• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 11

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 11

அன்றிலிருந்து இன்று வரை பத்மினியின் வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிறது. அவள் மனதில் பிரசாந்த் மீதிருந்த வெறுப்பு துளிக்கூடக் குறையவில்லை. நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போனது. இன்று விவாகரத்து பற்றி யோசிக்கும் அளவு வளர்ந்து விட்டது. தனது முடிவில் உறுதியாக இருந்தாள் பத்மினி.

பத்மினி, தன்னுடைய தோழி வித்யாவைப் பார்த்து விட்டு விவாகரத்து பற்றிப் பேசி விட்டு வந்ததில் இருந்தே காமாட்சி பயங்கர டென்ஷனில் இருந்தாள். என்ன செய்வது, எப்படி இந்தப் பிரச்சினையை சரி செய்வது என்று புரியாமல் தவித்தாள்.

அன்றைய பொழுது வழக்கம் போலத் தான் விடிந்தது. ஆனால் காமாட்சிக்கோ என்னவோ கலக்கமாக இருந்தது. ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடுமோ என்று ஒரு பயம் மனதை உள்ளூற அரித்துக் கொண்டு இருந்தது. நிலை கொள்ளாமல் தவித்தாள்.

அன்று சனிக்கிழமை என்பதால் பிரசாந்துக்கு விடுமுறை நாள் தான். பிரசாந்த் எப்படியும் வருவான், அவனுடன் பேசி மனதிலிருக்கும் ஆதங்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் பிரசாந்த் வருவதற்கு முன்னால் பெரிய குழப்பம் ஒன்று கொரியரில் வந்து சேர்ந்தது.

கொரியரை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள் பத்மினியின் முகமே மலர்ந்து போனது. " அம்மா, இங்கே பாருங்க. வித்யா எனக்காக டைவர்ஸ் பேப்பர் தயார் செஞ்சு அனுப்பிருக்கா. எனக்குக் கூடிய சீக்கிரம் விடுதலை கிடைக்கப் போகுது. தேங்க் காட்" என்று அந்தக் காகிதங்களை, காமாட்சியின் முகத்துக்கு நேரே ஆட்டிக் காண்பித்தாள். முகத்தில் வெற்றிப் பெருமிதம் பொங்கத் தன்னறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.

மாலை நெருங்கியது. எப்படியும் பிரசாந்த் வந்துவிடுவான் என்று அம்மா, பெண் இருவருமே இரண்டு வேறு வேறு காரணங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். காமாட்சி, பிரசாந்திடம் பேசி விவாதித்து மனக் கலக்கத்தைக் குறைப்பதற்காகவும், பத்மினி விவாகரத்து பெறுவதற்கான காகிதங்களில் பிரசாந்தின் கையெழுத்தை வாங்குவதற்காகவும் தான் அவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பிரசாந்த் வருவதற்குள் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குப் போய் அவனிடம் தனது மனக்குறைகளைக் கொட்டிப் பிரார்த்தனை செய்து விட்டு வரலாம் என்று நினைத்து காமாட்சி கிளம்பிப் போனாள். அவளுடைய துரதிருஷ்டமோ, இல்லை பத்மினியின் அதிர்ஷ்டமோ, காமாட்சி கிளம்பிப் போன உடனேயே பிரசாந்த் உள்ளே நுழைந்தான். வழக்கம் போலக் குழந்தையைத் தூக்கிக் கெஞ்சினான். தான் வாங்கி வந்திருந்த கிலுகிலுப்பையை ஆட்டி விளையாட்டு காண்பித்தான். பத்மினி அந்த இனிமையான தருணத்தின் இன்பத்தைக் குலைப்பதற்காகவே கையில் டைவர்ஸ் பேப்பருடன் பிரசாந்தின் எதிரில் வந்து நின்றாள்.

