• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 24

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-24

பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் போய் சேர்ந்த உத்ரா ரிசப்ஷனில் ஏதாவது எமர்ஜென்சி கேஸ் இருக்கா என கேட்க..

ரிசப்ஷனிஸ்ட் "ஆமா மேம்...ஒரு டெலிவரி கேஸ் ...டாக்டர் விஜியோட பேஷண்ட்.. என்க

"இல்ல..ஏதோ ஆக்ஸிடெண்ட் கேஸ் வந்திருக்கறதாக எனக்கு போன் வந்ததே.." என சந்தேகமாக கேட்க..

"எனக்கு தெரியல மேம்..நான் இப்ப தான் டியூட்டிக்கு வந்தேன்..கொஞ்சம் இருங்க..கேஷ்வாலிட்டில கேக்கறேன்..."என சொல்லி போன் செய்ய போன ரிசப்ஷனிஸ்டிடம் போன் செய்ய வேண்டாம்.. தானே நேரில் சென்று பார்ப்பதாக சொல்லி உத்ரா அங்கு சென்றாள்.

கேஷ்வாலிட்டியில் பார்க்க..அங்கு எப்போதும் போலவே இருக்க..அங்கிருந்த நர்ஸிடம் தன் சந்தேகத்தை கேட்க...அவர் நேற்றிரவில் இருந்தே எந்த ஆக்ஸிடெண்ட் கேஸும் வரவில்லை என தன்னிடம் இருந்த ரெக்கார்ட்டை காட்ட அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தவள் குழம்பி போனாள்.

நடந்த விஷயங்களை பொறுமையாக உட்கார்ந்து யோசிக்கும் போது தான் அவசரத்தில் பேஷண்ட் பெயர், எங்கு விபத்து நடந்தது என எதையுமே வந்தானாவிடம் கேட்காத தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டு வந்தனாவுக்கு போன் செய்ய...அவள் போன் எடுக்காமல் சில தடவைகள் ரிங் போய் கட் ஆனது.

மறுபடியும் அவளை தொடர்பு கொள்ள முயலும் போது ஸ்விட்ச் ஆப் என வர அதில் அதிரந்தவள் என்ன ஆனதோ...யாரை தொடர்பு கொள்வதோ என பதட்டம் அடைந்தாள்.

"மாமியாரிடம் போன் செய்து வந்தனா நம்பர் கேட்க...ஏன் எதற்கு என ஆயிரம் கேள்விகள் கேட்டு அவர் குடுத்த நம்பரும் தன்னிடம் இருப்பதே என அறிந்து நொந்து போனாள். சோர்வில் எதையும் யோசிக்க முடியாது தன்னறைக்கு போய் பக்கத்தில் இருந்த நர்ஸிடம் தான் ஓய்வு எடுப்பதாக சொல்லி விட்டு டேபிளில் படுத்தவள், அவள் போன் தொடர்ந்து அடித்தபடி இருந்ததை கூட உணர முடியாது அப்படியே தன்னை மறந்து தூங்கி போனாள்.

வீட்டில் இருந்து உத்ரா கிளம்பியதும் உடனே தன் போனை எடுத்து முதல் நாள் கரெண்ட் கட் ஆனதால் விடுபட்ட சீரியல்களை பார்க்க ஆரம்பித்த திலகவதியிடம் முரளி "ஆரம்பிச்சிட்டியா...ஒரு வருஷம் கழிச்சு பாத்தாலும் கதை ஒரு இன்ச் கூட நகர்ந்திருக்காது..." என கேலியாக சொல்லி..

"இதை மதியத்துக்கு சமையல் செஞ்சுட்டு அப்பறமா பாக்கலாமே..."என்றதும்

அதை கேட்டு ஆக்ரோஷம் பொங்க.."உங்களுக்கு வேற வேலை இல்லையா..இந்த கதை பதினொரு மணிக்கு வர போகுது..நானே என்னாச்சோனு பதறிட்டு பாத்தா..நக்கலா பண்றீங்க..."என்க..

"அதில்ல...திலகா..நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு...நீயும் காலைல சீரியல் பாக்க ஆரம்பிக்கற..அது ராத்திரி வரைக்கும் தொடருது.."

"இப்டி தொடர்ந்து பாத்தா...உன் கண் என்னாகும் சொல்லு...அதை விட நீ ஆரம்பத்துல இருந்தா மாதிரி தான் இப்ப இருக்கீயானு யோசி..."

"மொதல்லலாம் எவ்ளோ பாசமா எங்களை பாத்துப்ப...இப்ப.. காலைல ஏதோ ஒரு டிபன்...மதியத்துக்கு எப்படியும் சத்யா வரமாட்டான்னு நீயா தீர்மானம் செஞ்சுட்டு ஒரு கலந்த சாதம், அவன் வந்தாலும் அதே தான்... பாவம் ராத்திரி, பகல் பாக்காம வேலை வேலைனு வெளியே சுத்தறவனுக்கு வாய்க்கு ருசியா நல்ல சாப்பாடு கூட இந்த வீட்டுல கிடையாது.."

"அதான் போகுது..நைட் சாப்பாடுனு நாய்க்கு வெக்கற மாதிரி இட்லி வெச்சிடற...அது இல்ல தோசைனா என்னையே உனக்கும் சேத்து செய்ய சொல்லிடற.."

"நான் உனக்கு செய்ய மாட்டேன்னு சொல்லல..ஆனா நீ சீரியல் பாத்துட்டு..தினமும் சரியா சமைக்காம, சாப்பிடாம இருந்து உன் உடம்பை கெடுத்துக்கற....அதான் கஷ்டமா இருக்கு.."

"எல்லாத்துக்கும் மேல தினமும் யார் குடும்பத்தை கெடுக்கறதுனு பாத்து பாத்து உன் மனநிலையே மாறிடுச்சு..நீ நடந்துக்கறது மனுஷங்க கிட்ட பேசறது எல்லாம் நெகடிவா தான் இருக்கு.."

"இது எல்லாம் நீ பாக்கற..சீரியல்களோட தாக்கம் தான், அதனால குடும்பமே ஒடைஞ்சிடும்னு நான் அடிக்கடி சொன்னாலும், உன்னை கண்டிச்சாலும் நீ அதை சட்டை பண்ண மாட்டேங்குற.."

"உத்ராவை நீ பாக்கற சீரியல்ல வர்ற மாமியார் மாதிரி கொடுமை படுத்தற...உன் பேச்சை எல்லாம் சத்யா வரைக்கும் கொண்டு போகாம அந்த பொண்ணு பொறுமையா இருக்கு..."

"அவனுக்கு தெரிஞ்சா...என்னாகும்னு கொஞ்சம் யோசி...அவன் பொண்டாட்டியை நீ பேசினதுக்கு நம்மள படு கேவலமா கேட்பான்.."

"நம்ம நல்ல நேரம் அவ நல்ல பொண்ணா இருக்கவே போச்சு...இதே உன் ப்ரெண்ட் பொண்ணு மாதிரி இருந்தா...நாம நடு தெருவுக்கு போக வேண்டியது தான்" எனும் போதே..

"அடடாடா...எங்க உங்க காலட்சேபத்தை ஆரம்பிக்கலையேனு பாத்தேன்.. நீங்க ஆம்பளைங்க...வெளில தெருவுல அடிக்கடி போயிடறீங்க... நாங்க அப்டியா...எப்ப பாரு வீட்டுல வேலைகளை செஞ்சு தானே எங்க பொழப்பு போகுது.."

"நான் கொஞ்சம் நேரம் நிம்மதியா பொழுது போக...டிவி பாத்தா உங்களுக்கு பொறுக்கல.." என அவரை வெட்டி பேச..

"இல்ல திலகா..உன்னை டிவி பாக்க வேணாம்னு நான் சொல்லலையே..நேஷனல் ஜியாகரபி பாரு..மிருகங்களை பத்தி நமக்கு தெரியாத பல தகவல்கள் வருது..அதுல உலக விஷயங்களை தெரிஞ்சுக்க நிறைய வாய்ப்பு இருக்கு...."

"இது இல்ல..நம்மை சுத்தி நடக்கறதை தெரிஞ்சுக்க.நிறைய டிவிங்க இருக்கு..பாக்க, ரசிக்க எத்தனை விஷயங்கள் இருக்கு.."

"இது எல்லாத்தையும் விட்டுட்டு எதுக்கு சீரியல் பாத்து கூடவே கிரிக்கெட் மேட்ச் மாதிரி கமெண்ட்ரி குடுத்துட்டு, உன் மன நிம்மதியை கெடுத்துக்கிட்டு குடும்பத்தோட அமைதியையும் கெடுக்கற..." என முரளி பொறுமையாக கேட்டு..

"உனக்கு தெரியாத இன்னொரு விஷயம் சொல்றேன்...நம்ம சபேசன் இருக்கான்ல்ல...அவன் வீட்டுல இந்த சீரியல் பாக்கறதுல அவனோட அம்மாக்கும் அப்பாவுக்கும் தினமும் சண்டை நடந்திருக்கு.."

"அவனும் அவங்களை சமாதானம் செய்து அலுத்து போயிட்டான்..கடைசில என்னாச்சு..தெரியுமா...

அவங்கப்பா இத்தனை வயசுக்கு பிறகு சீரியல் பாக்கறத்துக்காக சண்டை போட்டுக்கிட்டு சபேசனோட தம்பி வீட்டுக்கு போயிட்டார்...இப்ப அங்க தான் இருக்காராம்..."

"நம்ம வீட்டுல நான் உன்னை அனுசரிச்சு போயிடறேன்..அதனால எந்த பிரச்சனையும் இல்ல...எல்லா நாளும் இப்டியே போகாது...என் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு..."என விரக்தியில் சொல்ல..

"ஓஹோ...பூனை குட்டி வெளில வந்துடுச்சு..நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு என்னிக்கு பிடிச்சிருக்கு...இன்னிக்கு பிடிக்க.."

"ஆமா...எனக்கு உத்ரா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது பிடிக்கல..நாள பின்ன ஏதாவதுனு போக அவளுக்கு அம்மா வீடு இருக்கா.."

"ஆனா என் ப்ரெண்ட் பொண்ணுனு கரிச்சு கொட்டறீங்களே...அவ..பெரிய பணக்காரி...கூப்பிட்ட குரலுக்கு வேலை செய்ய ஆளிருக்கு..எது இருந்தாலும் அவளை தங்க தாம்பாளத்துல வெச்சு தாங்குவாங்க..."

"எங்க எனக்கு தான் அப்டி ஒரு மஹாலட்சுமி மருமகளா வர குடுப்பினை இல்லையே..." என திலகா புலம்ப தொடங்க...

"இங்க பாரு...திலகா..நான் சொல்றதை நல்லா கேட்டுக்க..உத்ராவுக்கு என்ன குறை..படிச்சிருக்கா..டாக்டரா இருக்கா..நல்ல வருமானம் வருது...அதை விட மரியாதை தெரிஞ்ச பொண்ணு..நீ என்ன சொன்னாலும் பதில் சொல்றதில்ல..."

"அவளை தங்கமா தாங்க, பாசமா பாத்துக்க புருஷன் இருக்கான்...அப்பாவா அரவணைக்க நான் இருக்கேன்...அம்மா மாதிரி பாத்துக்க நீ இருக்க...அவளோட நட்பா ஹாசினி இருக்கா..அப்டி இருக்கும் போது அவளுக்கு யாரும் இல்லேனா எப்ப பாரு சொல்லி குத்தி காட்டி அவளை வேதனைபடுத்தாத..."

"எல்லாத்துக்கும் மேல... பல வருஷமா பாத்து, பழகி அவங்க குடும்பத்து ஆளுங்களுக்கு நம்ம சத்யாவை பிடிச்சு தான் இந்த கல்யாணம் நடந்திருக்கு...அது அவங்க வாழ்க்கை..."

"முடிஞ்சா நாம அவங்களுக்கு உதவி பண்ணணும்...இல்லையா தொல்லை பண்ணாம அமைதியா இருந்துடணும்..."

"இப்பவும் சொல்றேன்... நீ வந்தனா கூட பண்றது எதுவும் எனக்கு தெரியாதுனு நினைக்காத...தெரிஞ்சும் கண்டுக்காம இருக்கேன்... அவ்ளோ தான்..."

"சீரியல் பாத்து பாத்து சத்யாவுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் நடுவில நீ எதாவது செஞ்சே...அப்பறம் நீ வேற முரளியை பாப்ப..."என கத்தி வீட்டில் போன் தொடர்ந்து அடித்தது கூட தெரியாமல் வெகு தீவிரமாக அவர்களின் சண்டை நடந்து கோபத்தில் வெளியே கிளம்பி போய் விட்டார்.(தொடரும்
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 24
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom