உயிர்க் கொடியில் பூத்தவளே!
அத்தியாயம் 6
சேதுபதி ஐயாவின் ஆக்ஸிஜன் மாஸ்க் நீக்கப்பட்டு, அவரது முகத்திற்கு மேல் ஒரு தலையணை வைக்கப்பட்டிருந்தது. தலையணையின் நடுப்பகுதி அமுங்கி இருந்ததைப் பார்த்தால் யாரோ அதில் கைகளை வைத்து அழுத்தி அவரைக் கொல்ல முயற்சி செய்திருந்தது போலத் தோன்றியது அவளுக்கு. அதிர்ச்சியில் உறைந்துபோன மாதுரி, தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு மளமளவென்று செயலில் இறங்கினாள். தலையணையை மீண்டும் அவருடைய தலைக்குக் கீழே வைத்துவிட்டு ஆக்ஸிஜன் மாஸ்க்கை மீண்டும் சரியாகப் பொருத்திவிட்டு நிமிர்ந்தாள் மாதுரி. ஐயாவின் கண்கள் மாதுரியை நன்றியோடு பார்த்தன.
ஆக்ஸிஜன் மாஸ்க்கை சரியாகப் பொருத்திவிட்டு மாதுரி நிமிரும்போது பின்னாலிருந்து மந்திராவின் குரல் கேட்டது.
“ தூங்காமல் இங்கே என்ன பண்ணறே மாதுரி? அங்கிளோட ஆக்ஸிஜன் மாஸ்க்கை எதுக்கு ரிமூவ் பண்ணினே? என்னைப் பாத்துட்டுத் திரும்ப வச்சுட்டயா? என்ன அர்த்தம் இதுக்கு? “ என்று ஆரம்பித்துக் காச் மூச்சென்று கத்தினாள் மந்திரா. அவளுடைய குற்றச்சாட்டைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றாள் மாதுரி.
மந்திரா கத்திய கத்தலால் ராஜேஸ்வரியும் முழித்துக் கொண்டார்.
“ என்ன நடக்குது இங்கே? எதுக்கு ராத்திரி நேரத்துல இவ்வளவு சத்தம்? “ என்று தூக்கம் கலைந்த எரிச்சலுடன் கேட்டபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார் ராஜேஸ்வரி.
“ ஆண்ட்டி, இங்கே பாருங்க இந்த மாதுரி பண்ணின காரியத்தை. தூக்கம் வரலைன்னு வெளியே உலாத்தலாம்னு என் அறையை விட்டு வெளியே வந்தேன். இந்த ரூம்ல ஏதோ சத்தம் கேட்டுச்சு. வேகமா இங்கே வந்து பாத்தா, இந்த மாதுரி அங்கிளோட ஆக்ஸிஜன் ஸப்ளையை நிறுத்தி அவரைத் தவிக்க விட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு நிக்கறா. என்னைப் பாத்ததும் அதைச் சரிசெய்யற மாதிரி நடிக்கறா. எனக்கு என்னவோ இவ இங்கே வந்ததுல ஏதோ உள் நோக்கம் இருக்கற மாதிரி தெரியுது. இவளோட பார்வை, நடவடிக்கை, பேச்சு எல்லாமே சந்தேகத்தைக் கிளப்புது. போலீஸைக் கூப்பிட்டு ஒப்படைக்க வேண்டியது தான்” என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை மந்திரா வைத்துக் கொண்டே போக, சரமாரியான இந்தத் தாக்குதல்களால் நிலைகுலைந்து நின்றாள் மாதுரி. தன்னுடைய குற்றமற்ற நிலையை எடுத்துச் சொல்வதற்குக் கூட நா எழுப்பவில்லை அவளுக்கு. அந்த அளவுக்கு அர்ஜுனத் தாக்குதலாக இருந்தது மந்திராவின் தாக்குதல்.
“ அவசரப்பட்டு எதையாவது பேசாதே மந்திரா. அள்ளித் தெளிச்ச மாதிரி புள்ளிகளை வச்சாக் கோலம் அலங்கோலமா ஆயிடும். வார்த்தைகளைக் கொட்டலாம். அள்ளமுடியாது. எதுக்கு இப்போ மாதுரி மேல அநியாயமாப் பழி போடறே? ” என்று கோபமாகவே பேசினார் ராஜேஸ்வரி.
