• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ ! 13

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
20
ழைத்த கவிதை நீ ! 13


ண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சான் ஃபிரான்ஸிஸ்கோ செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த சௌமித்ரன், விமான பணிப்பெண் வந்து டேக் ஆஃபின்போது மொபைலை அணைத்து வைக்கச் சொல்லும் வரை மனைவியிடமிருந்து ஏதேனும் தகவல் வருகிறதா என்று பார்த்திருந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

‘ஒரு பிறந்தநாள் வாழ்த்துக்குக் கூடவா தகுதியில்லாமல் போய்விட்டேன் நான்?”

எந்த அந்யோன்யத்திற்காக, ஒவ்வொரு செயலையும் பகிர்ந்து, இணைந்து செய்வதற்காக, இருவருக்குமான சுதந்திரத்திற்காக, தனிப்பட்ட நேரத்திற்காக என குழந்தை வேண்டாமென முடிவுசெய்து, ‘couple goals’ஐ கடைபிடித்து ருக்மிணியுடன் லட்சியத் தம்பதியாக வாழ ஆசைப்பட்டானோ, அதன் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடுமோ என இந்த ஒரு மாதத்தில் எண்ணிலடங்கா முறை மனம் கலங்கியதில், இப்போதும் நீர்ப்படலம் பரவ, கண்கள் இரண்டும் காந்துவதைப்போல் எரியவும் கண்களை மூடிக்கொண்டான்.

‘உண்மையை சொன்னது தவறா?’

‘பிரேர்ணா பற்றி சொல்லாமல் விட்டது தப்புதான். ஆனால், சத்தியமாக திட்டமிட்டு, பொய் சொல்லி மினியிடம் எதையும் நான் மறைக்கவில்லை. மறைக்கும் எண்ணமும் எனக்கு இல்லை’

‘ஸ்குவாஷ் டோர்னமென்ட்டின் ஃபைனல்ஸுக்கு வரச்சொல்லி எத்தனை தடவை சொன்னேன். என் மனதில் தப்பான எண்ணமிருந்தால் கூப்பிடுவேனா?’

‘அந்தப் பெண் ப்ரேர்ணா என் பேச்சை, விளையாட்டை ரசித்து, ஸ்லாகித்ததில் கற்பூரவல்லி மிட்டாயை கடித்தது போன்று பரவிய புத்துணர்வு எனக்குப் பிடித்திருந்தது’’

‘அவள் கொடகுக்கு போய் வந்தது போக மீதமிருந்த நாட்களில் க்ளப்பில் சந்திக்க நேர்ந்தால் கற்றுக் கொள்ள என்னோடு இணைந்து விளையாடினாள்’

‘என் நினைவு சரியாக இருந்தால், பிரேர்ணா க்ளப்புக்கு வந்த முதல் வாரத்தில், அவளது பெயரே தெரியாதபோது, ஸ்குவாஷ் கோர்ட்டில் நின்றபடி ராக்கெட்டிலேயே பந்து படாது திணறியதைப் பற்றி மினியிடம் சொன்னதாக ஞாபகம். இப்போதும் அவளுக்கு மினியைப் போல் விளையாட வரவில்லைதான் ’

‘ஸ்குவாஷ் மற்ற விளையாட்டுகள் போல்அல்ல. ரப்பரால் செய்யப்பட்ட கனமான பந்து எழும்பவே எழும்பாது. நம் கை பலத்தைக் கொண்டுதான் விளையாட வேண்டும். வெகு விரைவில் சோர்வடையச் செய்யும். பந்தை சுவற்றில் அடித்துதான் விளையாட வேண்டும் என்பதால், தனியாகவே கூட பயிற்சி செய்யலாம்’

‘என்னிடம் கற்றுத் தரும்படி கேட்டவளுக்கு ஸ்குவாஷ் விளையாட்டில் எனக்குத் தெரிந்த சில யுத்திகளை, டிப்ஸ்களை கற்றுத் தந்தேன், அவ்வளவே’

