசா பாக்கற...இல்ல அவன் தான் இன்னிக்கு புதுசா கத்திட்டு போறானா..சொல்லு.."

"ஏன் உன் கிட்ட கோவிச்சுக்கிட்டு அவன் பேசாம...வீட்டுல சாப்பிடாம இருந்ததே இல்லையா...இங்க பாரு திலகா...அவன் ஏன் கத்தினான்னு நீ உன் புள்ளையை தான் கேக்கணும்...மருமகளை இல்ல.."

"அதுவும் இல்லாம உத்ரா அவன் பொண்டாட்டி..காலைல திட்டுவான்..சாயந்திரம் கொஞ்சுவான்...இது அவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்கற விஷயம்..உனக்கெதுக்கு இந்த சமாச்சாரம்..நியாயமா பாத்தா நீயே இதுல தலையிட கூடாது.."

"நாம பெரியவங்களா அவங்க நம்ம கிட்ட வந்து சொல்றவரைக்கும் கண்டும் காணாமலும் இருக்கணும்..எதுவா இருந்தாலும் அவங்க தான் பேசி தீர்த்துக்கணும்.."

"அதுவும் இல்லாம...அவளுக்கு பேர் இல்ல...அதென்ன அதிகாரமா ஏய்னு கூப்பிடற...இது கொஞ்சம் கூட நல்லா இல்ல...எல்லாரோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு...சொல்லிட்டேன்.." என்றவர்..

"இவ்ளோ சொல்றேனே..எங்காவது கவனிக்கறியா..எப்பவும் போல நான் சொல்றது எல்லாம் உனக்கு அலட்சியம் தான்...ச்சே..உங்கிட்ட மனுஷன் பேசுவானா.." என சொல்லி கத்தி விட்டு "இனி இங்க இருந்தா நமக்குள்ள சண்டை தான் வரும்..நான் சபேசன்..வீட்டுக்கு போயிட்டு வரேன்.." என அங்கிருந்து கிளம்பினார்.

அவர் கிளம்பியதுமே திலகவதி தன்னுடைய மொபைலை எடுத்து தன் தங்கை சாந்தி, வந்தனா அவளுடைய அம்மா என எல்லாரையும் அழைத்து வீட்டில் நடந்ததை சொல்லி..."அந்த உத்ரா நான் கேள்வி கேட்டா பதிலே சொல்லாம என்னை அவமானப்படுத்தறா..

"என் வீட்டுக்காரர் எனக்கு என்னிக்கு ஆதரவு கிடையாது...நான் என்ன செய்வேன்.. சொல்லு.." என அழ..அவர்கள் அவரை அழ வேண்டாம் என சொல்லியவர்கள் தாங்கள் உடனே அங்கு வருவதாக சொல்லி போனை வைத்தார்கள்.

அவர்கள் வருவதற்குள் உத்ரா கிளம்பி போய் விடவே..வீட்டில் இருந்த திலகவதியின் புலம்பல்களை தவிர்க்க முடியாமல் அங்கேயே இருந்து கேட்டு விட்டு, தங்களால் ஆனவரை திலகவதியை சமாதானம் செய்து விட்டு, அவர்கள் கொஞ்ச நேரத்தில் விட்டால் போதும் என அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார்கள்.

காரில் போகும் போது உத்ராவின் போனுக்கு ஏதோ வாட்ஸ்அப் மேசேஜ் வர காரை ஓரமாக நிறுத்தி விட்டு மொபைலை எடுத்து பார்க்க..அதில் அவளும் அபிமன்யுவும் சின்ன வயதில் தோள்களில் கை போட்டு கொண்டு சிரித்தபடி இருந்த போட்டோ வந்திருந்தது.

அனுப்பியவரை பார்க்க வெறும் நம்பர்..வர..டிஸ்பிளே போட்டோவும் இல்லாததால் யாரோ அவளின் நண்பர்கள் தான் விளையாடுவதாக நினைத்து போனை பக்கத்தில் வைத்து விட்டு கிளம்பினாள்.

அதன் பின் தினமும் அவளும் அபிமன்யுவும், மற்ற நண்பர்களோடு அவள் எடுத்து கொண்ட போட்டோக்கள் வர ஆரம்பித்தது. அந்த போன் நம்பருக்கு அழைக்க..அது ஸ்விட்ச் ஆஃப் என வரவே..கொஞ்சம் குழம்பியவள்.. சரி இது யாரோ நம்மை தெரிந்தவர்கள் விளையாட்டு என தப்பாக கணித்து அதை யாரிடமும் சொல்லாமல் அலட்சியப்படுத்த ஆரம்பித்தாள்.