" மாதவி அக்கா , காம்னாவைத் தூக்கிட்டுப் போய் பால்கனியில் கொஞ்ச நேரம் விளையாட்டுக் காமிங்க. நான் கூப்பிடும் போது வந்தாப் போதும்" என்று சொல்லி, மாதவியையும், மகளையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றி விட்டு நேரடி யுத்தத்திற்குக் தளத்தைத் தயார் செய்தாள்.

" இந்த பேப்பரில் உன்னோட ஸிக்னேச்சர் வேணும்" என்று அவனிடம் காகிதத்தை நீட்டினாள் பத்மினி.

" என்ன பேப்பர் இது? எதுக்கு ஸைன் பண்ணனும்? "

" இது நம்ம டைவர்ஸ் பேப்பர். பாத்தா அது கூடத் தெரியலையா உனக்கு? மியூச்சுவல் கன்ஸெண்டோட டைவர்ஸ் அப்ளை பண்ணப் போறோம். "

" தீர்மானமே பண்ணிட்டயா? இது தான் உன் முடிவா? அவசரப்படாதே பத்மினி. பிரச்சினை எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம். நான் சொல்லறதைப் பொறுமையாக் கேளு. நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியலை. நான் முழுசா ஒடைஞ்சு போயிடுவேன். ப்ளீஸ் கன்ஸிடர் மி அஸ் யுவர் ஃப்ரண்ட் அட்லீஸ்ட் " என்று கெஞ்சினான்.

" உன் கூட சேந்து வாழறதை என்னால் நினைச்சுக் கூடப் பாக்க முடியாது. நீ உடைஞ்சு போனா எனக்கென்ன? உடைஞ்சு போகலைன்னா எனக்கென்ன? டைவர்ஸ் மட்டும் கொடுத்துட்டு என்ன வேணாலும் ஆயிக்கோ. ஐ டோன்ட் பாதர். இனிமேல் உன்னோட எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்த நான் தயாராயில்லை. "

" சரி, நான் கையெழுத்துப் போடறேன். ஆனால் குழந்தையை மட்டுமாவது என் கிட்டக் கொடுத்துரு. அட்லீஸ்ட் காம்னாவோட முகத்தைப் பாத்துக்கிட்டே என் மீதி வாழ்நாட்களைக் கழிச்சிடுவேன். "

" நோ வே, நீ ஒரு ராட்சசன். உன் கிட்டயாவது, குழந்தையை ஒப்படைக்கிறதாவது? சட்டப்படி பாத்தாக் கூட அவ, ரொம்பச் சின்னவளா இருக்கறதுனால எனக்குத் தான் அவளோட கஸ்டடி கிடைக்கும். "

" இது தான் உன்னோட இறுதி முடிவா?

" ஆமாம், இனிமேல் எந்த மாற்றமும் இல்லை. நாம் சேந்து வாழ்ந்த வாழ்க்கை இதோட முடிஞ்சது. இன்னைக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு. "

" ஓகே, இதில் தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கப் போகுதுன்னா, நான் உன்னோட சந்தோஷத்துக்குக் குறுக்கே நிற்க மாட்டேன். பேப்பரைக் கொடு, எங்கே கையெழுத்து போடணும்னு சொல்லு" என்று சொல்லி விட்டு, அவளுடைய கையில் இருந்த காகிதத்தைப் பிடுங்கி அவள் சொன்ன இடங்களில் எல்லாம் இயந்திரத்தனமாகக் கையெழுத்தைப் போட்டான். காகிதத்தை அவளுடைய கைகளில் திணித்தான். திரும்பிக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து வாசற்கதவை நோக்கி நடந்தான்.

சரியாக அந்த சமயத்தில் காமாட்சி உள்ளே நுழைந்தாள். அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல், பிரசாந்த் வீட்டை விட்டு வெளியேறினான். " மாப்பிள்ளை, மாப்பிள்ளை, நில்லுங்க, என்ன ஆச்சு? பத்மினி ஏதாவது உளறினாளா? நீங்க அதைக் கண்டுக்காதீங்க. ப்ளீஸ் வாங்க" என்று கத்தினாள்.