‘இரண்டு முறை வெளியில் சந்தித்திருக்கிறோம். முதல் சந்திப்பு திட்டமிடாத ஒன்று. இரண்டாவது அவள் லிவர்பூல் திரும்பிச் செல்வதால், அவளே அழைத்தது’

‘எல்லாமே பொதுவான பேச்சுகள்தான். பிரேர்ணாவே சொல்லுமளவுக்கு மினியைப் பற்றிதான் அவளிடம் அதிகம் பேசியிருக்கறேன்’

‘குழந்தை, ஆயா, அம்மா சகிதம் க்ளப்புக்கு வருபவளிடம், கணவர் பற்றிக் கேட்க, தெளிவாக “எனக்கு காதல், கல்யாணம், என்றாலே அலர்ஜி, இது டோனர் மூலம் பிறந்த குழந்தை” என்றவளிடம் நான் என்ன பேசிவிட முடியும்?’

‘ ருக்மிணி மறுநாளே ஊருக்குப் போனதுல இந்த ரேகா படுத்தற பாடு… நான் என்னமோ பொம்பளை பொறுக்கி மாதிரி, கையைப் புடிச்சு இழுத்த மாதிரி என் முனீம்மாவுக்கே தோணாத, அவளே கேக்காத கேள்வியெல்லாம் என்னைக் கேக்கறா’

‘பெங்களூர்லயும், யுஎஸ்லயும் நான் பார்க்காத பெண்களா, இல்ல, ஒரு பொண்ணு வந்து பேசின உடனே தலைகுப்புற காதல்ல விழ நான் என்ன டீன் ஏஜ் பையனா?’

‘எனக்குன்னு தனிப்பட்ட முறைல மதிப்பு, சுயமரியாதை, ஒழுக்கம் எதுவும் கிடையாதா?’

‘என் மினி கிட்ட கிடைக்காத எதை நான் வெளில தேடப் போறேன்? அந்த ஃப்ரெண்ட்ஷிப்ல ஒரு ஃப்ரெஷ் ஃபீல் கிடைச்சது, அதைத் தாண்டி நான் எதையும் யோசிக்கலை’

‘ஃபிஸிக்கலா கெட்டு போனாதான் தப்பா, மனசால கெட்டுப் போறது மட்டும் சரியா, இது ருக்மிணிக்கு நீ செய்யற துரோகம் இல்லையா? அந்தப் பொண்ணு ஊருக்குப் போகலைன்னா என்ன ஆகி இருக்கும், …. ப்ளா,ப்ளா, ப்ளா…’

‘ஒண்ணும் ஆகி இருக்காது. என் பார்வை, பேச்சுல கண்ணியம் இல்லாதபோனா, பிரேர்ணா எப்பவோ போடான்னு போய் இருப்பா’

‘எத்தனை கேள்வி, இதுல காட்டுத் தனமான கற்பனை வேற. ரேகா சொல்றா, நான் ஹிப்போக்ரெட்டாம். அந்தப் பொண்ணையும் ஏமாத்தினேனாம். தேவைதான் எனக்கு’

‘அவ குழந்தைக்கு டோனர் யார்னு என்னைக் கேட்டா… நான் என்னத்தைக் கண்டேன்? முதல்ல அவளுக்கே தெரியுமோ, தெரியாதோ?’

‘என்னை சந்தேகப் படறியா ரேக்ஸ், அந்தப் பொண்ணையே நாலு மாசமாதான் தெரியும். அவ குழந்தைக்கு
ரெண்டு வயசு’

‘பொண்டாட்டி கூடவே குழந்தை பெத்துக்க வேணாம்னு இருக்கறவன் நான், எம் மேல உனக்கு சந்தேகமா? பேசாம நீ டாக்டர் வேலையை விட்டுட்டு சீரியலுக்கு கதை எழுதப் போகலாம். கல்லா நிறையும்’

சௌமித்ரனுக்கு வந்த கோபத்துக்கு ரேகாவிடம் பயங்கரமாகக் கத்திவிட்டான்.

