• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை -1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
ஏகாந்த வீணை

வீணை என்றழைக்கப்படும் இசைக்கருவி, கிமு முதல் மில்லினியத்தில் ரிக்வேதம் மற்றும் சாமவேதத்திலும், இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்ட பழமையான கருவியாகும். அசல் வடமொழி வார்த்தையான 'வீணை' என்பது கம்பி வாத்தியத்தையும் குறிக்கிறது, ஆனால் சில பழங்கால நூல்களில், நவீன வீணை என நாம் இன்று பயன்படுத்தும் இசைக்கருவியை, நாரதர் சித்தரித்துக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். எனவே வீணை பழமையான இந்தியக் கருவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று பயன்படுத்தப்படும் வீணை
போன்ற ஒரு வீணை கிபி 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கி கலைமகளால் வாசிக்கப்பட்டதாகக் காட்டப்படுகிறது. கலைமகள் கைப்பொருளாகப் பாடல்களிலும், ஓவியங்களிலும் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாயம் 1

சென்னை திருவான்மியூரில் இருக்கும் அந்த வீடு உற்சாகத்தை வர்ணமாகப் பூசிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியான உரையாடலும், ஆரவாரக் கூச்சல்களும், கொண்டாட்டமும், குதூகலமும் வீடு முழுவதும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. மொத்தத்தில் விழாக் கோலம் கொண்டிருந்தது அந்த வீடு.

இரண்டு இளம்பெண்கள் குறுக்கும், நெடுக்குமாக ஓடியபடி ரகளை செய்து கொண்டிருந்தார்கள். அழகான தோற்றம். பளிச்சென்ற முகம். இன்றைய நவீன யுகத்தின் பிரதிநிதிகள். தொள தொள பைஜாமாவும், மேலே லூசான டீ ஷர்ட்டும் போட்டுக் கொண்டு, " இது தான் எங்களுக்குப் பிடித்த கம்ஃபர்டபிளான டிரஸ். இப்படித் தான் போடுவோம்" என்று முடிவு செய்து விட்ட அந்த வாயாடிகளுடன் யாராலும் பேசி ஜயிக்கவே முடியாது.

புயலாக வீடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த அந்தச் சுறுசுறுப்புத் திலகங்கள், உண்மையில் என்ன வேலை தான் செய்து கொண்டிருக்கிறார்கள், உருப்படியாக ஏதாவது வேலை அல்லது உதவி தான் செய்கிறார்களா என்று யாராவது கேட்டால் அது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகத் தான் இருக்கும்.

" பெரிய வீட்டில பொண்ணைக் கொடுத்தவனை மாதிரி எதுக்கு இவங்க ரெண்டு பேரும் குறுக்கும் நெடுக்குமா உலாத்திக்கிட்டே இருக்காங்கன்னு புரியலை" என்று முணுமுணுத்தாள் விருந்தாளியாக வந்திருந்த ஒரு முதியவள். உண்மையில் அப்படித்தான் பரபரவென்று சுற்றிக் கொண்டிருந்தார்கள். வேறு யாருமல்ல, அந்த வீட்டின் செல்ல இளவரசிகளான இரட்டையர்கள் நமஸ்வியும், மனஸ்வியும். ஆமாம், அவர்களுடைய பெயர்கள் தான் அவை.

" நமஸ்வி, மனஸ்வி, பேக்கிங் முடிச்சுட்டீங்களா? வாசலில் வேன் வந்து நிக்கும் போது, அதை மறந்துட்டேன், இதை மறந்துட்டேன்னு உள்ளே ஓடி லேட் பண்ணினா, விட்டுட்டுக் கிளம்பிப் போயிட்டே இருப்போம்" என்று கடிந்துகொண்டாள் அவர்களைப் பெற்றெடுத்த மகராசியான பல்லவி.

" அம்மா, நெஜமாவே ஒரு தடவையாவது நீங்க அந்த மாதிரி செய்யணும்மா. அப்பத் தான் இந்த ராக்ஷஸிகளுக்கு புத்தி வரும் " என்றான் குட்டிச் சுட்டியான நிர்மல். தன் அக்காக்களைப் பார்த்து முகத்தைச் சுழித்தபடி பழிப்பு காட்டினான் அவன்.

