• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-23

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
என்றென்றும் வேண்டும்-23

உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு ரிக் வேதம். சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நா ஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000-க்கு முன் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமின்றி துருக்கியில் கிடைத்த களிமண் க்யூனிபார்ம் கல்வெட்டில் ரிக்வேதத்தில் தெய்வங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் இருக்கிறதோ அதே வரிசைக் கிரமத்தில் இருப்பதை கி.மு.1400ல் கண்டுபிடித்தவுடன் ரிக்வேதம் கி.மு.1400லேயே துருக்கிவரை சென்றதும் உறுதியாகிவிட்டது.

சரஸ்வதி நதி பற்றித் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேலான இடங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆக ரிக் வேதத்தின் எந்தப் பகுதியையும் எவரும் .கி.மு2000க்குக் குறைத்து மதிப்பிட முடியாது. அதாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு முந்தையது வேத கால நாகரீகம்

இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்பதற்கு அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள்– 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது முதல், நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாகின. அந்தப் பிரபஞ்சம் இன்னும் பலூன் ஊதுவது போல பெருகிப் பரந்து விரிந்து கொண்டே போகிறது. முடிவு என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த மாபெரும் வெடிப்பு (BIG BANG) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியாது – என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

இதில் ஒரு பெரிய விந்தை என்னவென்றால் ஒரு பிரம்மாவின் யுகக்கணக்கில் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரபஞ்சம் தோன்றியதாக இந்து சமய நூல்களும் பகர்கின்றன. அது மட்டுமின்றி காலம் என்பது வட்ட வடிவில் (Cyclical, not linear) பயணம் செய்யும் ; ஆகையால் இது மீண்டும் சுருங்கி, மீண்டும் விரிவடையும் என்றும் இந்து சமய நூல்கள் விரித்துரைக்கின்றன. இனி நாசதீய சூக்தத்தில் உள்ள அதிசய விஷயத்தைக் காண்போம்.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-129)

சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சூக்தம் என்னும் துதி.

ஒரு விஞ்ஞானியோ நாஸ்தீக வாதியோ, மாபெரும் வெடிப்புக்கு (Before The Big Bang) முன்னர் என்ன இருந்தது? அதை யார் தோற்றுவித்தார்? அவர் எப்படி வந்தார் அல்லது அது எப்படி வந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டே போனால் விடையே கிடைக்காது.

ஆனால் ரிக்வேத ரிஷியோ மாபெரும் வெடிப்பை வர்ணித்துவிட்டு இது கடவுளின் இச்சையால் ஏற்பட்டது என்று மொழிகிறார். விஞ்ஞானிகள் காரணமே தெரியாது என்று சொன்ன இடத்தில் கடவுள் என்பவரையும் அவரது விருப்பத்தையும் பகர்ந்தவுடன் விடை கிடைத்துவிடுகிறது.

7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேத கால இந்துவுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வ, அதிசய, அற்புத சிந்தனை பிறந்தது? அப்படியானால் அவர்கள் நாகரீகத்தின் சிகரத்தில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும்?

இதோ அற்புதமான நாசதீய சூக்தம்:–

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதுனும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

இப்பேற்பட்ட ரிக் வேதத்தில் கடைசி பாடலில் உலக சமாதானம் , உலக மக்கள் நலம் பற்றிய பாடல் இருப்பது – 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னரே — வேத கால ரிஷிகள் ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடி இருப்பது உலகையே வியக்க வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னரே இப்படி ஒரு சிந்தனை எழுந்தது வேத கால நாகரீகம் ஒன்றே முதன்மையானது என்பதைக் காட்டிவிட்டது.

இப்படி பசு மாடு, குதிரை, டெஸிமல் சிஸ்டம் , உலக மக்கள் நலம் என்பதில் எல்லாம் முன்னொட்டியில் நிற்கும் விஞ்ஞானத்திலும் முன்னனியில் இருப்பது எல்லோர் மூக்கிலும் விரலை வைக்க வைத்து விட்டது.

5.அந்தக் கயிறு– இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

மாபெரும் வெடிப்பு என்பதை இறைவனின் தவ வலிமையில் பிறந்த இச்சை- காமம்- விருப்பம் -ஆசை என்று அற்புதமாக வருணிக்கிறார் வேத காலப் புலவர். கவிஞருக்கே உரித்தான பாணியில் சந்தேகக் கேள்விகளை எழுப்பி—அதாவது தடை எழுப்பி விடை காண்கிறார்.



அன்று இரவு காயத்ரி தங்களின் அறைக்கு வந்த போது தான் விஸ்வநாதனால் அவளை தனியாக சந்திக்க முடிந்தது.

காயத்ரியின் முகத்தில் தான் அம்மாவாகப் போகும் சந்தோசம் துளியும் இல்லை. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பத்மா வற்புறுத்தி கொடுத்த இரண்டு இட்லிகளை சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ள சென்று விட்டாள்.

அவள் உண்டாகி இருப்பது தெரிந்ததில் இருந்து சந்தோஷத்தில் மூழ்கி இருந்த அத்தையும் அம்மாவும் அவள் முகபாவத்தை கவனிக்கவில்லை.

அவள் முகவாட்டத்தையும் உடம்பு சரியில்லாததால் தான் இப்படி இருக்கிறாள் என்று எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் அவளையே கவனித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் அதை நன்றாகவே உணர்ந்தான்.

எந்த பெண்ணும் தான் கருவுற்றிருக்கும் செய்தியை கணவனிடம் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைப்பாள்.

அது போல தன் மனைவியும் சொல்வாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே.

அவள் அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவன் பல முறை அவள் கண்களை சந்திக்க முயன்றும் அவள் அதற்கு பதில் கொடுக்கவே இல்லை.

பத்மா விஸ்வநாதனை அழைத்து "அம்பி! கோந்தைக்கு ஒடம்பு முடியல போலருக்கு. அதோட டாக்டர் கிட்ட போய் காட்டி அவா சொன்ன பிறகு தான் நாம நிச்சயமா எடுத்துக்கணும்.

நாளைக்கி காயத்ரியை டாக்டர் கிட்ட காட்டி அவா உறுதியா சொன்னதும் காயத்ரியோட அம்மா அப்பா கிட்ட சொல்லணும். நானும் கூட வரேன். நீயும் கூட வா..." என்று கட்டளை இட்டார்.

விஸ்வநாதன் தன் மனதை மறைத்து அம்மாவுக்கு தலையை ஆட்டினாலும் மனதில் ஒரு வலி. எல்லா பெண்களுக்கும் சந்தோசம் தரும் நிகழ்வு இவளுக்கு தரவில்லையா?

அவள் சோகம் அவன் மனதில் இருந்த சந்தோஷத்தையும் அழித்து விட அதன் பிறகு அம்மா சொன்னதை இயந்திர கதியில் தான் கேட்டான் விஸ்வநாதன்.

அவனை பிடிக்காமல் தானே அவள் கல்யாணம் செய்து கொண்டாள். அன்று மறுபடியும் அவளே சொல்லவில்லையா?

நளினாவுக்கு கணவன் சரியில்லாமல் போனதால் அன்று ஒரே ஒரு நாள் அவன் மேல் அவளுக்கு காதல் வந்ததாக நினைத்திருப்பாள்.

இப்படி பலதையும் எண்ணி மனதுக்குள் குழப்பிக் கொண்டு விஸ்வநாதன் தங்கள் அறைக்குள் நுழைய காயத்ரி அவர்களின் படுக்கையில் நடுவில் படுத்திருந்தாள்.

விஸ்வநாதன் அவளை பார்த்த பிறகும் காயத்ரி மௌனமாக இருக்க விஸ்வநாதன் "காயத்ரி கொஞ்சம் நகந்து படுத்துக்கோ..." என்று சொன்ன போதும் அவள் நகரவும் இல்லை. பதில் சொல்லவும் இல்லை.

அவனுக்கிருந்த மனநிலையில் அவளின் இந்த செயல் எரிச்சலைத் தர மேலே அவளிடம் பேச விரும்பாமல் கட்டிலில் இருந்த தலையணையை கையில் எடுத்தான்.

அவன் கையில் எடுத்த தலையணையை பிடுங்கி எறிந்தவள் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

விஸ்வநாதன் "ம்ச்.." என்று சலிப்புடன் "என்ன ஆச்சு காயத்ரி? ஏன் அழறே? நோக்கு இந்த குழந்தை வேண்டாம்னா நாளைக்கே டாக்டர் கிட்ட அழைச்சிண்டு போறேன். இப்ப தானே ஆரம்பம். மாத்திரைலயே கரைச்சிடுவா...?"

என்று விரக்தியின் உச்சியில் சொன்னான்.

உண்டாகி அந்த சந்தோஷத்தை முழுதாக நினைக்க கூட இல்லை. அதற்குள் தானே தன் வாயால் அதை கலைத்து விடலாம் என்று சொன்னது அவன் கண்ணில் நீரை வரவழைத்தது.

அதற்குள் காயத்ரி விலுக்கென்று கட்டிலில் இருந்து எழுந்தவள் அவனை கட்டிக் கொண்டு 'கோ' என்று அழ என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே நின்றான்.

தன் குழந்தையை உதித்ததுமே அழித்து விடு என்று சொல்வது ஒரு கொடுமை என்றால் கருவை அழிப்பது பிரம்மஹத்தி தோஷம் என்று அவன் மனதை அறுத்தது.

காயத்ரிக்கு அதுவரை தன்னைப் பற்றி மட்டுமே தான் யோசித்து பழக்கம்.

விஸ்வநாதனிடம் கூட அவள் அப்படித் தான். அவன் என்ன நினைக்கிறான் என்றோ அவன் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ முயன்றதே இல்லை.

அதே போல இன்றும் இருந்தவள் வழக்கம் போல விஸ்வநாதன் தன்னை சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருக்க அவன் "வேண்டாம்னா கலைச்சிடு" என்றதும் அவளால் தாங்கவே முடியவில்லை.

விஸ்வநாதன் அவளை தேற்றவோ கண்ணீரை துடைக்கவோ செய்யாமல் அப்படியே இருக்க எப்போதும் "பட்டூ.." என்பவனின் அழைப்பு அன்று காயத்ரி என்று இருந்தது வேறு அவளால் தாங்கவே முடியவில்லை.

தானே அவன் கையை எடுத்து தன்னை சுற்றிப் போட்டுக் கொண்டவள் விசும்பியபடியே

"நான் ஏற்கனவே சொல்லிருக்கேனோனோ? என்னை நீங்க கோச்சுக்கவே படாதுன்னு..." என்று கேட்க விஸ்வநாதனால் அவன் கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியவில்லை.

அவள் என்ன செய்தாலும் அவன் பட்டூவை அவனால் கோபிக்க முடியாது. அவனையும் மீறி அவன் கைகள் மெல்ல அவளை சுற்றி அணைத்துக் கொண்டது.

"சரி..விடு பட்டூ.. ஏற்கனவே நோக்கு முடியல..இதுல சரியா சாப்பிட வேற இல்ல. இன்னும் அழுதேன்னா ஜொரம் வரும்... பேசாம படுத்துக்கோ..." என்று அவன் கண்களை துடைத்து விட்டான்.

அவன் மேலேயே சாய்ந்து கொண்டவள் சமாதானம் ஆக சற்று நேரம் ஆக விஸ்வநாதன் பெருமூச்சு விட்டான்.

அவள் மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து "ஒங்களுக்கு இந்த குழந்தை வேண்டாமான்னா?" என்று கேட்க விஸ்வநாதனுக்கு மறுபடியும் முதலில் இருந்தா என்று இருந்தது.

இப்போது தான் குழந்தை இல்லாவிட்டால் என்ன பட்டூவே போதும் என்று முரண்டு பிடித்த மனதை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

அதற்குள் அவள் மீண்டும் அதையே கேட்கவும் அவள் தோளைப் பிடித்து தன்னை விட்டு நகர்த்தி அவள் முகம் பார்த்தான்.

அவள் முகத்தில் அந்த குழந்தைத்தனம் அப்படியே இருக்க விஸ்வநாதன் அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்.

"அது இருக்கட்டும். எதுக்கு அழுதே ..? அதை சொல்லு.." என்று கேட்டான்.

அவள் முகம் வாட "நான் அத சொல்ல தான் வந்தேன்.." என்று சின்னக் குரலில் சொன்னவள் மேலே பேசினாள்.

"எனக்கு குழந்த உண்டானத கூட கண்டுபுடிக்க தெரியல. அதையே அம்மா தான் பாத்து சொல்ல வேண்டியிருக்கு.

இந்த லட்சணத்துல நான் எப்படி குழந்தையை பெத்து வளக்கப் போறேன்னு இருக்கு..

நேக்கு சுத்தமா சமத்து இல்லியே..? அந்த பயத்த உங்க கிட்ட சொல்ல தான் வந்தேன். நீங்களும் என்னை திட்டறேள்.."

காயத்ரி உதடு பிதுங்க மீண்டும் அழ ஆரம்பிக்க விஸ்வநாதனுக்கு திடீரென்று கிடைத்த நிம்மதியில் சத்தம் போட்டு சிரித்தான்.

காயத்ரி எதற்கு உம்மென்று இருந்தாள் என்று தெரிந்ததும் அவன் மனதில் இருந்த பாரம் எல்லாம் போனது போல லேசாக ஆகி விட காயத்ரியை அருகில் இழுத்தவன் "என் பட்டுக்குட்டி டி நீ..." என்றவன் அவள் கன்னத்தை அழுத்தி கடித்தான்.

அவன் அவள் அழுகைக்காக என்னென்னவோ காரணங்கள் நினைத்திருக்க அவள் சொன்ன காரணம்..?

நினைத்து நினைத்து சிரித்தான்.

தன் கவலைக்கு சமாதானம் சொல்லாமல் சத்தமாக சிரித்ததோடு இல்லாமல் கன்னத்தை வேறு கடித்து வைக்க காயத்ரிக்கு பயங்கர கோபம் வந்தது.

பலம் கொண்ட மட்டும் அவனை தன்னிடம் இருந்து தள்ளியவள்

"போங்கோன்னா.. இனிமே என்னோட பேசாதீங்கோ., என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா..?" என்று முறைத்தவள் விறுவிறுவென்று கட்டிலில் போய் படுத்து முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவள் போவதையே ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த விஸ்வநாதன் கட்டிலில் போய் அமர்ந்து அவளை திமிரத்திமர தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

"பட்டூ.."என்று அன்பாய் அழைக்க காயத்ரியால் அவள் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

அவன் கடித்ததில் சிவந்திருந்த கன்னத்தை தடவியபடி பாவமாக

"ஏன்னா இப்படி கடிச்சேள்..? எனக்கு வலிக்கறது..." என்று சாதுவாக சொல்ல கன்னம் சிவந்திருந்ததை பார்த்ததும் அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"சாரி டா.." என்று அந்த கன்னத்தை வருடி விட்டவன்

"நீ உம்முனு இருந்ததும் அழுததும் பாத்துட்டு நோக்கு குழந்தை பிடிக்கலியோனு நினைச்சிட்டேன். அதான் ரொம்ப வருத்தமா ஆயிடுத்து .."

என்று அவன் விளக்கம் கொடுக்க 'அட அசடே..!" என்பது போல அவனை பார்த்தாள்.

"யாராவது குழந்தையை போய் வேண்டாம்னு சொல்லுவாளா? எனக்கு முன்னயே விவரம் போறாது. அம்மா திட்டிண்டே இருப்பா. காலேஜ்ல இது போல பேசற க்ரூப்ல நான் தலையை காட்டினா நீ போ பேபின்னு பரிகாசம் பண்ணுவா..

ஆஃபீஸ்லயும் கல்யாணம் பண்ணிண்டவா எல்லாம் ஒரு க்ரூப்பா இருப்பா. அவா எல்லாம் என்னென்னவோ பேசிப்பா.

எனக்கு ஒண்ணும் புரியாது. அதனால நான் கிட்ட போனாலே நீ போம்மா அமுல் பேபின்னு கிண்டல் பண்ணுவா.

இதெல்லாம் சொல்ல அதனால நேக்கு யாருமே இருந்ததில்ல...இப்ப அதனால நான் ப்ரெக்னண்டா இருக்கறத கூட அம்மா சொல்லி தான் தெரிஞ்சிண்டேன்..

பேக்கு மாதிரி நூடுல்ஸ் சாப்பிட்டு தான் வாந்தி வந்ததுன்னு நாள் பூரா நினைச்சிண்டு இருந்திருக்கேன். அதுக்கு பயந்து தான் உங்களுக்கு கூட போனே பண்ணல. இப்படி ஒரு தத்தி இருப்பேனான்னா?"

கழிவிரக்கத்தில் மூக்கு விடைக்க அவள் பேச விஸ்வநாதன் அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.

"இந்த குழந்தைத்தனம் தான் பட்டூ உன் அழகு. உன்ன பாத்துக்க தான் நாங்க இருக்கோமே... நீ இப்படியே இருடா பட்டுக்குட்டி ..." என்று சமாதானம் செய்தான்.

"அப்படி இல்லைன்னா. எனக்கு என்னிக்கி பொறுப்பு வரது..?" என்று முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்டாள் காயத்ரி.

சின்ன குழந்தை நான் பிக் கேர்ள் ஆகிட்டேன் என்று சொல்வது போல இருந்தது அவனுக்கு.

"அதனால என்னடா மொக்கள குட்டி? இந்த பாப்பா பொறந்து வளருமோனோ? அது கூடவே நீயும் வளந்துக்கோ...?" என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட காயத்ரி முறைத்தாலும் அவன் மார்பிலேயே சௌகரியமாக சாய்ந்து கொண்டாள்.

அவளை இதமாக அணைத்துக் கொண்டவன் "குழந்தை பொறக்கறவரைக்கும் நீ இனிமே கடையில விக்கற பண்டங்களை சாப்பிடக் கூடாது.

நாளைக்கு அம்மா உன்னை டாக்டர் கிட்ட கூட்டிண்டு போய் காட்டணும்னு சொல்லிண்டு இருக்கா. நாளைக்கு லீவு போட்டுடறியா?" என்று கேட்டான்.

அவள் சம்மதமாய் தலையசைக்க "அப்படியே உங்க அம்மா அப்பா கிட்டயும் சொல்லணும்னு சொல்லிண்டு இருக்கா.

என்ன சொல்றே? போன்ல சொல்றியா? இல்ல உங்க அப்பா அம்மாவ பாக்கணும்னா நேர போயிட்டு வரலாம்..."

மறுநாளைய திட்டங்களை பற்றி அவன் பேச அவள் மனமோ அம்மா அப்பாவை நினைத்தது. கல்யாணம் ஆனதில் இருந்தே அவர்களோடு அவ்வளவாக பேசவே இல்லை.

மறு வீடு போனதோடு சரி. அதன் பிறகு இரண்டு முறை அவர்கள் வந்த போதும் பொதுவாக பேசியது தான்.

என்னவோ அவளால் இன்னும் அவர்களை மன்னிக்க முடியவில்லை. இப்போது அதனால் விஸ்வநாதன் கேட்ட போதும் "போகல்லாம் வேண்டாம்னா. போனே பண்ணிடலாம்..."

என்றவள் பேச்சை மாற்றும் விதமாக

"நமக்கு என்ன குழந்தை பொறக்கும்னா..?" என்றவள் கேள்வியை முடிக்கும் முன்னே "வேறென்ன..? மனுஷக்குட்டி..தான்" என்று விஸ்வநாதன் சிரித்தான்.

அவனுக்கு அழகு காட்டிய காயத்ரி "அய்ய..! சிரிப்பே வரலன்னா..! நான் பையனா பொண்ணா ன்னு கேட்டேன்.." என்று தொடர்ந்தாள்.

"என்னை மாதிரியே ஒரு பையன் தான் பொறக்கணும்டா பட்டூ .." என்று விஸ்வநாதன் சிரிக்காமல் சொல்ல காயத்ரிக்கு புரியவில்லை.

உன்னைப் போல அழகான பெண் குழந்தை வேண்டும் என்று சொல்லுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் பதில் ஏமாற்றம் தந்தது.

"ஏன்னா..? உங்களுக்கு பொண்ணு வேண்டாமா..?" என்று சோகமாய் கேட்டாள்.

"பொண்ணு வேணும்டா..பட்டூ..ஆனா அதுவும் உன்னை மாதிரியே அசடா இருந்தா என்ன பண்றது? ஆத்துக்கு ஒரு அசடு போறுமேன்னு தான் என்னை மாதிரி புத்திசாலியா பொறக்கட்டும்னு சொன்னேன்..."

என்று சொல்லி சிரிக்க காயத்ரிக்கு கோபம் வந்தது.

"உங்கள...உங்கள..." என்று கையை பிசைந்து கொண்டு முறைத்தவளை பார்த்து சிரித்த விஸ்வநாதன் "என்ன பண்ணப் போறே?" என்று கேட்டவாறே நெருங்க சரியாக அந்த நேரம் அவன் செல் போன் அடித்தது.
 

Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்-23
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom