• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்னைப் பற்றி - சிறு அறிமுகம் - திருமதி லாவண்யா

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
47
என்னைச் சிலருக்குத் தெரிந்திருக்கு வாய்ப்பிருக்கு. பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவு. பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள், என எழுத்துப் பணியைக் கடந்த 12 வருடங்களாகச் செய்து வருகிறேன். அமுதா பிளாகில் தொடங்கிய என் பயணம் அருணோதயம் அருணன் ஐயாவால் புத்தகமாக உருமாறி இன்று வரையில் ஓர் எழுத்தாளராகப் பவனி வருகிறேன்.


கடந்த சில ஆண்டுகளில் 23 தமிழ் நாவல்கள் மற்றும் சிறுவர் கதை ஒன்றையும் திருமதி. லாவண்யா என்ற பெயரில் அருணோதயம் பதிப்பகத்தாரின் வழியே புத்தகமாக வெளியிட்டுள்ளேன். அத்துடன் லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் சிறுகதைகள் ஆனந்த விகடன், ஓம் சக்தி, தினமணிக் கதிர், கல்கி, இணையதளம் மற்றும் மின்னிதழ்களிலும் வெளியிட்டுள்ளேன்.


2018 ஆம், ஆண்டு மின்மினிக் கனவுகள் என்ற புதினத்துக்காகத் திருப்பூர் சக்தி விருது பெற்றுள்ளேன்.

அத்துடன் தஞ்சாவூரில் உள்ள அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம் வெளியிட்ட வேளாண் அறிவியல் புத்தகத்தில், ‘பூச்சிகளின் மரப்பணுப் பொறியியலும் வேளாண்மையில் அதன் முக்கியத்துவமும்’ என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் தமிழில் எழுதியிருக்கிறேன்.


ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கான ஒரு கதையை எழுதி அமேசானில் வெளியிட்டிருக்கிறேன்.


கதைத்தறி தளத்தில் சென்ற ஆண்டு வந்த கார்காலப் பனித்துளி கதையைப் பதிவிட இருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்கிறேன். வாய்பளித்த கதைத்தறி் குழுவினருக்கு மிக்க நன்றி.


என்றும் அன்புடன்,

லாவண்யா.
 
Last edited:

Author: Pochampalli
Article Title: என்னைப் பற்றி - சிறு அறிமுகம் - திருமதி லாவண்யா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom