• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 8

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
நினைவெல்லாம் நீயே-8

அதை கேட்டதுமே மிகுந்த சந்தோஷம் அடைந்த தன்ராஜ் "நெனச்சேன்...அவனா தான் இருக்கும்னு நான் நினைச்சது சரியா போச்சு..நான் எப்டி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கறியா.." என கேட்க

தலையாட்டிய பிரபுவை பார்த்து "என் பொண்டாட்டிக்கு முன்னாடியே என்னை சரியா புரிஞ்சுக்கிட்டவன் அவன் தான் யா..எத்தனை வருஷத்துல நட்பு தெரியுமா..நான் ரெண்டு பேரும் ஒரே ஊரு.."

"எனக்கு சின்ன வயசுலேயே ரொம்ப கோவம் வரும்..அப்பல்லாம் வாய்க்கு வந்ததை சொல்லி திட்டுவேன்.. நான் திட்டற வரைக்கும் பொறுமையா இருந்துட்டு அப்பறமா பொறுமையா என் கோவம் தப்புனு புரிய வெப்பான்.."

"இப்ப நீ நான் கோவத்துல கத்தும் போது அமைதியா இருக்கும் போதே அவன் தான் சொல்லி இருப்பான்னு ஊகிச்சது சரியா போச்சு.." என சின்ன குழந்தை போல சொல்லி குதூகலித்தார்.

"இப்ப என்ன பண்றதுனு நீ முடிவு எடுத்திருக்க.." என தன்ராஜ் பொறுமையாக கேட்க..

பிரபு "இன்னிக்கு ஷீட்டிங் பாக்க ரூபா மாதிரியே ஒரு பொண்ணை மணி கூப்பிட்டு வந்திருந்தான்..சார்..விசாரிச்சப்ப அது மனோகர் அண்ணனோட பொண்ணுனு தெரிஞ்சது.."

"அந்த பொண்ணை வெச்சு மீதி போர்ஷனை முடிச்சிடலாம்னா...பணம் போடற முதலாளி தான் அதுக்கு முடிவு எடுக்க வேண்டியவர்னு பராங்குசம் ஐயா என் கிட்ட எடுத்து சொல்லி உங்க கிட்ட தெளிவா, நிதானமா நடந்ததை எல்லாம் சொல்ல சொன்னாங்க..அவர் சொன்ன மாதிரியே உங்க கிட்ட சொல்லிட்டேன்.." என்றார்.

"சரி.. நீ நாளைக்கு ஷீட்டிங் முடிஞ்சதும் உனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல..அதனால அடுத்த வாரம் வரைக்கும் ஷீட்டிங் இல்லனு சொல்லிடு..நாம ஒரு வாரத்துக்குள்ள ஒரு நல்ல முடிவு எடுத்துடலாம்.."

"ரூபாவை பத்தி உனக்கு வேற என்ன தகவல் தெரியும்.."

"சார்..அந்த பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்தியது என்னோட படத்துல தான்..ரொம்ப பணிவான ஆளு..மரியாதை தெரிஞ்ச பொண்ணு.."

"ஆனா அந்த பொண்ணோட அம்மா அப்டி இல்ல சார்..அவங்களுக்கு ஆரம்பத்துலேயே பணத்தாசை அதிகம்..எப்ப சம்பளம் பேசினாலும் போதாதுனு தகராறு செய்வாங்க..இப்ப கொஞ்சம் நாளா அவங்க ஹிந்தி படத்துல ரூபாவை நடிக்க வெக்க முயற்சி செய்யறாங்கனு கேள்விப்பட்டேன்.."

"ஒரு வேளை அங்க எதாவது ஆஃபர் வந்திருக்கானா தெரியல..அதனால தான் நம்ம படத்துல நடிக்காம தகராறு பண்றாங்களானும் எனக்கு புரியல சார்.." என பிரபு குழப்பமாக பதில் சொன்னார்

அவர் சொன்னதை கேட்ட தன்ராஜ் "பராங்குசம் சொன்ன மாதிரி இங்க இருக்கிற சென்டிமென்ட் நெனச்சாலே கலக்கமா தான் இருக்கு.. ஏதாவது பிரச்சனை வந்து என் பேரனோட படத்துக்கு எந்த பாதிப்பும் வர கூடாது.."


