• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 14

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 14


வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம் உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.

தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள் 8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது.

தஞ்சாவூர் வீணையின் பெருமை:

தஞ்சாவூர் வீணையை மீட்டுவது பெரும் பாக்கியமாகவும், கவுரமாகவும், இசைக் கலைஞர்கள் நினைப்பது பெருமைக்குரியது. சில வீடுகளில் இசைக்கத் தெரியாவிட்டாலும் தஞ்சாவூர் வீணை வைத்திருப்பதே பெருமை என்று நினைக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாது, பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

தஞ்சையில் தயாரித்து உலகம் முழுவதும் உலா வரும் வீணைக்கு புவிசார் குறியீடு (Geographical indication) வழங்கி, பெருமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.



சரியாக இரண்டு வாரங்கள் கழித்து, ஈஸ்வரன் வாரணாசியில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அப்துல் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தான்.

" அங்கிள், நீங்க குணமாகிக் கெளம்பறது சந்தோஷமான விஷயம். ஆனாலும் உங்களைப் பிரியப் போறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு" என்றவனின் தோளில் ஆதரவாகத் தட்டினார்.

" நான் இப்போ ஹைதராபாத் போறேன். அங்கே எனக்கு பிரெய்ன் டியூமருக்கான சிகிச்சை தரப் போறாங்க. இதோ நிக்கறாளே சைந்தவி, இவ பார்கவியா, சைந்தவியான்னு ரொம்ப யோசிக்காமல் சைந்தவின்னே கூப்பிடப் போறேன். இந்த சைந்தவி என் பொண்ணு மாதிரி. இவளோட அம்மா, அப்பா பெரிய டாக்டர்கள். அவங்க தான் என் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் போறாங்க. நான் கம்ப்ளீட்டா சரியானதும் இங்கே தான் எங்கம்மா கங்கையைத் தேடி வரப் போறேன். உன்னைப் படிக்க வைக்கற பெரிய பொறுப்பு எனக்கு இருக்கு " என்று சொல்லி அவனுடன் ஆறுதலாகப் பேசி விடை பெற்றார்.

நிர்மல் ஓடிவந்து பெரியப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்த போது பல்லவி அவரருகில் வந்து உட்கார்ந்து எதையோ பேச நினைத்தவள், பேச முடியாமல் தலைகுனிந்தாள்.

" என்னாச்சு பல்லவி? இன்னமும் நீ அதிர்ச்சியில் இருந்து வெளியே வரலையா? "
என்று பரிவுடன் கேட்டார்.

" எப்படி வரமுடியும் அண்ணா? எங்கண்ணன் இவ்வளவு பெரிய தப்பைப் பண்ணிட்டு நல்லவன் மாதிரி திரிஞ்சுருக்காரு! நீங்க செய்யாத தப்புக்காகப் பழி சுமந்திருக்கீங்க! நினைக்க நினைக்க மனசே ஆறலை"

" விட்டுத் தள்ளும்மா. நடந்ததுக்கு நானும் ஒரு காரணம். பேங்குக்கு அடிக்கடி வந்த உங்கண்ணனுக்கு, இளம் விதவையான வைஜந்தியை அறிமுகம் செஞ்சு வச்சதே நான் தான்.

நான் வேலையில் சேர்ந்ததில் இருந்து வைஜயந்தி மீது எனக்குத் தனிப்பாசம் இருந்தது. அதற்குக் காரணம் அவளுக்கே வீணை வாசிக்கத் தெரியும் என்பது தான்.

சிறுவயதில் தாயை இழந்திருந்த எனக்கு என் அம்மா மிகவும் நன்றாக வீணை வாசிப்பார் என்கிற தகவல் மட்டும் தெரியும். அதிலிருந்து அவருடைய நினைவு வரும் போதெல்லாம் வீணையும், கையுமாகத்தான் காட்சி தருவார். அதனாலேயே வீணை சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு உணர்வு பூர்வமான விஷயமாக இருந்தது.

இளம் விதவை என்பதால் அவள் மீது பரிதாபமும் பட்டேன். கணவனை இழந்த வைஜயந்திக்கு அனுதாப அடிப்படையில், அந்த வேலை கிடைத்திருந்தது. வேலை தெரியாமல் திண்டாடியபோது நான் உதவி செய்ததால் அவளுக்கு என் மீது தனிப்பாசம் இருந்தது. அண்ணா, அண்ணா என்று தான் பாசத்தோடு கூப்பிடுவாள்.

உங்கள் திருமணத்திற்குப் பிறகு பிஸினஸுக்கு லோன் வாங்குவதற்காக உன் அண்ணன் எங்கள் பேங்குக்கு வந்தார். லோன் விஷயங்கள் அப்போது வைஜயந்தி தான் பார்த்துக் கொண்டிருந்ததால், அவளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சேன். அப்போது தொடங்கிய பழக்கம், அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சாங்க. மெல்ல மெல்ல அவர்களுடைய நட்பு, நெருக்கமான உறவாக மாறியதென்று எனக்குத் தெரியாது.

ரெண்டு பேரும் எப்படி தடுமாறினாங்கன்னு புரியலை. திடீர்னு வைஜந்தி ஹைதராபாத்துக்கு மாறுதல் வாங்கிட்டுப் போனபோது கூட என்ன காரணம்னு எனக்குப் புரியலை. ஹைதராபாத்தில் இருந்து வைஜயந்தி என்னை அவசரமாக் கூப்பிட்டதும் கிளம்பிப் போனேன். குழந்தையை என் கையில் ஒப்படைச்சுட்டு உண்மையெல்லாம் சொல்லிட்டு உசுரை விட்டுட்டா. எனக்கும் அந்த சமயத்தில் என்ன செய்யறதுன்னே ஒண்ணும் புரியலை. குழந்தையை ஆசிரமத்தில் சேத்துட்டுக் கிளம்பினேன்.

என்னோட கூட்டிட்டு வந்தா, ஒருநாள் உண்மை வெளியே வந்து உன் பிறந்த வீட்டை பாதிக்குமோன்னு பயந்துட்டேன். உங்கண்ணனைக் கூப்பிட்டு சொன்னேன். அவர் வைஜயந்தியை ஏத்துக்க மறுத்ததை நியாயப்படுத்திப் பேசினார். குழந்தையோட பொறுப்பையும் ஏத்துக்க முன்வரலை. நானும் முடிஞ்ச வரை அவளோட செலவுக்குப் பணம் அனுப்பினேன். அப்புறம் அவளை ஒரு நல்ல குடும்பத்துல தத்து எடுத்துகிட்டாங்கன்னு தகவல் கிடைச்சதும் பணம் அனுப்பறதை நிறுத்தினேன். ஆனால் அவளோட கல்யாண சமயத்தில் உதவி பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்குள்ள என்னல்லாமோ நடந்து போச்சு" என்று சொல்லிக் கொண்டிருந்த போது சைந்தவி அங்கே வந்தாள்.

" அப்பா கிளம்பலாமா? போர்டிங் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க" என்றாள். சைந்தவி, ஈஸ்வரனை மனதாரத் தனது தந்தையாக ஏற்றுக் கொண்டு விட்டாள். தெரிந்தோ தெரியாமலோ ஒருநாள் கூப்பிட்டதை அப்படியே நிரந்தரமாக ஏற்றுக் கொண்டாள்.

கங்கை மாதாவிடம் விடை பெற்றுக் கொண்டு வாரணாசியை விட்டுக் கிளம்பினார் அந்த கங்கையின் மைந்தன்.

நிச்சயமாக வாரணாசி திரும்பி வர வேண்டும். வாரணாசியில் அவருக்குச் சில புதிய கடமைகள் முளைத்திருந்தன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார். நிச்சயமாக முக்திபவனைத் தேடிப் போக மாட்டார் அவர்.

வாழ்க்கையில் முக்தி என்பது எப்படிக் கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.



புவனா சந்திரசேகரன்.

இப்போதைக்கு இந்தக் கதை முடிந்துவிட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து பெரிய கதையாக எழுதும் ஆர்வம் இருக்கிறது. விரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன்.

அடுத்த பாகம், மீட்டாத வீணை என்கிற குறு நாவலின் முதல் அத்தியாயம்.

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வாவ் ஷார்ட் அன்ட் ஸ்வீட் டா இருந்தது. 👌👌👌👌👌
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
ஈஸ்வரன் முக்திக்கு போய் சக்தி பெற்று வராரு சூப்பர் அம்மா 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
சூப்பர்! நல்லவிதமாக கதையின் முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறீர்கள்.
அடுத்து, மீட்டாத வீணைக்கு புலம் பெயர்வோம்
 

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
நல்லவிதமா முடிச்சிடீங்க...அடுத்த பாகத்துக்காக காத்திருக்கோம்😍
 
Top Bottom