• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 8

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 8

கிமு முதல் மில்லினியத்தில் ரிக்வேதம் மற்றும் சாமவேதத்தில் குறிப்பிடப்பட்ட வீணை என்பது பதிவுசெய்யப்பட்ட இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பழமையான கருவியாகும். அசல் சமஸ்கிருத வார்த்தையான 'வீணை' என்பது எந்தப் பறிக்கப்பட்ட கம்பி வாத்தியத்தையும் குறிக்கிறது, ஆனால் சில பழங்கால நூல்களில், நவீன வீணை என நாம் அறிந்ததை நாரதர் சித்தரித்து, கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

எனவே வீணை பழமையான இந்திய கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்று பயன்படுத்தப்படும் வீணை போன்ற ஒரு வீணை கிபி 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கி சரஸ்வதி தேவியால் வாசிக்கப்பட்டதாகக் காட்டப்படுகிறது.


நமஸ்வி தங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னாள். ஈஸ்வரனின் உடல்நலக் குறைவால் தான் நிகழ்ச்சியை கேன்ஸல் செய்யவேண்டியதாகிப் போயிற்று என்று அனைவரிடமும் சொல்லி வைத்திருந்தார்கள். அதற்கேற்ப, சைந்தவி அவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற அதே நாளில் ஈஸ்வரனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.

எல்லோரும் திருக்கடையூர் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் சைந்தவி தங்களுடைய வீட்டில் திடீரென நுழைந்ததையும், பெரியப்பாவைத் தன் அப்பாவென்று சொன்னதையும் அதற்குப் பின்னர் நடந்த விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள். திறந்த வாய் மூடாமல் தர்ஷனும், ஆயுஷும் அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

" இது ஏதோ சினிமாக் கதை மாதிரி இல்லை இருக்கு. சைந்தவி மேடம் மாதிரி உருவ ஒற்றுமை உள்ள வேற யாராவது வந்திருக்கலாம் இல்லையா? பாக்க ஏழைப் பொண்ணா இருந்தான்னு வேற சொல்லறீங்க? " என்று சந்தேகப் பட்டான் ஆயுஷ். அவனுடைய சந்தேகமும் நியாயமாகத் தான் பட்டது தர்ஷனுக்கு.

" நானும் ஆஃபிஸில் அவங்க வந்து நின்னபோது அதிர்ச்சி அடைந்தாலும், அந்தப் பொண்ணா இருக்கமுடியாதுன்னு தான் நினைச்சேன். ஏன்னா அவங்க தோற்றம் கம்ப்ளீட்டா வேற மாதிரி இருந்தது. ஆனா அவங்க பேரைக் கேட்டதும் நான் சந்தேகப்பட்டது சரிதான்னு உறுதியாச்சு. அது மட்டுமில்லாமல் அவங்க என்னைப் பாத்து கேலியாச் சிரிச்ச மாதிரி வேற இருந்தது" என்று மனஸ்வி சொன்னதும் ஒருவிதத்தில் ஏற்கக் கூடியதாகத் தான் இருந்தது.

" அவங்க சிரிச்ச மாதிரி நீயா கற்பனை செஞ்சிருப்பேன்னு தான் சொல்ல நினைச்சேன். ஆனா அதே பேரு இருக்கறது கொஞ்சம் இடிக்குது. அவ்வளவு தூரம் பொருத்தமா அமையறது கஷ்டம் தான். மிஸ்டர். டிடெக்டிவ் தான் நம்ம கிட்ட இருக்காரே? எந்த விஷயத்தையும் ஆழமாக ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களுடன் உங்கள் முன் கொண்டு வரும் நமது ரிப்போர்ட்டர் தர்ஷன் அவர்கள் உங்கள் முன்னிலையில். டடட்ட டை… " என்று கைகளை கேமரா போல் வைத்துக் கொண்டு தர்ஷனின் முகத்தைக் காட்டினான் ஆயுஷ். தர்ஷனோ எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

" நாங்க எவ்வளவு ஸீரியஸாப் பேசிட்டு இருக்கோம்? உனக்கு காமெடியா இருக்கா? யூஸ்லெஸ் ஃபெல்லோ! ஆறுதலா ஒரு வார்த்தை பேசாமல் எல்லாத்திலயும் கேலி தான் " என்று படபடவென்று பொரிந்தாள் நமஸ்வி.

" மேடம் ஐ. ஏ. எஸ், நீங்க தான் புரிஞ்சுக்காமல் அவசரக்குடுக்கை மாதிரி பேசறீங்க! எவ்வளவு அற்புதமான சஜஷன் கொடுத்துருக்கேன்? அப்ரிஷியேட் பண்ணலைன்னாலும் திட்டாம இருக்கீங்களா கொஞ்சம்? தர்ஷனோட முகத்தைப் பாருங்க. ஏற்கனவே ஏதோ அதிரடி ஆக்ஷன் பிளான் பண்ணிட்டான்னு நினைக்கறேன். நம்ப தலைவர் இப்போ ஜெயிலரா ஆக்ஷனில் இறங்கின மாதிரி அவன் மனதிலும் ஏதோ திட்டம் உருவாயிடுச்சு. கமான் தர்ஷன் " என்று தர்ஷனைப் பார்த்து உற்சாகத்துடன் கத்தினான் ஆயுஷ்.

" பயங்கரமா டிராமா போடாதே ஆயுஷ். தர்ஷன் வேற ஏதோ கூட யோசிப்பானா இருக்கும்? நாங்க சொன்னதை எல்லாம் கவனிச்ச மாதிரி கூடத் தோணலை எனக்கு " என்று வருத்தத்துடன் பேசிய மனஸ்வியை முறைத்தான் தர்ஷன்.

" ஆளாளுக்கு கெஸ் பண்ணி எதையாவது உளறிக் கொட்டாமல் கொஞ்சம் அமைதியா இருந்தா நானே சொல்வேன்" என்று தர்ஷன் மிரட்டியதும் தான் அனைவரும் அமைதி ஆனார்கள்.

" நான் ஒருத்தன் இங்கே தீவிரமாக யோசிச்சு இதற்கு என்ன ஸொல்யூஷன்னு கண்டுபிடிக்கலாம்னு பாத்தா ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைப் பேசிட்டிருக்கீங்களே? உங்க பெரியப்பா உடம்பு இருக்கற நிலைமையில் அவருக்கு அடிக்கடி மெடிக்கல் உதவி தேவைப்படும். அதுனால நிச்சயமாக மெடிகல் வசதிகள் இருக்கற எடமாத் தான் தேர்ந்தெடுத்துத் தங்கியிருப்பாரு.

கிராமங்களைத் தேடிப் போயிருக்க மாட்டார். தில்லியில் அவரோட மொபைல் கடைசியா ஆக்டிவா இருந்திருக்கு. ஒரு பேச்சுக்கு அதை வேறு யாரிடமும் கொடுக்காமல், அவரே யூஸ் பண்ணினார்னே வச்சுக்குவோம. அப்படிப் பாக்கும்போது தில்லியிலோ, இல்லை அதைச் சுத்தியிருக்கற ஏதாவது இடத்திலோ அவர் தங்கியிருக்கலாம். தில்லியில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. நான் அவங்க மூலமா முயற்சி பண்றேன்.

நீங்க ரெண்டு பேரும் எனக்கு அங்கிளோட ரீசன்ட் பிக்சர், அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் இதை மட்டும் கொண்டு வந்து தாங்க. நான் இன்னைக்கே முயற்சி செய்ய ஆரம்பிக்கறேன். எனக்கே கொஞ்ச நாட்களில் நார்த் ஸைட் ஒரு வேலையாப் போகணும். ஒரு ஆர்ட்டிகிளுக்குத் தகவல்கள் சேகரிக்கணும். அதுக்குள்ள ஏதாவது லீட் கெடைச்சால் நல்லா இருக்கும். நானே விசாரிச்சுட்டு வரேன் " என்று சொல்ல, மனஸ்வி எழுந்து ஓடிப்போய் அவனுடைய கன்னத்தில் தனது இதழ்களைப் பதித்தாள்.

ஒன்றுமே வழி கிடைக்காமல் திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்க்கு, தூரத்தில் தெரியும் ஒளிக்கீற்று நம்பிக்கை தருவது போல, அவளுடைய மனதில் புதிய நம்பிக்கை பிறந்தது. அவளுடைய ஆனந்தத்தின் வெளிப்பாடு, தர்ஷனின் கன்னத்தில் முத்திரையாகப் பதிந்தது.

" அப்புறம் இன்னொரு விஷயம். அந்த சைந்தவி மேடம் பத்தியும் தகவல்கள் கலெக்ட் பண்ணலாம். மனஸ்வி, ஆயுஷ் நீங்க ரெண்டு பேரும் உங்க ஆஃபிஸிலும் முயற்சி பண்ணுங்க. அவங்க எங்கே படிச்சாங்க? யாரு உதவியில் படிச்சாங்க? இப்போ எங்க இருக்காங்க எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா. அவங்களோட சரித்திரத்தையும் தோண்டி எடுத்து அக்கு வேறு, ஆணி வேறா அலசிடலாம்" என்று தர்ஷன் சொல்ல, உற்சாகத்துடன் எல்லோரும் தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார்கள்.