" எல்லாமே முடிஞ்சு போச்சு அத்தை. நான் இனிமேல் இங்கே வருவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஸாரி, உங்களை அத்தைன்னு கூப்பிடற உரிமையைக் கூட நான் இன்னையிலேந்து இழந்துட்டேன்" என்று காமாட்சிக்கு பதில் சொல்லி விட்டு, பிரசாந்த் விடுவிடுவென்று நடந்து போய்விட்டான்.

" என்னடி பண்ணித் தொலைச்சே? மாப்பிள்ளை மனம் புண்படற மாதிரி அப்படி என்ன பேசினே? அவர் முகம் ஏன் இப்படி இருளடைஞ்சு போயிருந்தது? " என்று பத்மினியின் அருகில் வந்து அவளைப் போட்டு உலுக்கினாள்.

" எல்லாம் சரியாத் தான் பேசினேன். டைவர்ஸ் பேப்பரில் அவர் கிட்டக் கையெழுத்து வாங்கிட்டேன். அதுனால தான் இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டுப் போறார் உங்க மா…..ப்பிள்ளை" என்று அலட்சியமாக கேலி பேசினாள் பத்மினி.

" அடிப்பாவி, என்ன காரியம் பண்ணிருக்கே? உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுகிட்டயே? ஆண்டவா, நான் உன் கோயிலில் வந்து புலம்பினதுக்கு இது தான் பலனா? நான் இவளுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பேன்? " என்று அழுது அரற்ற ஆரம்பித்தாள் காமாட்சி.

" என்னம்மா ஆச்சு? எதுக்கு இப்படி கத்திக் கத்திப் புலம்பறீங்க? இப்போது தானே உடம்பு சரியாயிருக்கு. இந்த மாதிரி உணர்ச்சி வசப்படறது உங்க உடம்புக்கு நல்லதில்லையே" என்று கடிந்து பேசியபடி, வீட்டின் உள்ளே நுழைந்தான் சாந்தனு.

" வாடா வா, உன் அருமைத் தங்கச்சி செஞ்சிருக்கற வேலையை நீயே என்னன்னு கேளு. தட்டிக் கேட்க ஆளில்லாமல் ரொம்பத் தான் துள்ளிக் குதிக்கறா இவ" என்று அவனிடமே தனது மனக்குறையைக் கொட்டினாள்.

" நானே எந்த ஃப்ளைட்னு சொல்லாமல் திடீர்னு வந்து உங்களுக்கு ஸர்ப்ரைஸ் தரலாம்னு பாத்தா இங்கே என்னவோ நிலைமையே சரியில்லையே? அம்மாவோட மனசு வருத்தமடையற அளவுக்கு அப்படி என்ன செஞ்சிருக்கே பத்மினி? " என்று தங்கையை நோக்கித் தனது கேள்விக்கணையைத் தொடுத்தான் சாந்தனு.

" எல்லாம் சரியான முடிவு தான் எடுத்திருக்கேன். அம்மாவால தான் ஏத்துக்க முடியலை. அம்மாவைப் பொருத்தவரை நான் என்ன செஞ்சாலும் தப்பாத் தான் படும் அவங்களுக்கு " என்று சலித்துக் கொண்டாள் பத்மினி. அதற்குள் தன்னை ஒருவழியாக சமநிலைப்படுத்திக் கொண்ட காமாட்சி,

" வாடா வா, நீயே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. இந்தப் பஞ்சாயத்தை அப்புறம் பாத்துக்கலாம்" என்று அந்த விஷயத்தை மகன் எதிரில் உடனே போட்டு உடைக்க விரும்பாமல் திசை திருப்ப யத்தனித்தாள் காமாட்சி. எதையோ மறைக்கும் ஒரு தவிப்பு அவளுடைய குரலில் இருந்தது.

" பரவாயில்லைம்மா. எனக்கு ஒண்ணும் களைப்பா இல்லை. இங்கே என்ன நடந்ததுன்னு எனக்கு விவரமா எடுத்துச் சொல்லுங்க" என்று மீண்டும் வற்புறுத்த

" அது வந்து, உன் தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் நடுவில் ஏதோ பிரச்சினை, மிஸ் அண்டர்ஸ்டான்டிங். அது தப்பு, இப்படி சண்டை போடாதேன்னு அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்தேன்" என்றாள் காமாட்சி தயக்கத்துடன்.

" ஏம்மா, விஷயத்தை முழுவதும் சொல்லாமல் பூசி மெழுகறே? அண்ணா, நான் பிரசாந்தை டைவர்ஸ் பண்ணப் போறேன். இன்னைக்கு அவர் கிட்ட டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டேன். அதுக்காகத் தான் அம்மா என்னை அர்ச்சனை பண்ணிட்டிருந்தாங்க. என்னோட வாழ்க்கையை முடிவு பண்ணற சுதந்திரம் எனக்கு இல்லையா? " என்று டப்பென்று உண்மையைப் போட்டு உடைத்தாள் பத்மினி.

காமாட்சி, எந்த விஷயத்தை சாந்தனுவிடம் சொல்லாமல் மறைக்க நினைத்தாளோ, அந்த விஷயம் வெளியே வந்து விட்டதை எண்ணிக் கலங்கி, தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். மகளைச் சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

" என்ன டைவர்ஸா!? எதுக்காக இந்த முடிவை எடுத்தே? பிரசாந்த் அப்படி என்ன உனக்குப் பிடிக்காத விஷயத்தைப் பண்ணிட்டான். அவனை மாதிரி நல்லவங்களை இந்த உலகத்தில் பூதக்கண்ணாடி வைச்சுத் தேடித் தான் கண்டுபிடிக்கணும்" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் சாந்தனு.

" ஆரம்பிச்சுட்டயா நீயும்? அம்மாவோட கச்சேரியே இன்னும் முடியலை! நடுவில நீ வேற இன்னொரு தனி ஆவர்த்தனமா? உன்னோட அருமை நண்பன் தான் நம்ப அப்பாவைக் கொன்னதுன்னு எனக்கு வேணா முன்னாலே தெரியாது? உனக்குத் தெரியாம இருக்க முடியாதே? அந்த சமயத்தில் நீ இங்கே தானே இருந்தே?
என் கிட்ட ஏன் சொல்லலை. இப்போ நானே தெரிஞ்சுகிட்டேன். ஒரு கொலைகாரனோட என்னால குடும்பம் நடத்த முடியாது. என்னோட குழந்தையையும் அந்தக் கொலைகாரனோட நிழல் கூடப் படாமல் வளக்கப் போறேன். அதுக்குத் தான் இந்த டைவர்ஸ். நீயும் என் கிட்ட இந்த விஷயத்தை மறைச்சதுனால உன் மேலயும் எனக்கு வருத்தம் தான். கோபமும் கூட" என்று எகத்தாளமாகப் பேசிய பத்மினியின் அருகில் வந்த சாந்தனு, அவளைப் பளாரென்று அறைந்தான்.

" யாருடி கொலைகாரன்? யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லறே? அவன் இல்லை கொலைகாரன்! நான் தான் கொலைகாரன். அப்பா மேல காரை ஏத்தினது, அப்பாவைக் கொன்னது நான் தான். இப்போ என்னை என்ன பண்ணப் போறே? " என்று கத்திக் கொண்டே
பத்மினியைப் போட்டு உலுக்கினான் சாந்தனு. கோபம், அதனால் வந்த வெறி, சாந்தனுவின் உடலே நடுங்கியது.

" சாந்தனு, வேண்டாம், வேண்டாம், பழசைப் பேசாதே! உனக்காகத் தான் நானும் இத்தனை நாள் வாயைத் திறக்காம இருந்தேன். பிரசாந்த் வேற என் கிட்ட உண்மையை யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கி, என வாய்க்குப் பூட்டுப் போட்டுட்டான். அவ டைவர்ஸ் பண்ணட்டும். விட்டுத் தள்ளு. அவனோட வாழ்க்கையையே கடந்த சில நாட்களாக நரகமாக்கிட்டா உன் தங்கை. இனிமேலாவது அவன் நிம்மதியாக இருக்கட்டும் " என்று பேசியபடி காமாட்சி, சாந்தனுவின் அருகில் வந்து அவனுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்தாள்.

தன் காதில் விழுந்த சொற்களை ஜீரணிக்க முடியாமல் உறைந்து போய் நின்றாள் பத்மினி. ' என்ன நடக்குது இங்கே? இது என்ன புதுக்கதையா இருக்கு? நான் தான் தப்பு பண்ணிட்டேனா? ' பத்மினியின் மனம் கலங்கியது.

சாந்தனு தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து சத்தமாக அழ ஆரம்பித்தான்.
" வேண்டான்டா சாந்தனு, உன் எதிரில பழைய விஷயம் எதுவும் பேசக்கூடாதுன்னு நினைச்சேன். இந்தப் படுபாவி, தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கிட்டது மட்டுமில்லாமல் உன்னோடதையும் சேர்த்து இல்லை நாசமாக்கப் பாக்கறா. ராக்ஷஸி, ராக்ஷஸி, சாந்தனுவுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை மன்னிக்க மாட்டேன் பத்மினி. சாந்தனு, அமைதியா இரு. நீ எந்தத் தப்பும் செய்யலை. அதை மறக்கப் பாரு" என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னவெல்லாமோ பிதற்ற ஆரம்பித்தாள் காமாட்சி.

" உண்மையில் என்னம்மா நடந்தது? எதையுமே என் கிட்ட விவரமாச் சொல்லாம, என்னையே குத்தம் சொன்னா என்ன அர்த்தம்? " என்று காமாட்சியின் அருகில் சென்று தன்மையாகக் கேட்டாள் பத்மினி.

" இரு, எல்லாத்தையும் சொல்லறேன். சொல்லித் தொலைக்கறேன். இனிமேல் உன் கிட்ட மறைச்சு எந்தப் பிரயோஜனமும் இல்லை. நம்ம வீட்டில் ஒரு முறை எரிமலை வெடிச்சுப் பெரிய நாசத்தை உண்டு பண்ணிட்டுப் போச்சு. இப்போ நீ பண்ணின காரியத்தால சுனாமி வந்து நம்ம குடும்பத்தை மோதியிருக்கு. என்னல்லாம் ஆகப் போகுதோ? " என்று சொன்னவள், சாந்தனுவை உள்ளே அழைத்துச் சென்று மாத்திரை ஒன்றை எடுத்துக் கொடுத்து விழுங்க வைத்தாள்.

" கொஞ்ச நேரம் கண்ணை மூடிட்டுப் படுத்துக்கோ. நான் உனக்கு சாப்பிட எதையாவது பண்ணி எடுத்துட்டு வரேன். ரொம்ப யோசிச்சு உன்னை நீயே வருத்திக்காதே" என்று சொல்லி அவனைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள். பத்மினியை ஒருமுறை முறைத்துப் பார்த்து விட்டு சமையலறைக்குள் போனாள் காமாட்சி.

காமாட்சி வேலைகளை முடித்து விட்டு வந்து தன்னிடம் பேசுவாளென்று குழம்பிய மனதுடன் காத்துக் கொண்டிருந்தாள் பத்மினி.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
நினைச்சேன் சாந்தனுக்காகத்தான் இவன் பழிய ஏத்துண்டு இருப்பான்னு, ஓட்ட தெரியாம காரை ஓட்டி அப்பா மேல மோதிட்டானா?
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
சினேகிதனுக்காக தான் பலி ஏத்துகிட்டனே 🙄🙄🙄🙄🙄
 
Top Bottom