எல்லாருக்குமான பூமி!
சேச்சி குறித்த புகார்கள் மேலும் அதிகரிக்க, மருத்துவமனையின் அவுட் போஸ்ட் போலீஸை மருத்துவமனை நிர்வாகம் அணுகுவதும் அதிகரித்தது. அப்போது அங்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தார் கவிதா என்ற காவலர். சேச்சியின் உறவினர்களைத் தேடி அலைந்து, அவர் கதையைக் கேட்டு, அடிக்கடி பேசி இருவரும் நெருக்கமாகி விட்டனர். தினமும் கட்டன் சாயா (பாலில்லாத டீ) வாங்கித் தருவதிலிருந்து, தீபாவளி நேரம் புதுத்துணி எடுத்துத் தருவது வரை கவிதா பிரியத்துடன் சேச்சிக்கு எவ்வளவோ செய்தார். தன் வீட்டிற்கும் அவ்வப்போது அழைத்துச் சென்றார். பாதி நேரம் அவுட்போஸ்ட்டிலேயே கவிதாவுடன் அமர்ந்திருப்பார் சேச்சி.
தொடர் புகார்களால் மனநலப் பாதுகாப்பு சட்டத்தின்படி எஃப்.ஐ.ஆர் போட்டு சேச்சியின் உறவினர்களை விசாரணைக்கு அழைத்தனர் காவல்துறையினர். அவர்கள் தெளிவாகவே, 'எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கூறி கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றார்களாம். அது தெரிந்த போது, 'என் முப்பது பவுன் நகை அவங்க கிட்ட இருக்கு. எப்படி சம்பந்தம் இல்லைன்னு சொல்லலாம்?' என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார் சேச்சி. மருத்துவமனையில் இருந்து உறவினர் வீட்டுக்குச் சென்று சண்டையிடுவதும் திரும்பி வருவதுமாக இருந்தார். "என் முப்பது பவுன் நகையை வாங்கித் தாங்க, அது இல்லாம நான் எப்படிக் கல்யாணம் செய்றது' என்று எங்களிடமும் பஞ்சாயத்துக்கு வந்தார். சேச்சியைக் காப்பகத்தில் சேர்ப்பதுதான் நல்லது என்று சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள காப்பகங்களில் விசாரிக்க ஆரம்பித்தோம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதிமுறையைக் காரணமாகக் காட்டி சேர்க்க முடியாது என்றனர். இறுதியாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்ப்பது தான் நல்லது, அங்கு மின்னதிர்வு சிகிச்சை போன்ற உயர்சிகிச்சைகள் கொடுத்தால் ஒருவேளை அவர் குணமாகலாம் என்று மனநல மருத்துவர் பரிந்துரைக்க, அதற்கான முயற்சிகளில் இறங்கினோம்.
மேஜிஸ்ட்ரேட் ஒரு ஆர்டர் போட்டால்தான் கீழ்ப்பாக்கம் கொண்டு போக முடியும் என்று சொல்லப்பட்டது. 'அவ்வளவுதானே!' என்று எளிதாக நினைத்து களத்தில் இறங்கக் கடினமாகி விட்டது. நீதிபதி பலமுறை யோசித்து சேச்சியை நேரில் பார்க்க வேண்டும் என்று கூற, கவிதாவே அழைத்துச் சென்றார். முதல் ஒரு முறை அமைதியாக நீதிமன்றம் சென்று வந்தார் சேச்சி. 'இவரையா பைத்தியம்ங்கிறீங்க? நல்லாத்தானே இருக்காங்க' என்று நீதிபதி திருப்பி அனுப்பிவிட, மீண்டும் பழைய சம்பவங்கள்.