" என்னடா குட்டிப் பிசாசு! எப்பப் பாரு எங்க கூட மல்லுக்கு நிக்கறதே உனக்கு வேலையாப் போச்சு. அரைக்காப்படி உழக்கு மாதிரி இருந்துட்டு பேச்சைப் பாரு, பேச்சை! அம்மா, உங்களோட செல்லப் பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க, ஆமாம், சொல்லிட்டேன் " என்று பொங்கி எழுந்தாள் நமஸ்வி.

சற்று நேரத்திற்கு முன்பு வரை சண்டை போட்டுக் கொண்டிருந்த இரட்டையர், தம்பியுடன் வம்பு செய்வதற்காகக் கை கோர்த்துக் கொண்டு ஒற்றுமை திலகங்களாக மாறி நிற்க, நிர்மல் அம்மாவின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டான்.

" அவன் சொல்லறதுல என்ன தப்பு? காலையில் எழுந்ததுல இருந்து என்ன வேலை வெட்டி முறிச்சீங்க ரெண்டு பேரும்? உங்களை விட ஆறு வயசு சின்னவன். தன்னோட சாமான் எல்லாம் பேக் பண்ணி வச்சுட்டு எனக்கும் அவ்வளவு ஹெல்ப் பண்ணறான்? அவனுக்கிருக்கற பொறுப்பில ஒரு பங்காவது உங்களுக்கு இருந்தால் நல்லா இருக்கும் " என்று அவர்களிடம் பொரிந்து தள்ளினாள் பல்லவி.

" நிம்மதியா உனக்கு? எங்களைக் கோவிச்சுக்க ஏதாவது சின்னக் காரணம் கெடைச்சாப் போதுமே அம்மாவுக்கு ? ஒவ்வொரு பந்தும் ஹுக்லியா வீசிடுவாங்களே? டே, குட்டிச் சாத்தானே, நாளைக்கு ஹோம் வொர்க் பண்ண ஹெல்ப் கேட்டுட்டு வருவே இல்லை? அப்ப இருக்கு உனக்கு" என்று மனஸ்வி மிரட்டினாள் தன் பங்குக்கு.

" உங்க கிட்ட டௌட் கேட்டு ஹோம் வொர்க் பண்ணிட்டுப் போனா மிஸ் கிட்ட செமத்தியா அடி தான் கெடைக்கும் எனக்கு ! நான் வேற யார் கிட்டயாவது ஹெல்ப் வாங்கிக்குவேன். ஓடிப் போயிருங்க" என்றான் அசராமல் அவனும்.

" வரவர வாய் ரொம்ப நீளுது இவனுக்கு. பேரைப் பாரு பாரை. பொம்பளைப் பேரு மாதிரி நிர்மலாமே நிர்மல். நாளையில இருந்து உன் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி நிம்மு, நிம்மி டார்லிங்னு கூப்பிட்டு உன் மானத்தை வாங்கறேனா, இல்லையா பார்" என்று நமஸ்வி ஒரேயடியாக அவனைத் தாக்கினாள். ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான் நிர்மல். எங்கே அடித்தால் நன்றாக வலிக்கும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

" இருங்க, உங்க ரெண்டு பேரையும் பெரியப்பா கிட்டப் போட்டுக் கொடுக்கிறேன்" என்று திரும்பினான் நிர்மல்.

" போடா கோள்மூட்டிக் குப்பா! " என்று இரண்டு பேரும் கத்தி விட்டு, கைகளை உயர்த்தி ஹை ஃபைவ் கொடுத்துக் கொள்ள, அவர்களுடைய உரையாடலைக் கேட்டபடி அங்கே நுழைந்தார் அவர்களுடைய பெரியப்பா ஈஸ்வரமூர்த்தி. வீட்டில் அனைவராலும் பீஷ்மப் பிதாமகர் என்று செல்லமாக அதே சமயம் மரியாதையுடன் அழைக்கப்படும் பெரியவர் தான் அவர். அந்த வீட்டின் தலைவர்.

வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விவாதங்களைத் தடுத்துத் தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதி. குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் நாட்டாமை. கோபம் வந்தால் முறைக்கும் காவல் அதிகாரி, என்ன வேண்டுமானாலும் சொல்லாம். அத்தனை அடைமொழிகளையும் தாங்கிக் கொண்டு வளைய வரும் மூத்த பிரதிநிதி.

