• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆகாயம் - 2

kanjeevaram

New member
Joined
Mar 17, 2025
Messages
7
ஆகாயம் - 2

வேலைக்கு சென்ற ஜானகிக்கு மனசே சரியே இல்லை. தன் கணவனை பற்றிய எண்ணங்களே அவளை முழுதாக ஆக்கிரமித்து இருந்தது.

ராமநாதன் எந்த வகையில் எந்த விதத்தில் எந்த கோணத்தில் அவரை பார்க்க சேர்க்க? மணம் முடிந்த இந்த பதினெட்டு வருட வாழ்வில் நாதனின் மேல் ஒரு அளப்பரியா பிரியம் பாசம் எல்லாம் உண்டு ஜானகிக்கு, நாதனுக்கு நேசமும் பாசமும் ஏன் காதலும் கூட ஜானகியிடம் உண்டு, ஆனால் இருவரும் அதை வெளிக்காட்டி கொள்ளும் ரகமில்லை.

நாதன் ஒரு சிறு குறிப்பு வரைக என்று சொன்னால் நாலு வரிகளில் அவரை அவரின் வாழ்வை சொல்லி விடலாம்.

கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து படித்து வேலைக்கு சென்று தான் இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு உதவி, மணமான நாள் முதல் மனைவியை நேசிக்கும் ஒரு ஜீவன்.

அளவான உயரத்தில் அதற்கு ஏற்ற எடையுடன் ஐம்பது வயதை நெருங்கும் ராமநாதன் ஒரு நல்ல தந்தையும் கூட.

முதல் அக்கா லதா மணம் முடித்து சென்ற பின் இரண்டாவது அக்கா தேவி திருமணம் சொந்த வீட்டில் நடக்க வேண்டும் என்று வீட்டு கடன் பெற்று மதுரைக்கு பக்கத்தில் தன் சொந்த ஊர் நாகமலை புதுக்கோட்டையில் இருப்பத்து மூன்று வயதில் வீட்டை கட்டி பெற்ற அனுபவம் பத்தாது என்று, அடுத்து அக்காவின் திருமணமும் நடத்தி, நாதனுக்கு வீட்டை கட்டி கல்யாணமும் முடித்த ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது.
நாதனின் பெற்றோர் இப்போது இல்லை, இருந்த வரை நாதனுக்கோ ஜானகிக்கோ பெரிய அளவில் பிரச்சினைகள் கொடுத்தது இல்லை. நாதன் வங்கியில் இருந்துகொண்டே தேர்வேழுதி மாற்றாலும் பதவி உயர்வும் கொண்டு சென்னை வந்த பின் தான், பொருளாதார விதத்தில் சற்று முன்னால் வந்தது.

நாதனுக்கு முப்பது வயதில் இருபத்து மூன்று வயதான திருச்சியை பூர்விகமா கொண்ட ஜானகியை பெண் பார்த்து விட்டு சென்ற பின்பு தான், கல்யாணம் பற்றி கனவுகளும் எதிர் பார்ப்பும்.

கல்யாணம் முடித்து ஜானகி ராமநாதனுடன் வாழ்வை தொடங்கிய இடம், கிண்டி அருகில் உள்ள ஆலந்தூர் என்ற இடத்தில் உள்ள ஒரு அப்பார்மென்ட்.

ராமநாதனின் தந்தை ஒரு தனியார் நிறுவன குமாஸ்தா பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின், சென்னையில் தன் மகனோடு தான் தாயும் தந்தையும். அவர்களின் இறுதி காலம் வரை சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவர்களை பார்த்து கொண்டது ஜானகியும் நாதனும் தான்.

கல்யாணம் முடிந்த பதினைத்து வருட வாழ்க்கை மாமனார் மாமியாருடன் தான் ஜானகிக்கு. தன் பெண் குழந்தை தர்ஷினியை வளர்த்ததில் பெரிய பங்கு அவர்களுக்கு உண்டு என்பதால் ஜானகிக்கு எப்போதும் மாமியார் மாமனார் மேல் ஒரு மரியாதை உண்டு, பாசமும் சிறிது உண்டு.

ஜானகி - தர்ஷி குழந்தையாய் இருக்கும் போது நிம்மதியாய் வேலைக்கு சென்று வர அவர்களின் இருப்பும் ஒரு காரணம்.

நாதனும் ஜானகியும் சேர்ந்து கடன் வாங்கி கட்டிய வீடு தான் இப்போது இருக்கும் அவர்களின் வீடு சென்னை கிரோமேப்பேட்டையில், வீட்டை பதியும் போது

"ஏன் ஜானகி பெயரில்!?" என்ற கேள்விகள் எழுந்த போது நாதன் சொன்னது

"அம்மா அவ வீடும்மா!!!"

இந்த மாறி நாதனிடம் இருந்து வரும் சிறு சிறு வார்த்தைகள் ஜானகியை குளிரவைக்க போதுமானது.

ஜானகி எப்போதும் ரகசியமாய் நினைத்து சிரிப்பது, அவளின் முதல் இரவின் நினைவுகள் தான்,
திருச்சியில் அவளின் வீட்டில் அப்படி ஒரு செட்டப் அவள் எதிர்பாராதது.

அவள் நினைத்தது எல்லாம் படத்தில் தான் இப்படி எல்லாம் பண்ணுவாங்க என்று, ஆனால் இப்படி நிஜத்திலும் பூ அலங்காரம் எல்லாம் அவள் எதிர் பார்க்க வில்லை.

நலங்கு எல்லாம் வைத்து நாதனையும் ஜானகியையும் அறைக்கு அனுப்பிய பின், முதல் தனிமை இருவரும் அப்படி ஒன்றும் பேசிக்கொண்டது இல்லை, ஓரிரு முறை போனில் பேசியது உண்டு.

இருவருக்கும் வெட்கம் தயக்கம் எல்லாம் இருந்து ஒரு ரம்மியமான சூழல்.

"நாளைக்கு நாகமலை போயிட்டு அப்படியே லதா அக்கா வீடு மதுரை தான் அங்கேயும் போய்ட்டு வரணும் அம்மா சொன்னாங்க"

"ம்ம் சரிங்க" பெயர் சொல்லியோ செல்ல பெயர் சொல்லியோ அழைக்கும் பழக்கம் இல்லை அவர்களுக்குள். வாங்க போங்க ஏங்க என்னங்க தான் இன்று வரை.

"நீ இப்போ வேலைக்கு போறது நல்ல கம்பெனி, எப்படி காலேஜ் பிளேஸ்மெண்ட்ஸ்? இல்ல நீயே தேடுனியா"

"காலேஜ் தான் "

"ம்ம்ம் நல்லா படிக்குற பொண்ணு - ஜாப்லையும் நல்லா பண்ணு பெரிய இடம் போகணும்"

இதை எல்லாம் கேட்டவுடன் இவருக்கு இன்னைக்கு முதல் இரவு ஞாபகம் இருக்குமா? என்ற கேள்வி தான் ஜானகிக்கு.

ஜானகியின் முக பவானையை பார்த்து சிரித்து

"ஜானகி எங்க சின்ன அக்கா கல்யாணம் முடிஞ்சு, இந்த மாறி ரூம் அனுப்பிச்ச உடனே லைட் அனைச்சுட்டாங்க சொல்லி அடுத்த நாள் எல்லாம் ஒரே கிண்டல் கேலி அதான் எதோ ஒளறிக்கிட்டு இருக்கேன் "

"ஓ" இதற்கு என்ன பதில் சொல்வது என்று ஜானகிக்கு புரியவில்லை.

"இந்த பூ செட்டப் எல்லாம் உனக்கு தெரியதா?!, ரூம் வந்ததும் நீ பார்த்து ஷாக்கான நான் பார்த்தேன்"

"ஆமா நான் படத்துல தான் இப்படி எல்லாம் நினைச்சேன்" தன் முகத்தின் வியப்பை பார்த்தே இதை கண்டுகொண்டாரே ஜானகிக்கு வியப்பும் களிப்பும்.

"நானும் அப்படி தான் நினைச்சேன், ஆனா லதா அக்கா கல்யாணம் ஒட்டி கல்யாணம் அதன் சடங்கு எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்"

"ம்ம்ம் - பால் குடிப்போமா அங்க பிளாஸ்க்ல இருக்கு- அது உடனே குடிக்க சொன்னாங்க"

"ம்ம் சரி வா"

இருவரும் பால் அருந்தி பின்பும் எதோ கல்லூரி கதைகள் எல்லாம் பேசி கொண்டு ஒரு அரைமணி கடந்த பின் நாதனின் சிறு அணைப்பில் தொடங்கியது அவர்களின் நாதம்.

மணம் முடித்த இரண்டு வருடத்தில் நாதம் தேய்ந்து தேய்ந்து பின் நின்றே போனது.

இப்படி கலவையான உணர்வுகளுடன் தன் பணியிடத்தில் அமர்ந்து இருந்த ஜானகிக்கு, தன் பணியின் தனக்கு அடுத்த நிலையில் உள்ள சரவணம்

"மேடம் என்ன பலத்த யோசனை ஆல் ஒகே?!"

"ஒண்ணுமில்லை சரவணன், இன்னைக்கு மதியம் நான் ஆப், எதாவது வேலை வந்தா கால் பண்ணு "

"ஒகே மேம், காபி போலாம் வரீங்களா?"

காபி குடித்து, பின் மதியம் வீடு வந்த ஜானகிக்கு, ஜுரத்துடன் கட்டிலில் படுத்து இருந்த நாதனை பார்க்கவும், மனதில் அலை அலையான எண்ணங்கள்.

"சாயங்காலம் ஹாஸ்பிடல் போகலாம்- இப்போ ரசம் வைக்கவா, மதியம் சாப்பிடல போலவே?"

"சரி ஜானு ரசம் வை சாப்பிட்டு படுக்கறேன், சாயங்காலம் டாக்டர் பார்க்கலாம்"

ஒண்ணுமே தெரியாத ஒண்ணுமே பண்ணாத பாப்பா மாறி படுத்து இருக்குறத பாரு, நேத்து நான் முத்தம் கொடுக்க சொன்னனேனா, இதுல கட்டி வேற புடிக்க வராரு! மனதிற்குள் எண்ணங்களின் புயல் ஒயவில்லை. நாம ஏங்கி நிக்கும் போது எல்லாம் கண்டுக்காம போய்ட்டு காலம் போன காலத்துல, இனி இப்படி பண்ணட்டும் என்று , ஏதேதோ எண்ணத்துடன் உப்பு போடாத ஒரு ரசத்தை வைத்து நாதனுக்கு சாதம் பரிமாறினாள் ஜானகி.

உண்டு முடித்து நாதன் எழும்பியதும் ரசத்தை குடிக்கலாம் என்று வாயில் வைத்த ஜானகி

"ஏங்க உப்பு இல்லன்னு கூடவா சொல்ல மாட்டீங்க"

சிறு சிரிப்புடன்

"ரொம்ப சோர்வா இருக்கு ஜானு நான் போய் படுக்குறேன் "

யோவ் உன்னை எல்லாம்... ஜானிகியின் மைண்ட் வாய்ஸ்.

தொடரும்...


பிழை இருப்பின் மன்னித்து.

அதை கமெண்ட் செய்யவும்.

தங்களின் ஆதரவை எதிர்நோக்கும்...














 

Author: kanjeevaram
Article Title: ஆகாயம் - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
44
இரு இதயமும்
இயல்பாக சென்று
இனிய நாதமாக
இருந்த தாம்பத்தியம்....
இல்லறம் துறவறமாக
இவர்களுக்கு ஆனது ஏனோ ????
 
Top Bottom