சில தினங்களுக்கு பின் அன்று அதிகாலையிலேயே சத்யா அவளை அழைத்தவன் "இங்க பாரு உத்ரா..எனக்கு உன் முகத்தை பாக்க கூட பிடிக்கல..ஆனா என்ன பண்றது..உன் மேல நான் பாசம் வெச்சிட்டேனே..."

"நல்லா கேட்டுக்கோ டி..இன்னிக்கு மதியம் ஒரு முக்கியமான கேம்ப் விஷயமா எங்க டீமோட நான் ஆந்திரா போக போறேன்..திரும்பி வர ஒரு வாரம் ஆகும் டி..."

"என்னோட போன் ஒரு வாரமும் ஸ்விட்ச் ஆப்ல தான் இருக்கும்..உனக்கு எதாவது ரொம்ப அவசியமா என்னை கான்டெக்ட் பண்ணணும்னா..இங்க இருக்கிற சித்ரேஷ்க்கு நீ போன் பண்ணி சொல்லு..அவன் எப்டியாவது எங்களை ரீச் பண்ணி எனக்கு தகவல் சொல்லிடுவான்.."

"ஜாக்கிரதையா இரு..உன்னை நல்லா பாத்துக்க..நேரத்துக்கு சாப்பிடு..வீட்டுல இருக்கிறவங்களை நல்லா பாத்துக்க..எனக்கு உன்னோட பேச பிடிக்கல..ஆனா உன்னை விட்டுட்டு போக மனசே வரல டி.."

"ச்சே..நான் ஏன் உன்னை பிடிச்சு..போராடி கல்யாணம் பண்ணணும்..இப்ப கஷ்டப்படணும்..சொல்லு.."

"எதையோ விட்டுட்டு போறோனோனு கஷ்டமா இருக்கு..என்னமோ.. நடக்க போகுதுனு எனக்கு பயமா இருக்கு.." என விளக்கமாக தன் நிலையை சொன்னவனை உத்ரா கண்களில் நீர் திரள பார்த்தாள்.

அவனின் அருகில் சென்று அமர்ந்து எதுவும் பேசாமல் தோள்களில் சாய்ந்து கொண்டவளிடம் அவனும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

போன் அடிக்கவே தன் நிலைக்கு வந்தவன்.."சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும்.. ஜாக்கிரதை.." என சொல்லி வீட்டில் இருந்து கிளம்பினான்.

சத்யா கிளம்பி இரு தினங்கள் வீடு அமைதியாக இருக்க..அது பொறுக்க முடியாமல் மறுநாள் காலையே திலகவதி தன் புலம்பல்களை ஆரம்பிக்க..அவரை என்ன என கேட்ட முரளியிடம் தன் போனை காண்பித்து...

"கடவுளே...இங்க பாத்தீங்களா..நான் என்ன பண்ணுவேன்..இப்டில்லாம் அக்கிரமம் நடக்கணுமா..." என உச்சஸ்தாயில் கத்த...அதில் பயந்து போய் வேகமாக இறங்கி வந்த உத்ரா "அத்தை...

என்னாச்சு..உடம்பு ஏதாவது சரியில்லையா.."என பதறியபடி கேட்க..

"உடம்புக்கு என்ன அது நல்லா கல்லு மாதிரி இருக்கு...ஆனா இந்த குடும்ப மானம் தான் போயிடும்.. போல இருக்கே.." என மறுபடியும் கத்த..

"ப்ளீஸ் அத்தை..கொஞ்சம் இங்க ரிலாக்ஸ்க்டா உக்காருங்க..அதுக்கு பிறகு என்னாச்சுனு சொல்லுங்க..." என அவரை சமாதானம் செய்ய முயல..

"ஏய் இங்க பாருடி... என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்யாதே..உன்னை பத்தி என் பிள்ளைக்கு தெரிஞ்சு போயிடவே தான் அவன் ஒதுக்கி வெச்சிட்டான்..விட்டுட்டு போயிட்டான்.." என அவளை தொடர்ந்து குற்றம் சாட்ட

"அத்தை..இங்க பாருங்க...கொஞ்சம் அமைதியா இருங்க..என்னாச்சுனு சொல்லுங்க.."என அப்போதும் அவரிடம் பொறுமையாக கேட்ட உத்ராவிடம் தன் மொபைலை நீட்டியவர் "பாரு..நல்லா பாரு..உன் யோக்யதையை பாரு.."என சொல்ல..

அவர் காண்பித்த போட்டோவை பார்த்த உத்ரா பெருங்குழப்பத்தில் ஆழ்ந்து பதில் சொல்லாமல் நின்றாள். (தொடரும்
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 27
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
அட கடவுளே அவ மொபைல்கு தான் தெரியாத நம்பர் ல இருந்து மெசேஜ் வருதுன்னா இப்போ அவ மாமியார் மொபைலயும் வருதா 😳😳😳😳😳😳😳
 
Top Bottom