பெரியப்பாவின் முகத்தைக் கண்டதும் வாயடைத்துப் போனது இரட்டையருக்கு.

" அது வந்து பெரியப்பா, ஒண்ணுமேயில்லை. நிர்மலைச் சும்மாக் கலாய்ச்சோம். வேற எந்த விஷயமுமில்லை" என்று பம்மினார்கள்.

" அப்படியா , யாரோ அவன் பேரை வச்சுக் கிண்டல் செஞ்ச மாதிரி என் காதில விழுந்துச்சே? வயதானால் காது கேக்காதுன்னு இல்லை சொல்லுவாங்க. எனக்கு என்னவோ அதிகமாக் கேக்குதே? அதுவும் தேவையில்லாதது எல்லாம் கேக்குது" என்று அவரும் நக்கலாகப் பேசினார்.

" அது வந்து சும்மா, அவனை அழ வைக்க முடியுமான்னு எங்க ரெண்டு பேருக்குள்ள சின்னப் பந்தயம். அதுக்குத் தான். இல்லையா மன்னு?" என்று மனஸ்வியைப் பார்த்துக் கண்ணடித்தாள் நம்முவாகிய நமஸ்வி.

" ஆமாம், ஆமாம், அதே தான் பெரியப்பா, ஹி ஹி ஹி" என்று மனஸ்வியும் அசடு வழிய, நிர்மல் அவர்களுடைய தர்ம சங்கடமான சூழ்நிலையை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். நம்முவும், மன்னுவும் அவனைத் தங்களிடம் இல்லாத நெற்றிக் கண்களால் சுட்டுப் பொசுக்க முழுமுயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

" நிர்மல்னு பேர் வச்சது நான் தான். எங்க அம்மாவோட பேரு நிர்மலா. அவங்க ஞாபகமா நிர்மல்னு வச்சேன். அதுக்காக அவனை கேலி செய்யறது நியாயமில்லை. இன்னொரு தடவை இந்தப் பேரை வச்சு கேலி பண்ணினா, உங்க ரெண்டு பேர் மேலயும் ஏதாவது ஆக்ஷன் எடுக்க வேண்டியது தான் " என்று பெரியப்பா தீர்மானமாகச் சொல்ல,

" நோ பெரியப்பா, நோ, இனிமேல் சத்தியமாப் பண்ண மாட்டோம். அம்மா , நாங்க போய் எங்களோட பேக்கிங்கை முடிச்சிட்டு வரோம். பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. வந்ததும் சாப்பிட உக்காந்துடுவோம்" என்று ஒருவழியாகத் தங்களுடைய அறைக்குள் புகுந்து கொண்டார்கள். வீடும் அமைதிப் பூங்காவாக மாறியது.

பெரியப்பா கொடுக்கும் விதவிதமான தண்டனைகளை நிறைவேற்றுவது அவர்களைப் பொருத்தவரை கடினமான செயல் தான். பாத்ரூம் கழுவுவது, புத்தக அலமாரியில் புத்தகங்களைத் தூசு தட்டி அடுக்குவது, தோட்டத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது என்று சமயத்திற்கு ஏற்றாற்போல மாறும் தண்டனைகளை எண்ணிக் கலங்கிப் போனதால் தான் வாலைச் சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடினார்கள் அந்தக் குறும்புக்காரக் குப்பிகள்.

" வாயாடிப் பொண்ணுங்க. தினமும் இவங்க ரெண்டு பேரும் செய்யற அலும்பு தாங்கமுடியலை. நாளைக்குப் புகுந்த வீட்டுக்குப் போகப் போற பொண்ணுங்க, அடக்க ஒடுக்கமா இருக்க வேணாமா? கிச்சனுக்குள்ள வந்து என்னைக்கு சமையல் கத்துக்கப் போறாங்களோ? ஒண்ணுமே புரியலை எனக்கு" என்று புலம்பினாள் பல்லவி.

" நீ இன்னும் உன்னோட காலத்தை விட்டே வெளியில் வரமாட்டேங்கறே பல்லவி. காலம் மாறிப் போச்சு. இந்தக் காலத்துல பொண்ணுங்க தான் கல்யாணத்துக்கு நிறைய கண்டிஷன்கள் போடறாங்க. பொண்ணுங்க கை ஓங்கிடுச்சு. பிள்ளைகளைப் பெத்தவங்க மனசு தான், கடன் கொடுத்தார் நெஞ்சம் போலத் தவிச்சுப் போகுது தெரியுமா? கல்யாணமே வேண்டாம்னு உறுதியாக நிக்கற பெண்களோட எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுதாம்.

தினமும் பீச்சில் வாக்கிங் போகும் போது என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதே டாப்பிக் தான் பேசிட்டு இருக்காங்க. வீடு, கார் , பிடிச்ச டிரஸ் போட்டுக்கற சுதந்திரம், வருஷத்திலே ஒரு தடவையாவது வெளிநாடு ட்ரிப், தனிக் குடித்தனம் அப்படின்னு ஏகப்பட்ட கண்டிஷன்களை வைக்கறாங்களாம். பிள்ளையைப் பெத்தவங்களை வேண்டாத லக்கேஜ்னு கூடச் சொல்லறாங்களாம். கலிகாலம் நடக்குது பல்லவி. ரெண்டு பெண்களைப் பெத்த நீ தலை நிமிர்ந்து நடக்கலாம். நம்ப நிர்மல் கல்யாணத்துக்குத் தான் என்ன பாடு படுவயோ? "

" அண்ணா, இந்த விஷயங்களை நம்ம நம்மு, மன்னு காதுல போட வேணாம். ஏற்கனவே உச்சாணிக் கொம்பில நிக்குதுங்க. அதுக்கு மேல ஆகாசத்துல பறக்க ஆரம்பிச்சுடுவாங்க " என்று பல்லவி சொல்ல, தன் சகோதரிகளை இறக்கைகளுடன் வானில் பறப்பது போலக் கற்பனை செய்து பாரத்த நிர்மல், விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

" என்னடா அப்படியொரு சிரிப்பு உனக்கு? " என்று பல்லவி, அவன் காதைப் பிடித்துத் திருக, அவனுடைய சிரிப்பு அலறலாக மாறியது. தம்பி கத்துவதை ஆனந்தமாக இரசிக்க இரண்டு சகோதரிகளும் அங்கே உடனடியாக ஆஜர் ஆனார்கள்.

" கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க கல்யாணத்தைப் பத்தி எல்லாம் பெரியப்பா சொன்னதை நல்லவேளை நீங்க கேக்கலை" என்று அந்த வாண்டு எடுத்துக் கொடுக்க, சகோதரிகள் வியப்புடன் தாயைப் பார்த்தார்கள்.

" ஆமாம், நாளைக்கு பெரியப்பாக்குத் தானே விசேஷம். இது என்ன புதுக்கதை இப்போ? எங்களுக்குத் தெரியாமல் மாப்பிள்ளை பாத்துட்டீங்களா என்ன? அதெல்லாம் ஒத்துக்க முடியாது. எங்களுக்குப் பிடிச்சவனா, அடக்க ஒடுக்கமா இருக்கறவனா நாங்களே ஸெலக்ட் பண்ணுவோம்" என்றாள் நமஸ்வி.

" ஆமாம், ஆமாம் " என்று தலையாட்டி ஆமோதித்தாள் இன்னொருத்தி.

" பாத்தியா? இதைத் தான் நான் உங்ககிட்ட அப்போ சொன்னேன்? கல்யாணம்னதும் வெக்கப்பட்டது உன் காலம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் கிலோ என்ன விலைன்னு கேக்கறது தான் இந்தக் காலம். இப்படி ஓபனாப் பேசி ஆட்டிடியூட் காமிக்கறது தான் இந்தக் காலப் பெண்களுக்கான இலக்கணம். இப்போ புரியுதா நான் சொன்னதோட அர்த்தம் ? " என்று பெரியவர், எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தபோது வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.

அவர்களுடைய அவ்வளவு நேர சந்தோஷத்தைக் கலைத்து, அந்த வீட்டின் நிம்மதியைக் குலைக்கப் போகும் ஜீவன், வீட்டின் உள்ளே வருவதற்காக வாசலில் காத்துக் கொண்டு நிற்கிறது.
 
Author: SudhaSri
Article Title: ஏகாந்த வீணை -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Akhilanda bharati

New member
Joined
Jun 30, 2024
Messages
1

Nice start
 
Top Bottom