அடுத்த நாள் காலையில் திருவான்மியூர்
வீட்டில் புயலின் அறிகுறிகள் மீண்டும் ஆரம்பமாயின. அடிமனதில் ஈஸ்வரனைப் பற்றிய கவலை துளைத்துக் கொண்டே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம். காலை உணவிற்காக அனைவரும் கூடியிருந்தபோது தான் சத்யமூர்த்தி அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

" பல்லவி, இன்னைக்கு சாயந்திரம் அகிலா, மும்பையில் இருந்து வரா. நான் ஆஃபீஸில் இருந்து நேரா ஏர்போர்ட்டுக்குப் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்" என்று சத்யன் சொன்னபோது குழந்தைகள் மூன்று பேரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பல்லவிக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் என்பதால் அவளுடைய முகத்தில் எந்த எதிர்வினையும் தெரியவில்லை.

" மாப்பிள்ளையும் வராரா? " என்று மட்டுமே பல்லவி கேட்டாள்.

" இல்லை வரலையாம். அகிலா மட்டும் தான் கிளம்பி வரா. ஏதோ நிறைய விஷயங்கள் அவளுக்கு நேரில் பேசணுமாம். ஃபோனில் பேச வேண்டிய விஷயம் இல்லைங்கறா. அவ பேசின விதத்தைப் பாத்தா சண்டை போடணும்னு முடிவு பண்ணிட்டு வர மாதிரி எனக்குத் தோணுது" என்று சொன்ன சத்யனின் குரலில் கவலை தெரிந்தது.

" அண்ணா விஷயம் பத்தித் தான் பேசப் போறாளா இருக்கும். பீமரத சாந்திக்கே நேரா திருக்கடையூர் வரேன்னு சொல்லியிருந்தா. அப்புறம் நிகழ்ச்சி கேன்ஸல் ஆனதுக்கப்புறம் அண்ணா ஹாஸ்பிடலில் இருந்தபோது வந்து பார்த்திருக்கலாம். ஏதோ கோபத்தில் டிக்கெட்டை கேன்ஸல் பண்ணிட்டா. இப்போ அண்ணா வீட்டை விட்டுப் போனது தெரிஞ்சதுல இருந்து அதிகம் பேசறதில்லை. தனியாக் கெளம்பி வரதா திடீர் முடிவு எடுத்திருக்கா இப்போ. என்ன நடக்கப் போகுதோ பாக்கலாம். நீ எதுக்கும் பதிலுக்கு பதில் பேசாதே பல்லவி. பொறுமையாப் போயிடு" என்று எச்சரித்தார் சத்யமூர்த்தி.

" சரிங்க" என்று சொல்லித் தலையாட்டிய பல்லவியின் மனதில் நேரமாக ஆகக் கவலையும், பயமும் அதிகரித்துக் கொண்டே போயின. அகிலா எப்போதுமே அப்படித் தான். படபடவென்று பொரிந்து தள்ளும் ஊசிப் பட்டாசு ரகம். அதிகம் பிறந்த வீட்டுக்கு வரமாட்டாள். ஆனால், வந்தால் ராஜ உபசாரத்தை எதிர்பார்ப்பாள்.

அத்தை வந்து இறங்கியதும் குழந்தைகள் மூன்று பேரும் மரியாதைக்கு அவளுடன் சகஜமாகப் பேசிவிட்டுத் தங்கள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்கள்.

" என்ன ஆச்சு அண்ணாவுக்கு? எதுனால வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போனாரு? அவரு கிளம்பறதுக்கு முன்னால ஏதாவது பெருசா வாக்குவாதம் நடந்துச்சா? பல்லவி அண்ணி, ஈஸ்வர் அண்ணாவை எப்பவும் நல்லாத் தான் பாத்துக்கறாங்க. அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பிரியமாவும் மரியாதையோடயும் தான் அண்ணாவை கவனிச்சுக்கறாங்க. பாத்துப் பாத்துக் கண்ணும் கருத்துமா கவனிச்சிக்கற குடும்பத்தை விட்டு திடீர்னு எதுக்கு இப்படி கிளம்பிப் போகணும்? ஒண்ணுமே புரியலையே? " என்று சாந்தமாகத் தான் ஆரம்பித்தாள் அகிலா.

" உனக்குத் தான் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் ஃபோனில பேசும்போது சொன்னேனே நான்? அந்தப் பொண்ணு வந்துட்டுப் போனதுல இருந்தே அவரு சரியாயில்லை. ஹாஸ்பிடலில் இருந்தபோதும் டாக்டர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஆபரேஷன் எனக்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டார். நாங்களும் எவ்வளவோ கெஞ்சினோம். நாங்க சொன்னதையும் கேக்கலை. நீ வந்திருந்தேன்னா ஒருவேளை அவரை கன்வின்ஸ் பண்ணிருப்பே" என்றார் சத்யன்.