‘நல்ல வேளை, ரேகா ஸ்கூல் டேஸ் மாதிரி அம்மா கிட்ட போய் எதையும் ஒப்பிக்கலை’

‘இது மத்திம வயசுல வர சலனமான்னு (Middle age blues) பல முறை யோசிச்சதுல, அது உல்லாசம் இல்ல, வெறும் உற்சாகம்தான்னு தெளிவா புரிஞ்சதாலதான், என்னால பிரேர்ணாவோட இயல்பா பேச முடிஞ்சது’

“ஸர், எனி ட்ரிங்ஸ், ப்ளீஸ்” என்ற ஹோஸ்டஸின் குரலில் சௌமித்ரன் விழிகளைத் திறக்க, அதன் சிவப்பில் மிரண்டு “ஆர் யூ நாட் வெல் ஸர்?”

மூன்று நாட்களுக்கு மேலாகப் பொட்டுத் தூக்கம் இல்லாததில், தூங்கினால் தேவலாம் போல இருக்க, அப்பெண்ணிடம் முறுவலித்தவன் “டோன்ட் ஒர்ரி, ஐ’ம் ஆல்ரைட். ஒன் லார்ஜ் விஸ்கி வித் சோடா அண்ட் ஐஸ்’

கடந்த மாதம் முழுவதும் ஆர்க்கிட் பூக்கள் அமோகமாக விளையும் காலம் என்பதால், சௌமித்ரன் அதிகாலை முதல் அந்தி சாயும் வரை நந்திவனிலேயே கழித்தான். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஆர்டர்கள், அடுத்த சீஸனுக்கான உரமிடுதல், செடிகளை மாற்றி நடுதல் என பிஸியாக இருந்தவன், ஒரு நாள் இரவு அங்கேயே தங்கிவிட்டான்.

வாசலில் இருந்த இரு செக்யூரிட்டிகளைத் தவிர, அவனைத் தவிர யாருமில்லாது அத்தனை பெரிய தோட்டத்தின் ‘ஹோ’ வென்ற வெறுமையும் தனிமையும் தாக்க,
இதற்கு முன் ஒரு மழைநாளில் ருக்மிணியுடன் க்ளாஸ் ஹவுஸில் இரவைக் கழித்த நினைவு இம்சித்ததில் இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்குச் சென்றான்.

எப்படி, என்ன செய்து மனைவியை சமாதானம் செய்வதென்று புரியாமல் திரிந்தவனை, வீட்டுக்கு வரும்படி அழைத்துப் பார்த்து சோர்ந்து, சௌமித்ரனுக்குப் பிடித்த சமையலுடன் வந்த மைதிலி வீட்டையும் மகனையும் பார்த்துப் பதறித்தான் போனார்.

“ஏன்டா, நீ என்ன சவலைப் பிள்ளையா, இப்படி கண்ணு காது விட்டுக் கெடக்க?”

“ருக்கு ஆஃபீஸ் வேலையா அமெரிக்கா போனதுக்காடா இந்த தேவதாஸ் வேஷம்?”

“ருக்கு இந்த மூஞ்சிய வீடியோல பாத்தா யார் நீன்னு கேக்கப் போறா, முதல்ல ஷேவ் பண்ணு போ”

‘அவதான் என் கூட பேசறதே அபூர்வமா இருக்கு, இதுல தப்பு செஞ்ச நான் வீடியோ காலுக்கெல்லாம் ஆசைப்படலாமா?’

“மித்ரா, என்னடா யோசிக்கற?”

“நத்திங் மா”

“போய் சலூனுக்குப் போய்ட்டு க்ளீனா குளிச்சுட்டு வா, சாப்பிடலாம்”

“ம்ப்ச், தாடி எடுக்க மூட் இல்லை மா, விடேன்”

மகனைக் கூர்ந்து பார்த்தவர் “என்னவோ நீ சரியில்லடா மித்ரா” என்ற மைதிலி, ருக்மிணியை அழைத்தவர், மொபைலை ஸ்பீக்கரில் போட்டு, தட்டில் உணவைப் பரிமாறிக் கொண்டே எடுத்த எடுப்பில் “உனக்கும் மித்ரனுக்கும் ஏதாவது சண்டையா ருக்கு, அவன் ஏன் இப்டி சாமியாராட்டம் இருக்கான், வீடு குப்பைக் காடா கிடக்கு?”

‘யாரு, சின்னப் பொண்ணோட பேசினாலே இளமையா ஃபீல் பண்ற உங்க புள்ளை சாமியாரா?’

“ருக்கூ..”

“ஹான்… அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா. ஆர்க்கிட் ஹார்வெஸ்ட் சீஸன்னால வேலை அதிகம் இருக்கும். சங்கீதா வரும்போது வீட்ல இருந்திருக்க மாட்டார். வேற எதுவுமில்லை. நீங்க விடுங்கோம்மா, பார்த்துக்கலாம்” என அவருக்கேற்ற பதிலைக் கூறினாள்.

ருக்மிணியின் குரலைக் கேட்டு, உண்பதை நிறுத்தி விட்டு, அசையாது அமர்ந்திருந்த மகனைப் பார்த்தவர் “சீக்கிரமா திரும்பி வரப் பாரு ருக்கு. அவனை இப்டி தனியா விட்டுட்டு ஓடி ஓடி சம்பாதிச்சு யாருக்கு சேர்த்து வைக்கணும்?”

‘இருக்கற பஞ்சயத்து போறாதுன்னு, இந்த அம்மா வேற’ என்றெண்ணிய
சௌமித்ரன் “அம்மாஆஆ…” என குரலை உயர்த்தி ஆட்சேபிக்க, ருக்மிணி, “இங்க மணி காலம்பற எட்டரைம்மா. நான் ஆஃபீஸ் கிளம்பணும். அப்புறமா பேசறேன்” என காலை கட் செய்தாள்.

கொண்டு போய் வீட்டில் விட்டவனிடம், மைதிலி “பாவம்டா ருக்கு, எதா இருந்தாலும் பேசி, சமாதானம் பண்ணு மித்ரா. அவ குரலே சரியில்லை” என,

நந்தியின் மத்தளத்தைக் கேட்டவன் போல், தலையை உருட்டிய சௌமித்ரன், இன்னும் சிறிது நேரம் இருந்தால், மைதிலி கோர்த்து வாங்கி, பிரச்சனையின் நுனியைப் பிடித்துவிடுவார் என்ற பயத்தில், அங்கிருந்து வேகமாகக் கிளம்பி விட்டான்.

இருப்பினும் அம்மாவும் அக்காவும் விடாது புலம்பிக் கொண்டேதான் இருந்தனர்.

ஐந்து நாள்களுக்கு முன் தமிழ் வருடப் பிறப்பு என வரச் சொன்னவர் “இந்நேரம் ஸ்கூல் போற வயசுல ஒரு குழந்தை இருந்திருந்தா , ருக்குவால கவலை இல்லாம இப்படி மாசக்கணக்குல ஊருக்கு போக முடியுமா?” என்றார்.

ரேகாவும் குமாரும் குழந்தைகளுடன் வந்திருக்க, குமாரின் குற்றம் சாட்டும், கண்டனப் பார்வையை உணர்ந்தான் சௌமித்ரன்.

ருக்மிணி கலிஃபோர்னியா சென்றது முதல் ஏனோ ஹாலில்தான் உறங்குகிறான்.

படுக்கையை விரித்து விட்டு, எதையெதையோ நினைத்தபடி இருட்டில் படுத்திருந்தவனுக்கு, அன்று எதையோ மறந்ததாக, எதிலிருந்தோ விடுபட்டதாக தோன்றியது என்ன என்பது நினைவுக்கு வர, திடும்மென எழுந்தவன், பரபரப்பாக மொபைலை ஆராய்ந்தான்.

Gosh!, முனீம்மா, ஏன்டீ எதுவுமே சொல்ல மாட்டேங்கற, கூப்பிட்டு திட்டவாது எங்கிட்ட பேசேன்’

நேரம் ஆக, ஆக மனைவியை நேரில் காணும் உந்துதல் அதிகரிக்க, அடுத்த நாள் இரவு கிடைத்த டிக்கெட்டுக்கு ப்ரீமியம் அதிகம் கொடுத்து, விமானம் ஏறிவிட்டான்.

இரண்டாவது ரவுண்டின் பாதியிலேயே மூளையின் முடிச்சுகள் அவிழ்ந்து தளர்ந்ததில், கிளாஸை கொடுத்துவிட்டுக் கண்கள் செருக, உறங்கிப்போனான்.

தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியே வந்த சௌமித்ரன், லேப் டாப் இருந்த பை மற்றும் கேபின் பேகேஜைத் தவிர வேறு லக்கேஜ் இல்லாததால், நேரே க்ரீன் சேனலை நோக்கி நடந்தபடி, மொபைலை ஃபிளைட் மோடில் இருந்து மாற்றினான்.

ஃப்ளைட்டில் wi-fi உபயோகிக்காததில், ருக்மிணியிடமிருந்து வந்திருந்த இருபதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகளை இப்போதுதான் பார்த்தவனுக்குப் புன்னகையும் பரவசமும்.

‘பர்த் டே விஷ் பண்ணதான் கால் பண்ணி இருக்கா’

க்ளியரன்ஸிற்கான வரிசையில் ஊர்ந்து கொண்டே புலனத்திற்குச் சென்றவன், ‘கால் இம்மீடியட்லி’ என்ற செய்தியைப் பார்த்துப் பதற, அதிகாரி அழைத்தார்.

ஒரு ஜீன்ஸ், ரெண்டு பேன்ட், இரண்டு சட்டை, இரண்டு டீ ஷர்ட், நாலு செட் உள்ளாடைகளில் சுவாரஸ்யமின்றி உடனடியாக க்ரீன் சிக்னல் காட்டவும், வெளியே வந்து ருக்மிணியை அழைக்க, அவசரமாக “அண்ணா, நான் சௌம்யா பேசறேன்” என்றாள், இளங்கோவின் மனைவி.

குழப்பத்துடன் நன் மொபைலை ஒருமுறை விலக்கி வைத்துப் பார்ப்பதற்குள், ‘ஹலோ, அண்ணா’ வென பல முறை அழைத்துவிட்டாள் சௌம்யா.

“அண்ணா, மூணு நாளா ருக்மிணிக்கு காய்ச்சல் இருந்திருக்கு போல. நேத்துதான் சொன்னா. நேத்து ஈவினிங் வந்து பார்த்துட்டு ஹாஸ்பிடல்ல…” என்றவளை இடைமறித்து,

“எந்த ஹாஸ்பிடல்?”

“சவுத் வேலி க்ளினிக்”

“மினி இப்ப எப்படி இருக்கா?”

“ஜூரம் குறைஞ்சிருக்கு. இப்ப டாக்டரோட ட்ரீட்மென்ட் ரூம்ல இருக்கா. நான் நைட் வீட்டுக்குப் போயிட்டு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இப்பதான் வந்தேன். .…” என்றாள் தயக்கத்துடன்.

“தேங்க் யூ ஸோ….”

“அண்ணா, டாக்டர் கூப்பிடறாங்க, நான் பேசறேன்” என வைத்து விட்டாள்.

வந்து நின்ற கேபில் ஏறியவன், ஓட்டுனரிடம் “சவுத் வேலி ஹாஸ்பிடல், சான் ஓஸே”

*****************

ரிஸப்ஷனில் “ருக்மிணி சௌமித்ரன்?”

"யூ ஆர்…”

“ஐ’ம் சௌமித்ரன், ஹர் ஹஸ்பண்ட்” தன் அடையாள அட்டையைக் காட்டினான்.

“எமர்ஜென்ஸி ரூம் 4”

கதவைத் தட்ட, “ஹாய் சௌம்யா, ஹௌ ஆர் யூ, இளங்கோ, பசங்கள்லாம் எப்படி இருக்காங்க?” என்றபடி எதிரே வந்து நின்றவனைக் கண்டு, சௌம்யா அதிர்ந்துதான் போனாள்.

பின்னே, இந்தியாவில் இருப்பதாக நினைத்தவன், இப்படித் திடீரென பிரஸன்னமானால்?

சௌமித்ரனைக் கண்ட சௌம்யாவின் முகத்தில் ஆரம்ப அதிர்ச்சியைத் தாண்டி நிம்மதி பரவுவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

பக்கத்தில்தான் என்றாலும், அமெரிக்க வாழ்வின் பரபரப்பில் மூன்று சின்னச் சின்ன குழந்தைகளை வைத்துக் கொண்டு தினமும் ஃப்ரெமான்டில் (Fremont) இருந்து வருவது எளிதல்லவே?

சௌமித்ரனின் பார்வை தன்னைத் தாண்டி பெட்டில் படுத்திருந்த மனைவியிடம் நிலைப்பதைக் கண்ட சௌம்யா, விலகி வழிவிட்டாள்.

பைகளை ஓரமாக வைத்தவன், கைகளை சானிடைஸரில் சுத்தம் செய்துகொண்டு, ருக்மிணியை நெருங்கி, கேன்யூலா இல்லாத கையைப் பிடித்து “முனீம்மா” என, அரை மயக்கத்தில் இருந்து கண்விழித்துக் கணவனைப் பார்த்த ருக்மிணியின் விரிந்த விழிகளில் அதிர்ச்சி, ஆசுவாஸம், ஆயாஸம், அழுகை எல்லாம் ஒரு சேர வந்தது. எழ முற்பட்டவளைத் தடுத்தான்.

அருகில் வந்த சௌம்யா “மினி, அண்ணா வந்தது ஒரு சடன் சர்ப்ரைஸ். ஆனா, நிம்மதியா இருக்கு. இதுல லஞ்ச் இருக்கு. அண்ணா, நான் கிளம்பட்டுமா, இல்ல நீங்க வீட்டுக்குப் போய்ட்டு வரீங்களா?”

“இல்லம்மா, நான் இங்கயே இருக்கேன். தேங்க் யூ ஸோ மச் சௌம்யா. இளங்கோ கிட்டயும் சொல்லு. நாம மீட் பண்ணலாம்”

ருக்மிணி “தேங்க் யூ சௌம்யா” என்றாள், பலவீனமாக.

கதவை மூடிவிட்டு வந்தவன் குனிந்து அவள் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட, இறுகினாள்.

பொருட்படுத்தாது, அருகில் அமர்ந்தவனின் “என்னாச்சுடா?” வில் உடைந்து அழுத ருக்மிணி சௌமித்ரனுக்கு முற்றிலும் புதிது.

“முனீஸ், அழாதடீ, திரும்பவும் ஜுரம் வரப்போறது”

ஞமஞமத்த குரலில் “நீ எப்டி சௌ இங்க வந்த?” என்றவள், அவளே “உனக்குத் தெரியுமா சௌ?” என மீண்டும் அழுகையைத் தொடர்ந்தாள்.

குழம்பிய சௌமித்ரன் “என்னடா?”

“...”

“மினி?”

“அபார்ஷன், அறுவது நாள்”

“காட்!”

இதற்குத்தானே ஓடி வந்தான்!

பாதுகாப்பான நாட்கள் இல்லை என்றதை அவள் சொன்னதைப் பொருட்படுத்தாது, கவச குண்டலங்களின் நினைவின்றிப் போக, இயற்கை சுகம் தந்த விடுதலையை உணர்ந்ததுமே, ஒருகால் கரு உருவாகி இருக்குமோ, கோபத்தில் தன்னுடன் சரிவர பேசாதவள், என்ன செய்வதென தனியே இருந்து திணறுவாளோ, என்ற யூகத்தில்தானே அவன் கிளம்பி வந்ததே!

“பரவாயில்லடா, நாமதான் குழந்தை வேண்டாம்னு…”

“நான் உணரவே இல்ல சௌ… ” என கலங்கியவளை சமாளிக்க சௌமித்ரனுக்கு விழி பிதுங்கியது.

இரண்டு நாள் ஜூர வேகத்தில் இருந்தவள், உடல் வலி, வயிற்று வலி தாங்க முடியாது போக, சௌம்யாவை அழைத்து விட்டாள். காய்ச்சல் என சிகிச்சை தர, அதிகாலை நாலரை மணி போல், அதீத உதிரப் போக்கு தொடங்கவும்தான், அறுபது நாள் ஆனதே நினைவுக்கு வந்தது.

மருத்துவரிடம் சொல்ல, உடனடியாக டி & சி செய்து சுத்தம் செய்தனர்.

“அழறதை நிறுத்துமா”

மதியம் மருந்தின் உதவியால் உறங்கினாள், மாலையில் ட்ரிப்ஸை நீக்கி, மருந்து, மாத்திரை, அறிவுரைகளுடன் டிஸ்சார்ஜ் செய்தனர்.

வீடு வந்து மீண்டும் புலம்பி அழதபடி, தன் மேல் சாய்ந்து இறுக அணைத்துக் கொண்டவளை “விடுடா, முனீஸ்” என்று அணைத்து நெற்றியில் முத்தமிட்டவனை “கையை எடு சௌ, எனக்கு இன்னும் உன் மேல கோபம் போகலை. நான்தான் உன்னை ஹக் பண்ணிப்பேன் , நீ என்னைத் தொடக் கூடாது” என, சௌமித்ரன் செய்வதறியாது திணறினான்.

தன் முடிவாக இருந்தபோது சரியெனப் பட்ட கருக்கலைப்பு, இப்போது தானாகக் கரைந்ததை ருக்மிணியால் ஏற்க முடியவில்லை. குழந்தை விஷயத்தில் முடிவு தங்களுடையதாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்கை உடைத்துவிட, அவளது ஏக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் வடிகாலாக சௌமித்ரனை வைத்து செய்தாள் மனைவி.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ ! 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
136
அதான் கடவுள் கொடுக்கும் வரம் தான் குழந்தை, வேணும்னு தவமிருந்தாலும் கிடைக்காது
 
Joined
Jun 19, 2024
Messages
16
😍😍😍

அவளா கருக்கலைப்பு செய்த போது வராத ஏக்கமும், ஏமாற்றமும் இயற்கையே செய்த போது வருதோ? 😒😒

 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
36
புடவையும் வேட்டியும் சேர்ந்தபோவ சொர்க்கம் தெரிந்தது அதோட பலனை ஏற்க மனசுல இடமில்லை.
இப்ப இயற்கையே உதைக்கும் போது வலிக்குது.
முட்டாள் முதலை முனீஸ்!
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
14
நீங்களா வேண்டாம்னு சொல்லலாம் ஆனா கடவுளே தட்டி பறிக்கும் போது தான் அருமை புரியுது
 
Top Bottom