“ என்ன ஆண்ட்டி நான் கண்ணால பாத்ததைச் சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னவோ நம்ப மாட்டேங்கறீங்களே? நடுராத்திரியில் இவ எதுக்கு இந்த ரூமுக்கு வரணும்? இவளோட நோக்கம் என்னவா இருக்கும்? எனக்கென்னவோ ரொம்ப சந்தேகமா இருக்கு” என்றாள் மந்திரா ஆணித்தரமாக.
“எனக்கு மாதுரி பேரில முழு நம்பிக்கை இருக்கு. எதுவா இருந்தாலும் காலையில நிதானமாப் பேசிக்கலாம். ரெண்டு பேரும் அவங்கவங்க ரூமுக்குப் போங்க” என்று கட்டளையிடுவது போல ராஜேஸ்வரி கூறிவிட, மந்திரா முதலில் வெளியேறினாள். வெளியே போவதற்கு முன்னால் மாதுரியை நோக்கி வெறுப்புப் பார்வையை வீசத் தவறவில்லை அவள்.
மந்திரா போனபிறகும் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த மாதுரியைக் கனிவுடன் பார்த்த ராஜேஸ்வரி, “ போம்மா, போ, நீயும் போயாத் தூங்கு. காலையில் மந்திராவை இன்னும் கடுமையாக் கண்டிக்கிறேன்” என்று உத்தரவாதம் தர, மாதுரி தலையைக் குனிந்தபடி அங்கிருந்து தனது அறைக்குள் சென்றாள். இந்த முறை கதவை மூடித் தாழிட்டுக் கொண்டாள். என்ன சத்தம் கேட்டாலும் அடுத்த அறைக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கண்களை மூடினாள். நீண்ட நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் தூங்கிப் போனாள்.
குளித்துத் தயாராகி அடுத்த அறைக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரத்த வெள்ளத்தில் இரண்டு முதியவர்களும் கிடக்கிறார்கள். வீலென்று அலறுகிறாள் மாதுரி. அவளுடைய அலறல் சத்தத்தைக் கேட்டு மந்திரா வந்து பார்த்துவிட்டு , மாதுரி பணத்திற்காக இரண்டு பேரையும் கொலை செய்ததாக அவள் மேல் பழி போட்டதுடன் போலீஸையும் வரவழைக்கிறாள். அவளுடைய கையில் விலங்கை மாட்டி போலீஸார் அவளை இழுத்துச் செல்லும் போது ஓரமாக நின்று கண்மணி வேடிக்கை பார்க்கிறாள்.
‘ இவ்வளவு தானா நீ? இது தெரியாம உன்னை நல்லவன்னு நம்பினேனே? ’ என்று வெறுப்பை உமிழ்கிறாள் மாதுரி மேல். வீட்டில் வேலை செய்யும் எல்லாருமாக அவளைச் சூழ்ந்து நின்று, “ நீ ஒரு கொலைகாரி, கொலைகாரி ” என்று கத்துகிறார்கள். கைகளில் விலங்கு இருந்ததால் செவிகளை மூடமுடியாமல் தவிக்கிறாள் மாதுரி. “ இல்லை, இல்லை, நான் கொலைகாரி இல்லை. நான் எந்தத் தப்பும் செய்யலை. என் மேல அநியாயமாப் பழி போடாதீங்க” என்று கதறுகிறாள் மாதுரி.
“ மாதுரி, மாதுரி” என்று மென்மையான குரலும், கதவைத் தட்டும் சத்தமும் கேடீடுக் கண்விழித்த மாதுரிக்கு இவ்வளவு நேரம் கண்டது கனவு எனப் புரிந்தது. ஆனால், அதிகாலைக் கனவு பலித்துவிடுமோ என்கிற அச்சம், அடிவயிற்றைக் கலக்கியது. எழுந்து கதவைத் திறந்தாள்.
“ என்ன ஆச்சு மாதுரி? ராத்திரி தூக்கம் வராமல் காலையில தூங்கிட்டயா? அப்புறம் அந்தப் பொண்ணு மந்திரா கூட ஏதாவது பிரச்சினையா? காலையில இருந்து சுட்ட கத்திரிக்காய் மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு சுத்துது அந்தப் பொண்ணு. யார் பேசினாலும் எரிஞ்சு விழுது” என்று வீட்டு நடப்பை முந்தித் தரும் செய்தித்தாளாகச் சுடச்சுடச் செய்திகளை வழங்கினாள் கண்மணி.
“ காலையில கண்ணசந்துட்டேன்கா. இதோ குளிச்சுத் தயாராயிட்டு வரேன். ”
“ வா, வா, உன் கூட சேந்து சாப்பிடணும்னு காத்துட்டிருக்கேன். உனக்கு டிஃபன் குடுத்துட்டு மார்க்கெட்டுக்குப் போயிக் காய்கறி வாங்கிட்டு வரணும். அம்மாவும், ஐயாவும் காலையிலயே கார்ன் ஃபிளேக்ஸ், பழங்கள் சாப்பிட்டு பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டாங்க” என்று தன் அறிவிப்பை முழுவதுமாக முடித்துவிட்டே நகர்ந்தாள் கண்மணி.
குளித்துத் தயாராகிக் காலை உணவையும் முடித்துக்கொண்டு முதியவர்களின் அறையில் தயக்கத்துடன் நுழைந்தாள்.
“ ஸாரி மேடம், கொஞ்சம் லேட்டாயிடுச்சு இன்னைக்கு. நாளை காலையில இருந்து சீக்கிரம் வந்துடறேன்” என்று மன்னிப்புக் கேட்டாள் வந்தவுடன்.
“ லேட்டுன்னு நீயா ஏன் நெனைச்சுக்கறே? நாங்க ஒண்ணும் இந்த நேரத்தில் இருந்து வேலைன்னு உன் கிட்ட எதுவுமாச் சொல்லலையே? ” என்று சமாதானப் படுத்துவது போலப் பேசினாள்.
“ சரி மாதுரி, உனக்கு இப்போ மூடு சரியா இருந்தால், ராத்திரி என்ன நடந்ததுன்னு விளக்கமாச் சொல்லறயா? எதுக்காக திடீர்னு இந்த ரூமுக்கு வந்தே? ” என்று ராஜேஸ்வரி கேட்டபோது அவரின் குரலில் இருந்த மென்மை அகன்று கண்டிப்பு கலந்திருந்தது. என்ன நடந்ததென்று அறிந்துகொண்ட பின்னரே தன்னுடைய கருத்தைச் சொல்லமுடியும் என்ற தொனி இருந்தது அவருடைய குரலில்.
“உன் மீது சாற்றப்பட்ட குற்றத்திலிருந்து உன்னை விடுவிப்பதற்கு முன்பாக, அதாவது தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக உன்னுடைய தரப்பு வாதத்தைக் கேட்க விரும்புகிறேன். சொல்” என்கிற நீதி தேவதையின் கட்டளையாக இருந்தது அவர் கூறியது.
“ மேடம், நான் எந்தத் தப்பும் செய்யலை. இந்த ரூமில ஏதோ சத்தம் கேட்டதால என்னோட தூக்கம் கலைஞ்சது. என்னன்னு பாக்கவந்தேன். அப்போ ஐயாவோட படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு புது உருவம் நின்னுட்டுக் குனிஞ்சு ஏதோ செய்யறதைப் பாத்துக் கலவரப்பட்டு ஓடிவந்தேன். யாருன்னு கத்திட்டே வந்தேன். என் கொரலைக் கேட்டு அந்த உருவம் அறையை விட்டு வெளியே ஓடிடுச்சு. ஐயாவோட ஆக்ஸிஜன் மாஸ்க் கழட்டப் பட்டிருந்தது. முகத்துக்குமேல தலைகாணி இருந்தது. பதறிப்போய் அதையெல்லாம் சரி பண்ணிட்டு நிமிர்ந்த சமயத்தில் தான் மந்திரா மேடம் வந்து பாத்தாங்க. என்னோட செயலை அவங்க தவறாப் புரிஞ்சுகிட்டாங்க. நான் இங்கே வேலைக்கு வந்தது பணத் தேவைக்காக மட்டும் தான். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் சொல்லறதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இப்பவே கிளம்பத் தயாராக இருக்கேன் ” தன்னுடைய வாக்குமூலத்தை மெல்லிய குரலில் தந்தாலும் குரல் நடுங்காமல், உறுதியாகவே பேசினாள் மாதுரி.
“ நடந்ததை உள்ளது உள்ளபடியே சொல்லிவிட்டேன். இனி முடிவு உங்கள் கையில்” என்று கூறுவது போல ராஜேஸ்வரி மேடத்தைப் பார்த்தாள் மாதுரி.
“ சரி மந்திரா, மாதுரி சொல்லறதைப் பாத்தா, இவர் அந்த நேரத்தில் முழிச்சுட்டு இருந்திருக்கார். அவர் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். உங்க ரெண்டு பேர் எதிரிலயே அவர் கிட்டக் கேக்கறேன்” என்று சொல்லிவிட்டுச் சக்கர நாற்காலியுடன் சேதுபதியின் படுக்கை அருகே சென்றார் ராஜேஸ்வரி.
“ என்னங்க, மாதுரி இப்பச் சொன்னது முழுவதும் உங்க காதுல விழுந்துச்சா? அவ சொன்னதெல்லாம் உண்மையா? ” என்று ராஜேஸ்வரி கேட்க, சேதுபதி ஆமாம் என்று தலையசைத்தார்.
“ அப்படின்னா, மாதுரி அதுதான் இந்தப் புதுப் பொண்ணு உங்களுக்கு ஆக்ஸிஜன் வரதை நிறுத்தப் பாக்கலையா? ” என்று கேட்டதும்,
“ இல்லை”
என்று படுவேகமாகத் தலையசைத்தார் சேதுபதி.
“ அப்படின்னா இந்தப் பொண்ணு எந்தத் தப்பும் செய்யலை இல்லையா? ”
என்று இறுதியாகக் கூறியதையும் உண்மை என்று சேதுபதி கூறிவிட, மாதுரியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வலுவிழந்து போனது. மந்திராவின் பக்கம் திரும்பினார் ராஜேஸ்வரி.
“ பாத்தியா மந்திரா? இதுக்குத்தான் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டக் கூடாதுன்னு சொல்லறது? இப்போ நீ என்ன பண்ணறேன்னா, எங்க எதிரில் மாதுரி கிட்ட ஸாரி சொல்லணும் ” ராஜேஸ்வரியின் குரலில் கண்டிப்பு தெரிந்தது. ஆனால், இதைக் கேட்டு மாதுரி முதலில் அதிர்ச்சி அடைந்தாள்.
“ வேண்டாம் மேடம். அதுக்கு அவசியமில்லை. உங்க ரெண்டு பேர் மேல இருக்கற அக்கறையாலே தானே மந்திரா மேடம் என்னை சந்தேகப்பட்டாங்க? நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கலை. விட்டுருங்க” என்று கெஞ்சினாள். தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய கட்டாயம் மந்திராவுக்கு ஏற்பட்டால் அவள் மனதில் தன் மேல் இருக்கும் வஞ்சம் இன்னும் அதிகமாகும் என்று நினைத்து பயந்தாள் மாதுரி.
“ வேண்டாம்னு சொல்லறது உன்னோட பெருந்தன்மையைக் காட்டுது மாதுரி. ஆனால், ஒரு தடவை மன்னிப்புக் கேட்டால் தான் இன்னொரு தடவை அவசரப்பட்டு இதே மாதிரி செய்ய மாட்டா மந்திரா ” என்று சொல்லிவிட்டார் ராஜேஸ்வரி. மந்திரா, மாதுரியின் அருகே வந்து, “ ஸாரி” என்று சொல்லிவிட்டு வாடிய முகத்துடன் அறையை விட்டுச் சென்றாள். மாதுரிக்கே அவளைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது.
“ சரி மாதுரி, ஏதோ உருவத்தைப் பார்த்ததாச் சொன்னியே? திரும்பவும் அந்த உருவத்தைப் பார்த்தால் உன்னால் அடையாளம் காட்ட முடியுமா? ”
“ தெரியலை. இந்த ரூமில் மசமசன்னு இருட்டா இருந்தது. நைட் லேம்போட மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது. அதுவும் ஐயாவோட கட்டில் பக்கம் அதிகம் இருக்கவில்லை. ஆணா, பெண்ணான்னு கூட என்னால முடிவு செய்ய முடியலை. உடம்பு முழுவதையும் மறைக்கற புர்கா மாதிரி உடை அணிஞ்சிருந்ததைப் போலத் தோணுச்சு எனக்கு” என்று பதில் சொன்னாள் மாதுரி.
“ ஆச்சர்யமா இருக்கு. அப்படின்னா எங்களோட உயிருக்கு ஏதோ ஆபத்து நெருங்குதுன்னு நினைக்கிறேன். இன்னைக்கே இந்த ரூமுக்கு வெளியே ஸெக்யூரிட்டி ஏற்பாடு பண்ணறேன்” என்று கவலையுடன் கூறினார் ராஜேஸ்வரி.
‘முதல் நாள் அனுபவமே இவ்வளவு அதிர்ச்சிகரமாக இருக்கிறதே, போகப் போக என்னவெல்லாம் நடக்குமோ? ’ என்று எண்ணிக் கவலையுற்றாள் மாதுரி.
தொடரும்,
புவனா சந்திரசேகரன்.