" எப்படியாவது வந்துருக்கணும் நான். வரமுடியாமல் போயிடுச்சு அந்த சமயத்தில். ஏற்கனவே புக் பண்ணின டிக்கெட் இருக்கு. உடனே கிளம்பி வரணும்னு தான் நினைச்சேன். ஆனா மாமியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டுகிட்டாங்க. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண வேண்டிய எமர்ஜென்சி. அதுனால தான் வரமுடியலை. அவங்க ஹாஸ்பிடலில் இருந்தபோதே இவரும் ஆஃபீஸ் வேலையா வெளிநாடு போகவேண்டிய கட்டாயம் ஆயிடுச்சு. மாமியார் குணமாகி வீட்டுக்கு வரவே நாளாயிடுச்சு. இப்போது கூட நாத்தனாரை அங்கே இருக்கச் சொல்லிட்டுத் தான் வந்திருக்கேன். என்ன நடந்ததுன்னு விவரமா நேரில் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன்" என்றாள்
ஆற்றாமையுடன்.

" என்னவெல்லாமோ நடந்து போச்சு. ஒண்ணுமே மனசுக்குப் பிடிக்கலை அகிலா. தன் மேல பெரும் பழி விழுந்ததை அவரால் தாங்கிக்கமுடியலை. அதுனால வந்த அவமானம் தான் அவரோட உடம்பையும், மனதையும் சேர்த்து உருக்குலைச்சுடுச்சு. வெளிப்படையா எதுவும் பேசாமல் மனசுக்குள்ள வச்சு மருகிகிட்டே இருந்திருப்பாரா இருக்கும். சட்டுன்னு முடிவெடுத்து வீட்டை விட்டுக் கிளம்பிப் போயிட்டாரு. நினைக்க நினைக்க மனசு ஆறமாட்டேங்குது" என்ற சத்யனைக் கனிவோடு பார்த்தாள் அகிலா.

" புரியுது சத்யா" என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனம் காத்தாள் அகிலா. அண்ணா என்றால் அகிலாவைப் பொருத்தவரை ஈஸ்வரன் மட்டும் தான். சத்யனைப் பேர் சொல்லித் தான் கூப்பிடுவது அவளுடைய வழக்கம்.

" அந்தப் பொண்ணு மட்டும் என் கையில் கெடைச்சான்னா, எனக்கு வர கோபத்தில் என்ன செய்வேனோ எனக்கே தெரியலை! அவ சொன்னது அத்தனையும் பொய்யாத் தான் இருக்கணும். ஆனா அவளையும், அவளோட அம்மாவையும் அண்ணாவுக்குத் தெரிஞ்சிருந்த விஷயம் தான் ஆச்சரியம் தருது எனக்கு. இதுக்குப் பின்னாடி ஏதோ இருக்கு. அதைத் தான் நாம கண்டுபிடிக்கணும்" என்றாள் அகிலா.

" நம்ம பசங்க ஏதோ முயற்சியில் இறங்கி இருக்காங்க. கூடிய சீக்கிரம் அவங்க உண்மைகளைக் கண்டுபிடிச்சுடுவாங்கன்னு நாங்க நம்பறோம்" என்றார் சத்ய மூர்த்தி.

"நம்பிக்கையோட காத்திருப்போம். அண்ணா யாரையும் காதலிச்சிருக்க மாட்டார்னு நான் நிச்சயமா நம்பறேன். காதல் என்ன, எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூட அவர் பாத்துருக்க மாட்டார். எனக்கு உறுதியாத் தெரியும் " என்று அகிலா பேசியது வித்தியாசமாகத் தோன்றியது அவர்களுக்கு.



தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
அகிலா ஈஸ்வரன் பத்தி இவ்வளவு உறுதியா சொல்லுறது 🤔🤔🤔🤔🤔🤔கொஞ்சம் ஏற்க முடியுறதில்லை, சைந்தவி, ஈஸ்வரனுக்கு இடைல வேற ஏதோ வகைல உறவுமுறை இருக்கலாம் 🙄🙄🙄
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
அகிலா ஈஸ்வரன் பத்தி இவ்வளவு உறுதியா சொல்லுறது 🤔🤔🤔🤔🤔🤔கொஞ்சம் ஏற்க முடியுறதில்லை, சைந்தவி, ஈஸ்வரனுக்கு இடைல வேற ஏதோ வகைல உறவுமுறை இருக்கலாம் 🙄🙄🙄
நன்றி🙏💕
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அதெப்படி அகிலா அம்மையாருக்கு அவ்வளவு உறுதியா தெரியும்.... ஹ்ம்ம்....
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
அதெப்படி அகிலா அம்மையாருக்கு அவ்வளவு உறுதியா தெரியும்.... ஹ்ம்ம்....
நன்றி🙏💕
 
Top Bottom