என்றென்றும் வேண்டும்-10
சமஸ்க்ருதம் என்றால் சன்ஸ்+க்ருத் அதாவது நன்கு செய்யப்பட்ட என்ற பொருள். முன்பிருந்த ஒன்று நன்கு ஆக்கப்பட்டது என்றும் பொருள்படுகிறது. பாரதம் உலகிற்கு தந்த பல மகோன்னதங்களில் தமிழும் சமஸ்க்ருதமும் உண்டு. தமிழ் இதை விட பழமையானது என்ற கணிப்பும் உண்டு.
'சமஸ்கிருதம்' என்றால் 'செய்யப் பெற்றது' அல்லது 'சொல்லப் பெற்றது' என்று பொருள் உண்டெனக் காண்கிறோம்.
பின் எங்கே செய்யப் பெற்றது? எவ்வாறு சொல்லப் பெற்றது?
மத்திய ஆசியாவிலிருந்து மேற்கே சென்று ஐரோப்பிய நாட்டில் தங்கிப் பின் பலவாறு பிரிந்து நின்ற பண்டைய மரபினர் தத்தமக்கு வேண்டிய மொழிகளைச் செய்து ஆக்கிக் கொண்டமை போன்று,
அதே மத்திய ஆசியாவிலிருந்து ஏறக்குறைய அதே காலத்தில் தெற்கு நோக்கி வந்த பழைய இனத்தவர் சிந்துநதி எல்லையில் வந்தபோது புதிதாக ஆக்கிக் கொண்ட மொழியே 'சமஸ்கிருதம்’. அவரே பின், 'வடவாரியர்' எனக் குறிக்கப்பெறுவாராவார்கள்.
சமஸ்கிருத இலக்கிய அறிவு மரபின் தொடக்கம் வேதகாலத்தில் தொடங்குகின்றது.வேத இலக்கியத்தின் காலத்தை ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.மு. 1500 –இலிருந்து கி.மு. 200 வரை என வரையறை செய்கின்றனர்.
மக்கள் வாய்மொழியாக வழங்கி வந்த நாடோடிப்பாடல்களின் தொகுப்பே வேத இலக்கியம். இது அபர்வு சேயம் எனவும் அழைக்கப்படுகின்றது.
வேத இலக்கியம் தொடங்கி, சமஸ்கிருத இலக்கிய மரபு என்பது தர்மா, அர்த்தம், காமம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு பேறு) என்னும் நாற்பொருளின் அடிப்பையிலேயே அமைந்து, இறுதி பகுதி மோட்சத்தையே வலியுறுத்துகின்றன.
வேத இலக்கியத்தை ருக், யசூர், சாமம், அதர்வம் என நான்காகக் கூறுகின்றனர். இவ்வேதங்களின் தொகுப்பு சம்கிதை எனப்படும்.
ரிக்வேதப் பாக்கள் கி.மு. 2500 இல் தோன்றின என்பது ஆராய்சியாளர்கள் கருத்து. நான்கு வேதத்துள் முதல் மூன்று ரிக், யசூர், சாமம் மட்டுமே திரயீ வித்யா என மூன்று அறிவுகளாய் கொள்ளப்பட்டன.
அதர்வ வேதம் பின்னரே நான்காவது வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வேதத்தையும் விளக்குவதற்கு தோன்றிய இலக்கிய வடிவம் பிராமணங்கள். இந்த பிராமணங்களின் இறுதி பாகம் ஆரணியகம் என்று கொண்டு காட்டில் ஓதி வந்தனர்.
இதன் முடிவில் தான் பரம்பொருள் விளக்கும் உபநிடதம் காணப்படுகின்றது. இது தான் வேதாந்தம் அல்லது மறைமுடி என்று சொல்லப்படுகின்றது.