புயலும் அமைதியும் மாறி மாறி வர உடனிருந்த நோயாளிகள் மேலிடங்களுக்குப் புகார் அனுப்பினார்கள். இதைத் தொடர்ந்து நானும் அன்பிற்குரிய தோழி மனநல மருத்துவர் டாக்டர் தேவிபிரபாவும் சென்று நீதிபதியை சந்தித்து விளக்கமாக சேச்சி குறித்து கூறிய பின் மீண்டும் அழைக்கப்பட்டார். வேறு ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றதால் கொஞ்ச நேரம் சேச்சி காக்க வைக்கப்பட, கோபத்தில், 'ஒரு மந்திரியை எவ்வளவு நேரம் காக்க வைப்பீங்க?' என்று நீதிபதியை உரக்கத் திட்டியிருக்கிறார். அதன் பின்னரே நீதிபதிக்கு அவருடைய உண்மைநிலை புலப்பட்டிருக்கிறது. விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, உறவினர்கள் கூண்டில் வந்து பதில் சொல்ல வேண்டும், மருத்துவர், விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அனைவரும் வந்து முறைப்படி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பராமரிக்க முடியாது என்பதற்காகக் குறிப்பிட்ட தொகையை அபராதமாகக் கட்டிவிட்டு உறவினர் சென்றுவிட்டனர்.
நடைமுறைகள் எல்லாம் முடிந்து விட்டன, ஆணை வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம், மூன்று மாதங்கள் கடந்தும் ஆணை வரவில்லை.. அந்த நீதிபதியும் மாறுதலில் வேறு ஊருக்குச் செல்லப் போகிறார் என்ற தகவல் வந்தது. இன்னொரு நீதிபதி, இன்னொரு விசாரணை எல்லாம் முதலில் இருந்து தொடங்க முடியாது என்று முடிவு செய்து முயற்சியைக் கைவிட்டோம். ஆனால் அந்த நீதிமன்றத்தில் தன் கடைசி நாளன்று அந்த மாஜிஸ்ட்ரேட் சேச்சியைக் காப்பகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டார். அதுவும் அன்றே போகவேண்டும், சாதாரண வண்டியில் போகக்கூடாது- ஆம்புலன்ஸ் வேண்டும், செவிலியர் உடன் செல்ல வேண்டும், துணைக்கு ஆண் போலீஸ், பெண் போலீஸ் இரண்டு பேர் வேண்டும் எல்லாம் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 450 கிலோ மீட்டர் என்பதால் வாகனத்திற்கான செலவுத் தொகை பெரிதாக இருந்தது. மருத்துவர்கள் சேர்ந்து செலவழித்து ஒரு தனியார் ஆம்புலன்ஸில் கவிதா மற்றும் இன்னுமொரு காவலர் துணைக்குச் செல்ல, சென்னைக்குப் பயணமானார் சேச்சி.
ஏறும் நேரத்தில் தன் பொருட்களும் வேண்டும் என்று அவர் ஏற மறுக்க, மம்முட்டியைப் பார்க்கப் போகிறோம், போய்விட்டு வந்துவிடலாம் என்று ஏமாற்றிக் கிளப்ப வேண்டியதாயிற்று கவிதாவுக்கு. மாலை மூன்று மணிக்குக் கிளம்பியவர்கள் பத்து மணிக்குச் சென்னையை நெருங்க, ஆம்புலன்சிலேயே உடை மாற்றி, தலை சீவி தன்னை அழகுபடுத்திக் கொண்டாராம் சேச்சி. வண்டி மருத்துவமனைக்கு வரவும் உண்மை புரிந்து அழுதவரைக் கவிதா கட்டாயப்படுத்தி விட்டுவிட்டு வந்திருக்கிறார். வெகு தூரம் வரை அவர் அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகக் கண்கலங்கச் சொன்னார் மறுநாள் வந்து சேர்ந்த கவிதா.
அதற்கு மறுநாளே சேச்சி விட்டுச் சென்ற பொருட்களை எடுக்கவென்று உறவினர்கள் இரண்டு பேர் மருத்துவமனைக்கு வந்தனர். இதற்கு மட்டும் வருகிறார்களே என்று கடுப்பாகிப் போனது எல்லாருக்கும். இரண்டு நாட்கள் கழித்து கீழ்ப்பாக்கத்தில் விசாரிக்கையில் 'ஒன்றும் பிரச்சினை இல்லை, சற்று சோகமாக மட்டும் இருக்கிறார்' என்றார்கள். தலைக்கு மொட்டை போட்டிருப்பார்கள், சீருடை அணியச் சொல்லியிருப்பார்கள். நீளமான முடியும் நன்றாக ஆடை அணிவதும் அவருடைய அடையாளங்கள்.. அதனால் சோகம் வந்திருக்கும், போகப் போக சரியாகிவிடும்.. என்று எங்களை நாங்களே தேற்றிக்கொண்டோம். ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட பந்தம் அல்லவா? மருத்துவமனை பணியாளர்கள் கூட 'சேச்சி இருந்தவரை வார்டு சுத்தமா இருந்துச்சு.. திரும்பியும் மோசமாயிடுச்சு' என்று கூற ஆரம்பித்தனர்.
ஒரு மாதம் போயிருக்கும்.. சேச்சியை மருத்துவமனை மறக்கத் துவங்கிய நேரம். கவிதா கண்களில் கண்ணீருடன் ஒருநாள் வந்தார். "மேடம்! சேச்சி இன்னைக்குக் காலையில தவறிட்டாங்களாம். ஹார்ட் அட்டாக்காம்!" என்றார். எங்களுக்கும் திக்கென்று இருந்தது. 'எத்தனை பைத்தியத்தை காப்பாத்த முடியும் உங்களால?' என்று இதற்கு முன் முணுமுணுத்தவர்கள் இப்போது நேரடியாகவே கேட்டனர், "அந்த அம்மா இங்கேயே சுத்திக்கிட்டு இருந்திருந்தாக் கூட இந்நேரம் உயிரோட இருந்திருக்குமோ?" என்று. உண்மையில் எங்களுக்கும் அந்த கேள்வி இருக்கத்தான் செய்தது.
ஏன் சேச்சி விஷயத்தில் இத்தனை குழப்பம்? ஒரு வருடம் மருத்துவமனையில் இருந்தும் அவரை ஏன் குணப்படுத்த முடியவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். சேச்சிக்கான சிகிச்சையில் எங்கள் முன் மூன்று சவால்கள் இருந்தன. முதலாவது, அவரது உடல்வாக்கினால் பல மருந்துகளை அவருக்குக் கொடுக்க முடியாது. எப்போது வெளியே செல்வார், எப்போது இருப்பார் என்று தெரியாததால் தலைசுற்றல், உறக்கம் போன்ற பக்க விளைவுகளை அளிக்கக்கூடிய மருந்துகளையும் கொடுக்க முடியவில்லை. இரண்டாவதாக, சில சிகிச்சைகளுக்கு உறவினர் ஒப்புதல் தேவை. நோயாளியும் முடிவெடுக்க முடியாத தெளிவற்ற மனநிலையில் இருப்பதால் உயிர்காக்கும் சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் ஆரம்பிப்பதில் சட்ட ரீதியான சிக்கல்களும் இருந்தன. மூன்றாவதாக, சிகிச்சையை ஏற்றுக்கொண்டு குணமடைய சில அறிகுறிகள் தோன்றும் நேரம் அவரது மாயைகளை அதிகப்படுத்த, தொலைபேசியிலும் நேரிலும் கிண்டல் செய்யும் வகையில் யாராவது புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தனர். இது மீண்டும் மீண்டும் அவரைச் சுழலுக்குள் தள்ளுவதாகவே இருந்தது.
உலகமெங்கும் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு மன நோய்கள் பெருகி வருகின்றன. இன்றைய வாழ்க்கைச் சூழலும் மனஅழுத்தத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்பவும் மனநோய்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் மனநல மருத்துவர்களும் ஆலோசகர்களும் இல்லை. இலவசமாகவே அளித்தால் கூட தொடர்சிகிச்சை, ஆலோசனை பெற குறிப்பிட்ட தேதியில் பலர் வருவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். உடல்நலம் போன்றதே மனநலமும், உடலின் ஒரு பகுதியே மனமும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அத்தகைய புரிதல் உருவானால் சேச்சியைப் போன்றே ஆதரவற்றுத் திரியும் வளர்ந்த குழந்தைகள் தங்களுக்குமான இப்பூவுலகில் நிம்மதியுடன் இருக்கலாம்.

Author: siteadmin
Article Title: எல்லாருக்குமான பூமி!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.