"எதுக்கும் நீ ஹிந்தி சினிமாக்கு ஆர்டிஸ்ட் சப்ளை பண்ற கோ-ஆர்டினேட்டர் ராஜேந்திரனை அவனோட அசிஸ்டெண்ட்டோட நாளைக்கு காலைல பதினொரு மணிக்கு அவன் ப்ரீயா இருந்தா.. ஆஃபீஸ்க்கு வந்து என்னை பாக்க சொல்லு.." என சொன்னதும் "சரி..சார்..அவசியம் சொல்றேன்..நீங்க தூங்க போற நேரத்துல உங்களை தொல்லை செஞ்சுட்டேன்..அவசியமா இருக்கவே தான் உங்களை தொந்தரவு பண்ண வேண்டியதா போச்சு..என்னை மன்னிச்சிடுங்க சார்..நான் கிளம்பறேன்.." என சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

தன் வீட்டுக்கு போனதுமே ராஜேந்திரனுக்கு தன்ராஜ் அவனை சந்திக்க விரும்புவதாகவும் மறுநாள் காலை பதினொரு மணி வருமாறு சொல்லி இருப்பதாகவும், அவனுக்கு சந்திக்க அந்த நேரம் வேற எதுவும் வேலை குறுக்கிடாமல் சரியாக இருக்குமா என கேட்டு விட்டு..

காலை எட்டு மணிக்கு இது சம்பந்தமாக அவனை அழைப்பதாக சொல்லி மேசேஜ் அனுப்பி விட்டு பிரச்சினை தீர்ந்த சந்தோஷத்தில் படுத்தவர் அடுத்த நிமிடமே தூங்கி போனார்.


மறுநாள் காலை 7.30 மணிக்கே பிரபுவை அழைத்த ராஜேந்திரன் அவருடைய நலத்தை விசாரித்து விட்டு தான் பதினொரு மணிக்கு நிச்சயம் தன்ராஜை போய் பார்ப்பதாக சொல்லி விட்டு போனை வைத்தான்.

உடனே தன்ராஜையும் அழைத்து விஷயத்தை சொல்ல..அவரும் ராஜேந்திரனிடம் பேசி விட்டு தகவல் சொல்வதாக சொல்லி போன் காலை கட் செய்தார்


சொன்னது போல பதினொரு மணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே தன்ராஜின் ஆஃபீஸ்க்கு தன் அசிஸ்டெண்டோடு சென்று சேர்ந்தவன் தன்ராஜை சந்திப்பதற்க்காக காத்திருக்க ஆரம்பித்தான்

பதினொரு மணி ஆனதுமே தன்ராஜ் அவனை அழைக்க அவருடைய அறைக்கு போய் அவரை வணங்கி அவர் கை காட்டிய சேரில் உட்கார்ந்து கொண்டான்

அவர் அவனிடம் மெல்லிய குரலில் தற்போது தங்களது பிரச்சினை சொல்லியவர் அதற்கு அவனால் ஏதாவது தீர்வு தர முடியுமா என கேட்டார்

அவனும் சில நிமிடங்கள் யோசித்து விட்டு "சார்..இது ரொம்ப காம்ப்ளிகேடட் விஷயம்..இதுல நாம எது பண்ணாலும் பிரச்சினை அதிகமா தான் ஆகும்..."

"ஒரு வேளை இந்த விஷயம் தெரிஞ்சு ரூபா போய் சேம்பர்ல கம்ப்ளையின்ட் பண்ணா..அதுக்கு பிறகு படமே ப்ளாக் ஆகிடுமே..சார்.."

"இப்ப எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஒரே வழி தான் இருக்கு..ஹிந்தி சினிமால உங்க பேரன் போலவே அங்கயும் ஒரு வாரிசு நடிகர் புதுசா நடிக்க வர போறாரு.."

"அவங்க இப்ப அங்க நடிக்கற பழைய ஆளுங்க இல்லாம..ப்ரெஷ்ஷா.. பளிச்சுனு முகம் இருக்கிற மாதிரி ஆளை தான் ஹீரோயினா நடிக்க வெக்க தேடிட்டு இருக்காங்க.."


"ரூபாக்கு எப்பவுமே ஹிந்தில நடிக்கணும்னு ஆசை அதிகம் சார்..அவங்க நிறைய தடவை என்னை பாத்து நடிக்க சான்ஸ் கேட்டிருக்காங்க.."

"நான் ஒண்ணு பண்றேன்..அந்த படத்தோட பி. ஆர்.ஓ எனக்கு ரொம்ப ப்ரெண்ட் சார்..அவர் கிட்ட பேசிட்டு உங்களுக்கு இன்னிக்கு ஈவ்னிங்குள்ள இல்ல நாளைக்கு காலைல நல்ல பதிலா சொல்றேன் சார்.." என சொல்ல அவரும்

"சரி..பா..நீங்க விசாரிச்சு..விஷயம் எனக்கு சாதகமா வர்ற மாதிரி முடிக்க முயற்சி பண்ணுங்க.." என சொல்லி எழ..அவர்களுக்கு எழுந்து அவரிடமிருந்து விடை பெற்று கிளம்பினார்கள்.

தன்ராஜ் மேல் இருந்த மரியாதையால் உடனேவே அவன் போன் செய்து.. கோ- ஆர்டினேட்டர் வர்மாவிடம் பேச...அவனும் அவரின் நிலையை கேட்டு மறுநாள் காலை வரை டைம் வாங்கி கொண்டு..அவன் சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்து கேட்க..அவர்கள் ஹீரோயின் இன்னும் கிடைக்கவில்லை..இன்னும் தேடி கொண்டு இருப்பதாக சொல்ல..ரூபாவை பற்றி எடுத்து சொல்லி ராஜேந்திரன் அனுப்பி இருந்த அவளுடைய போட்டோஸை காட்ட..அவர்களுக்கு ரூபாவை பார்த்த உடனே பிடித்து போய் விட்டது.

அடுத்ததடுத்து விஷயங்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் வேகமாக நடந்தது. வர்மா ரூபாவின் அம்மாவை போனில் அழைத்து ஹிந்தியில் எடுக்க போகும் புது படம் பற்றியும் அதில் ரூபா ஹீரோயினாக நடிப்பாளா..அவள் ஒத்துக்கொண்டால் அவர்களுக்கு தொடர்ந்து ஆறு மாச கால்ஷீட் ஒதுக்க வேண்டியதாக இருக்கும்...அவர்களின் டெர்ம்ஸ் என்ன என்பதை விளக்க சொல்லி கேட்க அதில் பெரிதும் மனம் மகிழ்ந்த ரூபாவின் அம்மா விலாசினி "எல்லாம் பேசிக்கலாம்..நீங்க இதுவரைக்கும் எதிர்பார்த்துட்டு இருந்த பெரிய ஆஃபரை தர போறீங்க..அதுக்கு மொதல்ல ரொம்ப தேங்க்ஸ்...நீங்க எங்க வர சொல்றீங்கனாலும் நான் அங்க என் பொண்ணோட வரேன் சார்.."என சொல்லி போனை வைத்தார். ரூபாவையும் அழைத்து அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.

அம்மா சொன்னதை கேட்ட ரூபா "சரி மா..இப்ப நான் நடிக்கற பிரபு சார் படத்தை எப்டி திடீர்னு ட்ராப் பண்றதுனு சொல்லு.."என்க

விலாசினியோ "நான் சொல்றதை கேளு...பிரபு வெறும் டைரக்டர் தான்.. ஆனா அந்த படத்தோட முழு பொறுப்பும் ப்ரொட்டியுசர் தன்ராஜ் கிட்ட தான் இருக்கு..அதனால நீ என்ன பண்ற..அவர் கிட்ட பேச நேரம் வாங்கு..மீதி எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.." என முடித்தார்


அம்மாவின் வார்த்தைகளால் ஆச்சரியம் அடைந்தவள் எப்டி இவங்க வீட்டுல இருந்துக்கிட்டு இவ்ளோ நுணுக்கமா விஷயங்களை தெரிஞ்சுக்கறாங்களோ என யோசித்தபடி தன் போனை எடுத்து பிரபுவை அழைத்து தான் உடனடியாக தன்ராஜை பார்க்க வேண்டும் என சொல்லி அவருடைய அப்பாயின்ட்மென்ட் வாங்கி தருமாறு கேட்டாள்.

பிரபு எப்போதுமே எதிலும் அதிகம் ஈடுபாடு காட்டாத ஆள் என்பதால் எதை பற்றியும் அவளை கேட்காமல் "சரி மா..நான் சார் கிட்ட பேசிட்டு உனக்கு போன் பண்றேன்.." என சொல்லி போனை கட் செய்தார். (தொடரும்)
 
Top Bottom