வடமொழி நூல் வரலாறு இருபகுதி உடையது வைதிகப் பகுதி ஒன்று, பிற்பகுதி மற்றொன்று. வேதப்பகுதியில் வேதங்கள் சூத்திரங்கள் இவற்றைப் பற்றிய வரலாறு கூறப்படும். எஞ்சியவை பிற்பகுதியில் கூறப்படும்
அதாவது பாணினிக்கு முன் உள்ள வேத இலக்கியங்கள் வைதிக இலக்கியம் என்றும் பாணினிக்குப் பின் தோன்றிய நூல்கள் சமஸ்கிருத இலக்கியம் என்றும் கொள்ளப்படுகின்றது.
பார்ட்டி மைலாப்பூரில் ஒரு ஸ்டார் ஹோட்டலில். போக்குவரத்து நெரிசலில் நீந்தி போகவே நேரம் ஆகும் என்று ஒரு மணி நேரம் முன்பே இருவரும் அவர்கள் அறையிலேயே தயாராகிக் கொண்டிருந்தனர். காயத்ரி ஒரு ஸ்லீவ் லெஸ் டிசைனர் அனார்கலி சல்வார் அணிந்திருக்க விஸ்வநாதன் அப்போது தான் அறைக்குள் நுழைந்தான்.
துண்டு போல ஷால் ஒரு தோளில் தொங்க நீண்ட தலைமுடியை வாரி ஒரு களிப்பில் அடக்கி முடியை விரித்து விட்டிருந்தாள்.
அவளுடைய சிவந்த நிறத்துக்கு அந்த கருநீல சல்வார் அழகு செய்ய நெற்றியில் அதே நிற பொட்டு. வெளிர் ரோஸ் நிற லிப்ஸ்டிக் அவள் உதட்டை ரோஜாவாய் காட்டியது.
விஸ்வநாதன் உள்ளே நுழைந்ததும் முகம் மலர "நன்னா இருக்கான்னா?" என்று கேட்டாள். இந்த மாதிரி உடையெல்லாம் அவள் அம்மா வீட்டில் போட தடை. இது அரவிந்தோடு மாலில் சினிமா போன போது வாங்கியது.
இருவருக்கும் உணவு, சினிமா இசை என எல்லாவற்றிலும் ஒரே விருப்பம் இருக்கவே இந்த ஒரு வாரத்திலேயே அவர்கள் மிகவும் நெருங்கி விட்டனர்.
காலையில் விஸ்வநாதன் ப்ரோஹிதத்திற்கு கிளம்பி போன பிறகு இருவரும் கொட்டம் அடித்தனர்.
காயத்ரிக்கு புதிதாக ஒரு தம்பி கிடைத்த உணர்வு. பெரியவர்களும் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை என்பதால் ஒரே கும்மாளம் தான்.
மால் சினிமா என்று அவனோடு ஆசை தீர சுற்றிய காயத்ரிக்கு இன்று காலை அவன் மீண்டும் கிளம்பியதும் துக்கம் தொண்டையை அடைத்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டே அவனை வழியனுப்பிய காயத்ரியை விஸ்வநாதன் உட்பட எல்லோரும் சிறு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவனும் மற்ற யாரையும் கண்டு கொள்ளவில்லை.
"மன்னி! வருத்தப்படாதீங்கோ. நாம போன்ல பேசிக்கலாம். வாரம் ஒரு நாள் தான் அலவ் பண்ணுவா. அப்போ நீங்க பேசுங்கோ. அண்ணா அடுத்த மாசம் என்னை பாக்க வரச்சே நீங்களும் வாங்கோ. அங்கயும் நாம வெளில போவோம். இன்னும் மூணு மாசம் கழிச்சு லீவ் விடுவா. அப்ப ஓடி வந்துர்றேன்...சரியா? "
என்று போகும் வரை அவளிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். விஸ்வநாதன் தான் கிளப்ப வேண்டியிருந்தது.
"நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருந்தா ட்ரெயின் போய்டும் டா..! கிளம்பு..!"
கண்ணை துடைத்துக் கொண்டு காயத்ரி தலையாட்ட பத்மா தான் அதட்டினார்.
"அழாம அவனை அனுப்பி வை காயத்ரி. இன்னும் கொஞ்ச வருஷம் தான் அப்புறம் அவனும் இங்க தான் இருக்கப் போறான். தோ இருக்கற கும்பகோணத்துக்கு இத்தனையா பண்ணுவே? டேய்..! நீ என்னமோ உங்க மன்னிய தண்ணியில்லா காட்டுல விட்டுட்டு போற மாதிரி ரொம்ப பண்ணாதே டா..."
அரவிந்த் கிளம்பிப் போன பிறகும் உம்மென்று இருந்தவள் மாலையில் தான் பார்ட்டிக்கு கிளம்பும் உற்சாகத்தில் சகஜமானாள். அந்த உடையை அத்தையிடமும் மாமியாரிடமும் ஆசையாய் கொண்டு போய் காட்ட அதில் கையில்லாமல் இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அவள் மனம் கஷ்டப்படுமே என்று "நல்லாயிருக்கு மா.." என்பதோடு நிறுத்திக் கொண்டனர்.
இப்போது ஆசையாய் விஸ்வநாதனிடம் தன் அலங்காரத்தை காட்ட முதல் முறையாக அந்த அறையில் அவன் முகம் இறுகியது.
"இந்த ட்ரெஸ் வேண்டாம். வேற போட்டுக்கோ!"
அவன் சொன்ன விதமே இதில் மேலே விவாதம் செய்ய ஒன்றுமில்லை என்பது போல இருக்க காயத்ரியின் முகம் வாடியது.
"ஏன்னா..? இது நன்னா தானே இருக்கு.. ஏன் வேண்டாங்கரேள்..?"
ஆசை ஆசையாய் அலங்காரம் செய்து கொண்டவள் முகம் வாட கேட்க விஸ்வநாதன் பதில் சொன்ன போது குரல் இன்னும் கடினமாகி இருந்தது.
"நீ இதை தான் போட்டுக்க போறேன்னா நாம பார்ட்டிக்கே போகப் போறதில்ல.."
காயத்ரிக்கு அவன் அதிகாரமான குரலில் கோபம் வர துணிந்து கேட்டே விட்டாள்.
"உங்களை ஜீன்ஸ் போட்டுக்க சொன்னப்போ மட்டும் என் இஷ்டம்னு சொன்னேளே? இப்ப நான் மட்டும் ஏன் என் இஷ்டப்படி ட்ரெஸ் பண்ணிக்கப் படாது..?"
அலமாரியில் இருந்து தனக்கு வேஷ்டியும் சட்டையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் அவளை திரும்பிப் பார்த்தான்.
காயத்ரியின் கண்களோ அவனை சந்திக்க தைரியம் இன்றி க்ரோதத்துடன் அவன் கையில் இருந்த வேஷ்டி சட்டையை முறைத்தன.
திரும்பி அவள் முகத்தை பார்த்த விஸ்வநாதனின் கண்கள் அவள் தோளையும் ஷாலையும் பார்த்து அந்த உடை ஏன் கூடாது என்பதற்கான காரணத்தை சொல்லியது.
அவன் பார்வையிலேயே அவன் மறுத்ததற்கான காரணம் புரிய "அம்மாவும் அத்தையும் நன்னா இருக்குன்னு சொன்னாளேன்னா..." என்று சொன்ன போது காயத்ரி குரல் அழமாட்டா குறையாக ஒலித்தது.
அவன் பிடிவாதமாய் அப்படியே இருக்க தன் பக்க சப்போர்ட்க்காக போய் மாமியாரை அழைக்கலாம் என்று காயத்ரி வெளியே போக கதவைத் திறக்கப் போனாள்.
விஸ்வநாதன் எட்டி அவள் கையைப் பிடித்து "எங்க போறே? உன் மாமியார் கிட்ட ரெக்கமண்டேஷனா..?" என்று கேட்டு அவளை நிறுத்தினான்.
"இதுக்கெல்லாம் உன் மாமியார் சொன்னா கூட கேக்க மாட்டேன். நீயே மாத்திக்கறியா? இல்ல நாம இங்கயே இருப்போமா? நீ சல்வார் போட்டுக்க வேண்டாம்னு நான் சொல்லல. ஆனா இப்படி ட்ரெஸ் பண்ணிண்டு வரக் கூடாது...நீயே முடிவு பண்ணிக்கோ.."
மேலே பேசாமல் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
அவன் பொறுமையாய் சொல்லியிருந்தால் காயத்ரி ஒரு வேளை சுணங்காமல் கேட்டிருப்பாளோ என்னவோ?
அவன் பிடிவாதம் அவள் பெற்றோரை போன்றே 'நான் சொல்றதை தான் நீ செய்யணும்.' என்கிற ரீதியில் அதிகாரமாக இருக்க அதுவே அவளுக்கு கோபத்தையும் துக்கத்தையும் தந்தது.
விடுவிடுவென்று அலமாரியை திறந்து அதில் இருந்து ஒரு சிவப்பு சல்வாரை எடுத்து விரித்து காட்டி "இதை போட்டுக்கலாமா? இல்ல இதுலையும் கை தெரியறதா?" என்று கோபமாக கேட்டாள்.
அந்த சல்வாரில் லாங் ஸ்லீவ் இருந்தது. கிட்டத்தட்ட முழங்கை வரை இருக்க விஸ்வநாதன் அலட்டிக்கொள்ளாமல் "இது ஓகே.." என்றான்.
"அப்ப நீங்க வெளில போங்கோ.. நான் இதை மாத்திக்கணும்..."
காயத்ரி சொன்ன போது அவள் கண்கள் கலங்கி கோபத்தால் வந்த அழுகையில் குரல் தழுதழுத்திருந்தது.
விஸ்வநாதன் அதற்காகவெல்லாம் இளகி விடவில்லை. சிறு தலையசைப்புடன் வெளியேற காயத்ரி கோபத்தை கதவை அறைந்து சாத்துவதில் காட்டினாள்.
வெளியே வந்த விஸ்வநாதன் இன்னும் கிளம்பாமல் இருப்பதை கூடத்தில் அமர்ந்திருந்த பத்மாவும் அத்தையும் கேள்வியாய் பார்த்தனர்.
"ஏண்டா..! நாழி ஆகலையா? ஏன் இன்னும் அப்படியே இருக்கே..?"என்று பத்மா கேட்டார்.
காயத்ரி கதவை அறைந்து சாத்திய சத்தம் அவர்கள் காதிலும் கேட்டது தானே..!
"அவ ட்ரெஸ் மாத்திண்ட அப்பறம் நான் போய் மாத்திப்பேன் மா.." என்று உள்ளே நடந்த வாக்குவாதம் எதையும் சொல்லாமல் விஸ்வநாதன் அமைதியாய் பதில் தந்தான்.
அவன் சொல்லாவிட்டால் பத்மாவுக்கு புரியாதா என்ன? விஸ்வநாதனுக்கு வெகு நாகரீகமான ஆடைகள் பிடிக்காது என்று அவருக்கும் தெரியும்.
"ஏண்டா..! குழந்தைய எதானும் வெஸ்ஸயா..? அந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க படாதுன்னு கோச்சின்டியா? உனக்கு பொறுமை ரொம்ப கம்மி டா...இப்ப என்ன சொன்னே..அவளை?"
என்று பத்மா கோபமாய் அதட்ட அத்தை வருத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கும் விஸ்வநாதன் காயத்ரியை கடிந்து கொள்வதில் வருத்தம் என்றாலும் ஒரு அளவுக்கு மேல் கணவன் மனைவிக்கு நடுவே போவது நாகரீகம் இல்லை என்று அமைதியாய் இருந்தார்.
விஸ்வநாதன் "அம்மா! அவ தனியா போற போது என்னவோ போட்டுக்கட்டும். என் கூட வர போது நான் சொல்ற மாதிரி தான் வரணும்னு நினைக்கறேன். அது அவளுக்கு பிடிக்கலைன்னா என்ன பண்றது? “
என்று அம்மாவிடமும் அதே பதிலை சொன்னான்.
"டேய்! கொஞ்சம் போனா தானே புரிஞ்சிப்பாடா. எல்லாத்தையும் அதட்டி கொண்டு வர முடியாது. நீ அதிகாரம் பண்ணப் பண்ண பிடிவாதம் தான் ஜாஸ்தியா ஆகும். அதே பொறுமையா அன்பா சொன்னா கேட்டுப்பா டா.."
பத்மா அட்வைஸ் பண்ண விஸ்வநாதன் நான் இப்படி தான் என்பது போல அமைதியாக நின்றான்.
அதற்குள் கதவை திறந்து கொண்டு காயத்ரி வெளியே வர இருவரின் பேச்சும் அப்படியே நின்றது. சிவப்பு சல்வாரிலும் அவள் அழகு அசரடிக்க முகம் மட்டும் வாடியிருந்தது.
நேரே விஸ்வநாதனிடம் வந்தவள் "இப்ப திருப்தியா?" என்று கோபமாய் கேட்க விஸ்வநாதன் சிரித்த முகமாய் "ஆமாம்" என்பது போல தலையசைத்தான். பத்மாவும் அத்தையும் தர்மசங்கடமாய் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
தன்னுடைய அறைக்கு போய் சில நிமிடங்களில் வந்தவன் ஒரு நகைப்பெட்டியை தன் அம்மாவிடம் கொடுத்து "உன் மாட்டுப்பொண்ணை போட்டுக்க சொல்லு.." என்றவன் அவளை ஒரு பார்வை பார்த்தபடி தங்கள் அறைக்கு போனான்.
பத்மா அதை திறக்க காயத்ரிக்கு கோபத்தை தாண்டி ஆர்வம் தள்ள எட்டிப் பார்த்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளை பூக்கள் கொண்ட சிவப்பு சல்வாரில் ஓரத்தில் ஜரிகைக் கோடு ஓடியது.
அதற்கு பொருத்தமாய் அந்த பெட்டியில் வெள்ளை முத்துக்கள் கொண்ட தங்க சோக்கரில் சிவப்புக் கல் பதக்கம் வைத்து காதுக்கு பெரிய சிவப்பும் முத்தும் கலந்த தோடும் கைக்கு சிவப்பும் முத்தும் கலந்த கடாவும் என செட்டாய் ஜொலித்தது.
அதன் அழகில் விழி விரிய காயத்ரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
பத்மா சிறு முறுவலுடன் அவள் முகத்தை பார்த்து "நன்னா இருக்கா? நோக்கு பிடிச்சிருக்கா காயத்ரி?" என்று அன்பாய் விசாரிக்க காயத்ரிக்கு கோபம் எதற்கு என்றே மறந்து போனது.
புன்னகையுடன் "ரொம்ப அழகா இருக்குமா..!" என்று காயத்ரி சொல்ல "திரும்பு..நானே போட்டு விடறேன்.." என்று சோக்கரை அணிவித்தார்.
காயத்ரி அதற்குள் அவசரமாய் காதில் இருந்த தோட்டை கழற்றி விட்டு செட்டில் இருந்ததை அணிய அத்தை கடாவில் இருந்த ஸ்க்ரூவை கழற்றி கையில் வைத்திருந்தார்.
சில நிமிடங்களில் எல்லாவற்றையும் அணிந்த காயத்ரி "எப்படி இருக்கு அத்தை..?" என்று முகம் மலர கேட்க அத்தை தன் இரு கைகளாலும் அவள் கன்னம் தொட்டு திருஷ்டி கழித்தார்.
"அப்படியே ராஜாத்தி மாதிரி இருக்கேடி கோந்தை ..! ரொம்ப நன்னா இருக்கு.."
அடுத்து மாமியாரின் முகம் பார்க்க "ரொம்ப நன்னா உனக்கு பொருந்திருக்கு. விச்சு நன்னா உனக்கு பொருத்தமா வாங்கிருக்கான். உன் கல்யாணத்தும் போது போட்ட வைர செட் கூட அவன் வாங்கினது தான்..." என்று பத்மா பெருமையாய் சொன்னார்.
'வைரமா? அது வெள்ளைக் கல்னு இல்லையோ நினச்சுண்டு இருந்தேன்.. வைர செட் வாங்கற அளவுக்கு இவர் சம்பாதிக்கிறேரா?'
காயத்ரிக்கு இது புது தகவல்.
அதைப் பற்றி மேலே யோசிக்க நேரமில்லாமல் அதற்குள் விஸ்வநாதன் வெளியே வந்து காயத்ரியை பார்த்து "போலாமா..? என எப்போதும் அணியும் அதே வேஷ்டி வெள்ளை சட்டையில் சட்டை கையை மடித்த படி கேட்க காயத்ரியின் பார்வை தானாய் தாழ்ந்தது.
அவன் தன் மனைவி தான் கொடுத்த நகைகளை அணிந்திருப்பதை பார்த்தும் எதுவும் சொல்லாமல் வாசல் நோக்கி நடக்க காயத்ரி மௌனமாய் பின்தொடர்ந்தாள்.
இருவரும் வாசல் வர இன்று அங்கே சில்வர் நிற ஹோண்டா அமேஸ் நின்றிருந்தது. விஸ்வநாதன் முன் சீட்டின் கதவை அவளுக்கு திறந்து விட்டு டிரைவர் சீட்டுக்கு போனான்.
"வரேன் மா! போய்ட்டு வரேன் அத்தை..!": என்று விட்டு காயத்ரியை குறிப்பாய் பார்க்க அவளும் விடை பெற்றாள்.
பத்மா "ரெண்டு பேரும் சந்தோஷமா போயிட்டு வாங்கோ..." என்று அனுப்பி வைத்தார்.
கார் தெரு முனையை தாண்டவும் விஸ்வநாதன் "இந்தா..! இத மறந்துட்டியே..!" என்று தன் சட்டை பையில் இருந்து நீட்ட அவன் கையில் சிறிய சிவப்பு நிற பொட்டு பாக்கெட்.
அவளுடையது தான். ரூமில் இருந்து கொண்டு வந்திருந்தான்.
அவள் கோபத்தில் நீல பொட்டுடன் அப்படியே வந்ததை கவனித்திருக்கிறான்.
'அப்போ இவர் எல்லாம் கவனிச்சிண்டு தான் இருக்காரா? இந்த செட் அவளுக்கு எப்படி இருக்குன்னு சொல்ல தோணித்தா?'
காயத்ரி அதை எடுத்து பொட்டை வைத்துக் கொள்ள வண்டி பூக்கடை வாசலில் நின்றது. காரில் இருந்தே "ஒரு சிவப்பு ரோஸ் குடுங்க. கூட ஹேர் பின்னும்.." என்று விஸ்வநாதன் குரல் கொடுக்க காயத்ரி அவனை 'பே ' என்று பார்த்திருந்தாள்.
கடையில் இருந்த அம்மா பூ கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி காயத்ரியிடம் கொடுத்து விட்டு காசை கொடுத்தவன் காரை எடுத்தான்.
"இந்த ட்ரெஸ்ஸுக்கு மல்லிகை பூ செட் ஆகாது. அதான் ரோஸ் வாங்கினேன்.." என்று காயத்ரியை பார்த்து சொன்னான்.
'இவனையா… சாரி… இவரையா அம்மாஞ்சினு சொன்னேன்...' என்று நினைத்தபடி காயத்ரி அவனை திரும்பிப் பார்க்க ஒரு முறை அவளை கூர்ந்து பார்த்தவன் பார்வையை சாலையில் செலுத்தினான்.
"உன்ன கட்டுப்பெட்டியா ட்ரெஸ் பண்ணிக்கோன்னு சொல்லல. ஆனா உன் ட்ரெஸை பாத்தா ஒரு மரியாதை வரணும். இப்ப உனக்கு கல்யாணம் ஆயிடுத்து. இன்னும் நீ சின்ன பொண்ணு இல்ல.
நாம வெளிநாட்டுலயும் இல்ல. இந்த தமிழ்நாட்டுல தான் இருக்கோம். நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணணுமே தவிர அடுத்தவனை பாத்து சூடு போட்டுக்க கூடாது.. புரியறதா?"
அறையில் அப்போதே சொல்ல வேண்டிய விளக்கத்தை இப்போது தான் நிதானமாக சொன்னான்.
காயத்ரி யோசிக்கவும் ஜீரணிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்க அவள் மௌனமாய் தலையாட்டினாள்.
'அன்னிக்கி ஒரு கார் ..இன்னிக்கி ஒரு கார்.. கல்யாணத்துக்கு வைர செட்...ஆனா ஆத்தையோ ஆத்து மனுஷாளையோ பாத்தா ரொம்ப எளிமையா இருக்கா? இந்த கார் யாருது? நம்பாத்துதுனா ஏன் ஆத்து வாசல்ல நிக்கல?'
இப்படி ஏகப்பட்ட கேள்விகள் ஓடின.
'எதாவது கேட்டால் குத்தலா பதில் சொல்லுவான்..இப்ப கேட்டு மூட் அவுட் ஆகும்..இது தேவையா..?'
எப்போதும் சலசலவென்று பேசும் அவன் பட்டூ இன்று அமைதியாய் வருவதை பார்த்த விஸ்வநாதன் "என்ன பட்டூ ? அதுவே கொஞ்சூண்டு தான் இருக்கு? அதையேன் கஷ்டப்படுத்தறே..?" என்று திடிரென்று கிண்டலாய் கேட்கவும் காயத்ரி அவன் சொல்வது புரியாமல் விழித்தாள்.
"அதாண்டி ஓன் தலைல இருக்கறத தான் சொன்னேன்..." என்று சிரிக்க அவள் கண்கள் அவளையும் அறியாமல் கன்னத்தில் விழுந்த குழியை பார்த்தது.
அவள் பார்வையில் தெரிந்த மாற்றத்தை கவனித்த விஸ்வநாதன் மெல்ல சிரித்து "இப்ப நாம ஆத்துல இல்ல. நம்ம ரிசெப்ஷனுக்கு போய்ண்ட்ருக்கோம்.." என்று சொல்ல காயத்ரியின் முகம் சிவந்து போனது.
"ராத்திரி பட்டூன்னு கொஞ்சுவேளோனோ அப்ப வெச்சுக்கறேன்...." என்று காயத்ரி பொய் கோபத்தோடு முறைக்க விஸ்வநாதன் "அப்ப ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லடி..." என்று சிரித்தான்.
"ஏன்னா! ரூம்ல இருந்த வித்தை இப்ப காருக்கு மாறிடுத்தோ..? கொஞ்ச நேரமாய் என் கிட்ட சிரிச்சு பேசிண்டு இருக்கேளே..?" என்று கிண்டலாய் கேட்க விஸ்வநாதன் சத்தம் போட்டு சிரித்தான்.
காயத்ரிக்கு கோபம் தற்காலிகமாய் மறந்து போக இருவரும் இனிமையான மனநிலையுடன் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.